சினிமா திரைவிமர்சனம்

தன் மக்களுடன் சேர்ந்து தொடங்குகிறார் தங்கலான். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா ? இல்லையா ?

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி, உலகளவில் வெளிவந்துள்ள திரைப்படம்  தங்கலான். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளிவந்துள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

18வது நாற்றாண்டில் நடப்பது போல தான் கதை நகர்கிறது. ஆங்கிலேயர்கள் கோலார் தங்க வயல்களில் இருக்கும் தங்கத்தை வெட்டி எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு தொடர் தோல்வியை சந்திக்கிறார்கள். இதனால் வட ஆற்காடு பகுதியில் உள்ள வேப்பூர் கிராமத்து மக்களின் உதவியை நாடுகிறார்கள்.

வேப்பூர் கிராம மக்களோ தங்களுக்கு சொந்தமான நிலத்தில் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்கள் அந்த கூட்டத்தில் இருக்கும் ஒருவர்தான் நாயகன் தங்கலான் (விக்ரம்). இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஊர் ஜமீன்தார்கள் அவர்களின் பயிர்களுக்கு தீ வைக்கிறார்கள். ஜமீன்தார்களின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலைபெற வேண்டும் என்றால் ஆங்கிலேயர்களுக்கு தங்கத்தை கண்டுபிடிக்க உதவுவதே ஒரே வழி என நினைத்து அதற்கான வேலைகளை தன் மக்களுடன் சேர்ந்து தொடங்குகிறார் தங்கலான். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா ? இல்லையா ? என்பதே மீதி கதை

தங்கலான் படத்தில் விக்ரமின் நடிப்பையும், படத்திற்கான அவரின் உழைப்பையும் பார்க்கும் போது இதுபோல நடிப்பை யாராவது வெளிப்படுத்த முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே ?. அந்த அளவிர்கு உயிரை கொடுத்து இப்படத்தில் நடித்துள்ளார். குறிப்பாக சண்டை காட்சிகளில் எல்லாம் மெய்சிலிர்க்கிறது. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி கிருஷ்ணன் என ஒவ்வொரு நடிகரும் தங்களது சிறந்த யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஓரிரு காட்சிகளில் வரும் துணை நடிகர்கள் கூட படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

அதிகாரம் கொண்டவர்கள் எப்படி ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்பை சுரண்டி அவர்களை அடிமையாக வைத்திருக்கிறார்கள் என்பதையும், அந்த கூட்டத்தில் இருக்கும் ஒருவன் தன் மக்களின் விடுதலைக்காக எவ்வாறு போராடுகிறான் என்பதை மையமாக வைத்து தன்னுடைய வழக்கமான பாணி இல்லாமல் யதார்த்தமிக்க உணர்வுப்பூர்வமான படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் ரஞ்சித். நிலம் பற்றிய அரசியல் குறித்து இப்படம் ஆழகமாக பேசியுள்ளது, அதை சமகாலத்திலும் நம்மால் பொருத்திப்பார்க்க முடிகிறது.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் மிரட்டலான பின்னணி இசையும், பாடல்களும் படத்தின் தரத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது. அவரின் திரைவாழ்வில் மைல்கல் படமாக இப்படம் அமைந்துள்ளது.

நம் முன்னோர்களின் வாழ்வியலை அழுத்தமாகவும், யதார்த்தமாகவும் பதிவு செய்துள்ளனர். கமர்சியல் படங்களுக்கு உண்டான அம்சங்கள் இப்படத்தில் குறைவாக இருந்தாலும் தங்கலானின் புது உலகம் நிச்சயம் உங்களை பிரமிப்பூட்டும். லைவ் சவுண்ட் முயற்சி சில இடங்களில் ரசிக்கவும், வியக்கவும் வைக்கிறது. கதாபாத்திரங்கள் பேசும் தமிழை சில இடங்களில் புரிந்துகொள்ள முடியவில்லை. படத்தின் முதல் பாதி சற்று மெதுவாகவே சென்றாலும் காட்சிகள் செல்ல செல்ல சுவாரசியம் தொற்றிக்கொள்கிறது. படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் வசனங்கள் பாராட்டுகளை பெறுகிறது.

படத்தில் காட்டப்படும் சிறுத்தை, மயில் பாம்பு போன்ற காட்சிகளை VFXல் உருவாக்கியுள்ளனர் அதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆடை வடிவமைப்பு கவனம் பெறுகிறது. படத்தின் ஒளிப்பதிவு தங்கலான் உலகத்தை யதார்த்தமாக காட்டுகிறது . எடிட்டிங் சிறப்பாக இருந்தாலும் திரைக்கதையை சற்று குழப்புகிறது. தங்கத்தை தேடி அலையும் காட்சிகள் ஆயிரத்தில் ஒருவன் படத்தை நினையூட்டுகிறது.

படத்தில் பிளஸ் :

நடிகர், நடிகைகளின் நடிப்பு

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை

சண்டை காட்சிகள்

வசனங்கள்

படத்தின் மைனஸ் :

எமோஷனல் காட்சிகள் ஒட்டவில்லை

VFX காட்சிகள்

சற்று குழப்பமான திரைக்கதை

 சில குறைபாடுகள் படத்தில் இருந்தாலும் இதுபோன்ற தரம் வாய்ந்த உண்மையான படைப்புகளுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுக்கவேண்டும். மொத்தத்தில் தங்கலான் தமிழ் சினிமாவின் ஓர் மகுடம்

Recent posts

‘ஹாய்’ திரைப்பட விமர்சனம்

கவின் – நயன்தாரா காதல் எப்படி இருக்கு? படம் ஃபீல் குட்டா? நடிப்பு: கவின், நயன்தாரா, பிரபு, ராதிகா சரத்குமார், பாக்யராஜ், சுஹாசினிஇயக்கம்: விஷ்ணு எடவன்இசை: ஜென்...
Thamil Paarvai

‘ஒன்ஸ் மோர்’ திரைப்பட விமர்சனம்: காதல் முக்கோணம்… ஆனால் ரசிக்க வைக்குமா?

நடிப்பு: அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல்இயக்கம்: விக்னேஷ் ஸ்ரீகாந்த்இசை: ஹேஷம் அப்துல் வஹாப்வெளியீடு: ஆகஸ்ட் 28, 2026 காதல் தோல்வி, பழைய காதல், புதிய...
Thamil Paarvai

அந்தோணி: திரைப் பார்வை “தனியாவே இருந்துடுவேனோன்னு தான் பயமா இருக்கு”

போருக்குப் பிந்தைய அமைதிச் சூழலில் மனிதர்களின் அகப் போராட்டத்தைப் பேச வந்திருக்கிறது ‘அந்தோணி’. இலங்கை மண்ணின் தற்போதைய யதார்த்தத்தையும், அங்கு வாழும் எளிய மக்களின் ‘மீட்டுருவாக்க’க் கனவுகளையும்...
Thamil Paarvai

பயமா? சோர்வா?..டிமான்ட்டி காலனி 2: திரை விமர்சனம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் சாம் சி.எஸ் இசையில் உருவாகியிருக்கும் படம் டிமான்ட்டி காலனி 2. இதன் முதல் பாகம்...
Thamil Paarvai

நிம்மதி என்பதே கிடையாதா? ராயன் விமர்சனம் 50வது படம் சூப்பரா? சொதப்பலா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் ராயன். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன்,...
Thamil Paarvai

இரண்டாவது சுதந்திரப் போரை’ எப்படி நடத்துகிறார் என்பதைப் பேசுகிறது `இந்தியன் பாகம் 2′.

நண்பர்களான சித்ரா அரவிந்தன் (சித்தார்த்), தம்பேஷ் (ஜெகன்), ஆர்த்தி (பிரியா பவானி சங்கர்), ஹரீஷ் (ரிஷி காந்த்) ஆகியோர் சமூகத்தில் நடக்கும் லஞ்சம், ஊழல் போன்றவற்றுக்கு எதிராக...
Thamil Paarvai

அடிமை எண்ணத்திற்கும் ஆதிக்க வர்க்கத்தினரை எதிர்த்தும் நடத்தப்படும் போர்

Captain Miller கேப்டன் மில்லர் நடிகர்கள்: தனுஷ், சிவ ராஜ்குமார் பிரியங்கா மோகன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்கம்: அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் டிரெய்லரில்...
Thamil Paarvai

பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்!

அயலான் விமர்சனம்.. பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்! நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு இசை: ஏ.ஆர். ரஹ்மான்...
Thamil Paarvai

Mission Chapter/ மிஷன் சாப்டர் 1

நடிகர்கள்: அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்கம்: ஏ.எல். விஜய் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி...
Thamil Paarvai

Leave a Comment