அழகு ஆரோக்கியம் பெண்கள் பாதுகாப்பு

முகம் கழுவும் போது இதெல்லாம் செய்யாதீங்க.

முகத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக்கொள்ள அடிக்கடி முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும். முகத்தை கழுவுவதன் மூலம் வறட்சியான சருமத்தைப் போக்க முடியும். ஆனால் முகத்தைக் கழுவும் போது நம்மை அறியாமல் செய்யும் தவறினால் முகப்பரு மற்றும் பல சருமப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே முகம் கழுவும் போது நீங்கள் கவனிக்க வேண்டியவைப் பற்றி இங்கு காணலாம்.

👉 முகத்தைக் கழுவுவதற்கு முன், கைகளை நன்கு சுத்தமாக தேய்த்துக் கழுவ வேண்டும். இல்லாவிட்டால், கைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகள் நேரடியாக முகத்தில்பட்டு முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற சருமப் பிரச்சனைகள் உண்டாகும்.

👉 முகத்தில் பருக்கள் வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் முகத்தைப் பலமுறை கழுவுங்கள். இதனால் முகத்தில் எண்ணெய் பசை நீக்கப்படுவதோடு, அழுக்குகளும் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமம் சுத்தமாக இருக்கும்.

👉 முகத்தை சிகப்பாக மாற்ற கிரீம்களை பயன்படுத்துவது நல்லதல்ல. அதற்கு மாற்றாக இயற்கை முறையில் தயாரித்த முகப்பு+ச்சுகளை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்.

👉 முகத்தைக் கழுவுவதற்கு மிகவும் சு+டான நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வெதுவெதுப்பான மற்றும் மிதமான குளிர்ச்சியுடன் இருக்கும் நீரைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் மிகவும் சு+டான நீரை முகத்திற்குப் பயன்படுத்தும் போது முகத்தில் உள்ள இரத்த நாளங்கள் மற்றும் நுண்குழாய்களில் இடைவெளி ஏற்படும். மேலும் சருமத்துளைகள் திறக்கப்பட்டு, எண்ணெய் அதிகம் சுரக்கப்பட்டு, முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

👉 முகத்தில் போட்டிருக்கும் மேக்கப்பை கலைக்காமல் முகத்தை கழுவினால் அழுக்குகள் சரும துளைகளில் தங்கி பல சருமப் பிரச்சனைகளை உண்டாக்கும்.

👉 முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை வெளியேற்ற, ஸ்கரப்பை பயன்படுத்தி கடுமையாக முகத்தைத் தேய்ப்பதைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் கடுமையாக முகத்தைத் தேய்ப்பதால், சருமத் துளைகள் திறக்கப்பட்டு, பருக்கள் வரக்கூடும். எனவே ஸ்கரப் செய்யும் போது மென்மையாக செய்ய வேண்டும்.

👉 தலைக்குக் குளித்தப் பின்னர் பலரும், கடைசியில் முகத்தை நீரால் கழுவமாட்டார்கள். எப்போதுமே தலைக்கு குளித்தால், இறுதியில் முகத்தை நீரால் கழுவ வேண்டும். இதனால் தலையில் இருந்த அழுக்குகள் மற்றும் பொடுகு முகத்தில் தங்கியிருப்பதைத் தடுத்து, சருமப் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

👉 முகத்தில் உள்ள அழுக்கை துடைக்க, துண்டைப் பயன்படுத்தி அழுத்தி துடைக்கக் கூடாது. அதற்குப் பதிலாக பருத்தியாலான துண்டினால் மென்மையாக துடைக்க வேண்டும்.

Recent posts

பெண்களின் உடல்நலப் புரிதலில் ஆழமான ஆய்வு

பெண்களின் உடலைப் பற்றிய ஆய்வு: தமிழ்நாட்டின் சூழலில் ஒரு முழுமையான பார்வை பெண்களின் உடல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் (Reproductive Health) என்பது ஒரு சிக்கலான, பன்முகத்...
Thamil Paarvai

உலகப் பெண்களின் உடல் நலம்: ஓர் உலகளாவிய ஆய்வு (2025-2026)

பெண்களின் உடல் நலம் என்பது உயிரியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சாரக் காரணிகளின் சிக்கலான இணைப்பாகும். உலகம் முழுவதும், பெண்கள் தனித்துவமான உடல்நல சவால்களை எதிர்கொள்கின்றனர் –...
Thamil Paarvai

கருவில் குழந்தையின் நிலைகள் (Fetal Malpresentation) – தெளிவான வழிகாட்டி

“ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் ஒரு அதிசயம். ஆனால், சில குழந்தைகள் தாயின் வயிற்றில் சரியான நிலையில் இருப்பதில்லை. அந்தச் சமயத்தில், அறிவும், விழிப்புணர்வும் தாய்க்கும், குழந்தைக்கும் பாதுகாப்பை...
Thamil Paarvai

நீரிழிவு நோய் எப்படி உண்டாகிறது? – உங்கள் நோய் பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்

“நீரிழிவு என்பது ஒரு நோய் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறையின் எச்சரிக்கை. ஆனால், அதைத் தெரிந்துகொண்டால், அதை வெல்லலாம்.” மெளனமாக நெருங்கும் கொடிய நோய் நீரிழிவு...
Thamil Paarvai

உடற்பயிற்சிக்கு சிறந்த நேரம்: காலையா, மாலையா?

உடற்பயிற்சி செய்வதற்கு சிறந்த நேரம் எது என்ற கேள்விக்கு ‘ஒரே ஒரு பதில்’ இல்லை. ஏனெனில், உங்கள் இலக்குகள், உடலின் உயிரியல் கடிகாரம் (circadian rhythm), மற்றும் உங்கள்...
Thamil Paarvai

தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகை நேரம்

நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம் போன்றவற்றின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் நீங்கள் குளிகை நேரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். யார் அந்த...
Thamil Paarvai

அடிக்கடி சளி தொல்லையா?

🤧 சளி பிடித்தல் என்பது பொதுவான பிரச்சனையாகும். சிலருக்கு கால சூழ்நிலையின் காரணமாகவோ, அருகில் இருப்பவருக்கு சளி பிடித்திருந்து நோய்த்தொற்று ஏற்பட்டாலோ சளி பிடிக்கலாம். ❄️ குளிர்காலம்...
Thamil Paarvai

பெரியோர்களை பார்த்தால் காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?

ஆசீர்வாதம் என்றால் என்ன? 🙇 ஆசீர்வாதம் என்பது நமது கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து வரும் ஒரு பழக்கம். விசேஷ தினங்கள் எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம்...
Thamil Paarvai

இரத்தத்தை சுத்தமாக்க உதவும் சில உணவு வகைகள்

எமது உடலில் ஓடும் இரத்தமானது உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்குவகிக்கிறது. இதனால் இரத்தத்தை சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் அவசியமாகிறது. உடலின் எல்லா செயற்பாடுகளுக்கும் இரத்தம் இன்றியமையாதது. இரத்தத்தில்...
Thamil Paarvai

Leave a Comment