ஆன்மீகம் இந்து சமயம்

ஞாயிறு ஏன் வாரத்தின் முதல் நாளாக உள்ளது தெரியுமா?…

உலகத்தின் இயக்கமே சூரியனின் இயக்கத்தைக் கொண்டு தான் நடக்கிறது. சூரியோதயத்திற்கு முன் காலையில் விழித்து அன்றாடக் கடமைகளை செய்யவேண்டும். மனிதர்கள் மட்டுமல்லாமல் எல்லா உயிர்களும் சூரியோதயத்தின் போது கண்விழிக்கின்றன.

ஓரறிவு முதல் ஆறறிவு வரை எல்லா உயிர்களுக்கும் ஜீவாதாரமாக சூரியன் திகழ்கிறது. அதனால், வாரத்தின் முதல்நாளை சூரியனுக்குரிய நாளாக ஏற்படுத்தினர். தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் முதல் நூலான சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தின் தொடக்கமே ஞாயிறு போற்றுதும் என்றே தொடங்குகிறது. மற்ற இயற்கை வழிபாடுகளான நிலா, மழை போன்ற தெய்வங்கள் சூரியனுக்கு பின்னரே குறிக்கப்படுகின்றன.

சூரிய வழிபாடு :

ஆதிநாள் முதலே அகிலம் முழுவதும் சூரிய வழிபாடு நடந்து கொண்டுதான் இருக்கிறது. சூரியனே உலகின் முதல்வன் என்கின்றன வேதங்கள். கண்களால் காணமுடியும் தெய்வம் சூரியனே என்று அவனையே முன்னிலைப்படுத்தி மந்திரங்கள் பலவும் ரிக்வேதத்தில் சொல்லப்பட்டுள்ளன.

உலகத்தின் இருளைப் போக்குவதற்கான ஜோதியினை உருவாக்குபவன் சூரியனே என்கிறது யஜுர் வேதம்.

உலகம் கதிரவனை நம்பியே இருப்பதாலும், அதையே சுற்றி வருவதாலும், கால மாற்றங்கள் சூரியனை வைத்தே நடக்கிறது என்பதாலும், இந்திய விண்வெளி கணக்கீடுகள் ஞாயிறை வைத்து ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமையை வாரத்தின் முதல் நாளாக வைத்துள்ளனர்.

சூரிய பகவான் :

சூரியன் தான் மிகப்பெரிய நட்சத்திரம். இந்த பிரபஞ்சத்துக்கே ஆற்றலைத் தரக்கூடியவர் இவர்தான். இவரை வழிபடுபவர்களுக்கு நிச்சயம் போதுமான ஆற்றலைத் தந்து வெற்றி பெறச் செய்வார் சூரிய பகவான்.

சூரிய விரத விதிமுறைகள் :

விரதம் இருப்பவர்கள் காலையில் சூரிய உதயத்துக்கு முன் எழுந்து பிரம்ம முகூர்த்தத்தில் நீராட வேண்டும்.

பூஜை செய்யும் இடத்தை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

அர்ச்சனைக்கு ஒரு தட்டை தயார் செய்து, அதில், கொஞ்சம் அரிசி, குங்குமம், சிவப்பு நிற மலர்கள், ஏதேனும் ஒரு பழம் ஆகியவற்றை வைத்துக் கொள்ள வேண்டும்.

விளக்கை ஏற்றிக் கொண்டு, அதை சூரியன் உதிக்கும் திசை நோக்கி வைத்து, ஒரு சிறிய சொம்பில் தண்ணீரை எடுத்து சூரிய பகவானை நோக்கி வழிபட்டுக் கொண்டே, அந்த அர்ச்சனைத் தட்டின் மீது தீர்த்தம் போல தெளிக்க வேண்டும்.

பூஜை முடிந்தவுடன் நீங்கள் சாப்பிட வேண்டியது ஏதேனும் இனிப்பு வகையாக இருக்க வேண்டும். குறிப்பாக, வெல்லம் சேர்த்து செய்யப்பட்ட இனிப்பை சாப்பிடலாம். அதன்பின் மாலை வரை தண்ணீர், பால் தவிர வேறு எதுவும் சாப்பிடக்கூடாது.

காலை முதல் மாலை வரை சாப்பிடாமல் விரதம் இருந்துவிட்டு, மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக, சாப்பிட்டு விட வேண்டும். ஒருவேளை சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக சாப்பிடவில்லை என்றால், கட்டாயம் அன்றைய நாள் முழுக்க சாப்பிடக்கூடாது. அடுத்த நாள் காலை சூரிய உதயத்துக்குப் பின்னர் தான் சாப்பிட வேண்டும்.

பலன்கள் :

சூரிய விரதம் மேற்கொள்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, ஆயுள் நீடிக்கும்.

கொடிய நோய்கள் ஏதும் அண்டாது.

முகத்தில் ஒரு வசீகரம் உண்டாகும்.

சமூகத்தில் பிறர் மதிக்கின்ற சூழ்நிலை ஏற்படும்.

பொருளாதார வளர்ச்சி உண்டாகும்.

துஷ்ட சக்திகள், செய்வினை மாந்திரீகம் போன்றவை சூரிய விரதம் இருப்பவர்களை அண்டாது.

Recent posts

பழைய ஏற்பாட்டின் அடிப்படைச் நம்பிக்கைகள்

1. மோசேயின் பிறப்பும் அழைப்பும் யோசேப்பு மரித்தபின்பு, அவருடைய சந்ததியினரான இஸ்ரவேலர் எகிப்தில் பெருகினர். புதிய பார்வோன் இஸ்ரவேலரைப் பார்த்துப் பயந்து, அவர்களை அடிமைகளாக்கி, கடின வேலைகளைச்...
Thamil Paarvai

தமிழ் நாகரிகத்தின் அழியாச் சின்னம்

சங்கு வெறும் கடல்வாழ் உயிரினத்தின் ஓடு மட்டும் அல்ல; அது தமிழ் அடையாளங்களில் ஒன்று. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர் கலாசாரம், மொழி, சமயம் மற்றும் அன்றாட...
Thamil Paarvai

விண்ணைத் தொடும் விரல்கள்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் இறையியல் வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தைப் பெறுவது ஜெபமாலை (Rosary) ஆகும். இது வெறும் கோர்வையான மணிகள் அல்ல; இது ஒரு ஆன்மீக ஆயுதம்,...
Thamil Paarvai

விண்ணின் விருந்து, மண்ணின் பலி

கத்தோலிக்க கிறிஸ்தவ வழிபாட்டின் மையமும் உச்சியுமாக விளங்குவது திருப்பலி (Holy Mass) ஆகும். இது வெறும் ஒரு சடங்கு அல்ல; இது கல்வாரியின் பலி மீண்டும் நிகழ்த்தப்படும்...
Thamil Paarvai

இரத்தத்தால் எழுதப்பட்ட வெற்றி

“மறைசாட்சி” என்ற சொல்லைக் கேட்டவுடன், நம்முள் ஒரு பயமும், அதே நேரத்தில் ஒரு பிரமிப்பும் உண்டாகிறது. ஒருவர் தனது உயிரையே இழக்கத் தயாராக இருக்கிறார் – எதற்காக?...
Thamil Paarvai

திருச்சபையின் அறிவுக் கதவுகள்

விசுவாசம் மட்டும் போதுமா? இறைவனை நேசிப்பது மட்டும் போதுமா? ஆம், போதும். ஆனால் இறைவன் நமக்குக் கொடுத்துள்ள அறிவு, பகுத்தறிவு, தர்க்கம் – இவற்றைப் பயன்படுத்தி, விசுவாசத்தை...
Thamil Paarvai

வயது ஒரு தடையல்ல, இதயம்தான்

“நான் இன்னும் சிறு குழந்தை. என்னால் பெரிய காரியங்கள் செய்ய முடியாது.” – இப்படி நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். ஏனெனில், திருச்சபையின் வரலாற்றில், 7...
Thamil Paarvai

குடும்பம் என்பது ஒரு மடம்

நாம் பெரும்பாலும் புனிதர்கள் என்றால், கன்னியாஸ்திரிகள், துறவிகள், குருக்கள், மறைசாட்சிகள் – இவர்களைத்தான் நினைத்துக் கொள்கிறோம். “ஒரு சாதாரண அப்பா, ஒரு சாதாரண அம்மா – குழந்தைகளைப்...
Thamil Paarvai

விண்ணின் விரல் பூமியில்

“அதிசயம்” (Miracle) என்ற சொல்லைக் கேட்டவுடன், பலருக்கு ஒரு சந்தேகம்: “இது உண்மையா? அல்லது கட்டுக்கதையா? விஞ்ஞானம் இவற்றை எப்படிப் பார்க்கிறது? இன்றும் அதிசயங்கள் நிகழ்கின்றனவா?” கத்தோலிக்க...
Thamil Paarvai

Leave a Comment