Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ நகரில் விழுந்ததாக வோபாஸ் (Voepass) விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான காணொளியில், அந்த விமானம் செங்குத்தாகச் சுழன்று வீழ்ந்ததைக் காண முடிகிறது.

ஏ.டி.ஆர் 72-500 எனும் அந்த விமானத்தில் 58 பயணிகள் மற்றும் விமான குழுவினர் நான்கு பேர் என 62 பேர் இருந்துள்ளனர். இந்த விபத்தில் யாரும் உயிர்பிழைக்கவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் துணை நிற்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என, சாவோ பாலோ மாநில ஆளுநர் டார்சிஸியோ கோம்ஸ் டீ ஃபிரெயிட்டாஸ் தெரிவித்துள்ளார்.

விமானத்தின் செயல்திறனைப் பதிவு செய்யும் கருவிகளை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ்-இத்தாலி விமான தயாரிப்பு நிறுவனமான ஏ.டி.ஆர் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாகத் தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்தது. ஆனால், அங்கிருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த விபத்தின்போது, குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரேயொரு வீடு மட்டும் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீடுகள் நிரம்பியுள்ள ஓரிடத்தின் பெரும்பகுதி நெருப்பு மற்றும் புகையால் சூழப்பட்டிருப்பதை வீடியோ பதிவுகள் காட்டுகின்றன.

காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

விமான கண்காணிப்பு இணையதளமான ஃபிளைட்ரேடார்24 (Flightradar24) காஸ்கேவலில் இருந்து அந்த விமானம் உள்ளூர் நேரப்படி 11:56க்கு புறப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. ஒன்றரை மணிநேரம் கழித்து விமானத்தில் இருந்து கடைசி சிக்னல் பெறப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அந்த விமானம், “முறையான பதிவு மற்றும் தகுதிச் சான்றிதழுடன் நல்ல நிலையில் இருந்ததாக”, பிரேசிலின் விமானப் போக்குவரத்து முகமை தெரிவித்துள்ளது.

நேரில் கண்டவர்கள் என்ன கூறுகின்றனர்?

விமானத்தில் இருந்த நான்கு விமானக் குழுவினர் உரிய உரிமம் மற்றும் முறையான தகுதிகளைப் பெற்றிருந்ததாக தெரிவித்துள்ளது.

கேஸ்கேவலில் உள்ள உவோபெக்கன் புற்றுநோய் மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், தங்களுடைய பயிற்சி மருத்துவர்கள் இருவரும் இந்த விமான விபத்தில் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது.

இந்த விமான விபத்து ஏற்பட்ட தருணத்தை அங்கிருந்த உள்ளூர் மக்கள் நேரில் கண்டனர்.

“விமானம் விழும் சத்தம் கேட்டதால், என்னுடைய வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன், அந்த விமானம் விழுந்த தருணத்தை நான் பார்த்தேன்,” என ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்த ஃபெலிப் மகால்ஹேஸ், அது தன்னை “அச்சுறுத்தியதாக” கூறினார்.

மற்றொரு குடியிருப்புவாசியான நதாலி சிகேரி சிஎன்என் பிரேசில் ஊடகத்திடம் கூறுகையில், தனக்கு “மிக அருகில் பலத்த சத்தம்” கேட்டபோது தான் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்ததாகவும் அது ட்ரோன் சத்தத்தை ஒத்திருந்ததாகவும், ஆனால் அதைவிட “இன்னும் பலமாக” இருந்ததாகவும் தெரிவித்தார்.

“நான் வீட்டின் பால்கனியில் இருந்து விமானம் சுழன்றதைப் பார்த்தேன். சில நொடிகளிலேயே அது விமானத்தின் வழக்கமான இயக்கம் இல்லை என்பதை உணர்ந்தேன்.”

கடந்த 2007ஆம் ஆண்டில் சாவோ பாலோவில் TAM எக்ஸ்பிரஸ் விமானம் நொறுங்கி விபத்து ஏற்பட்டதில் 199 பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு பிரேசிலில் நடக்கும் மோசமான விமான விபத்து இது.

பிரேசில் அதிபர் உரை நிகழ்த்திய நிகழ்ச்சி ஒன்றில், விமான விபத்தில் இறந்தவர்களுக்காக இரங்கல் தெரிவித்தார்.

“நான் மிக மோசமான செய்தியைத் தாங்க வேண்டியுள்ளது. எல்லோரும் எழுந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்,” என பார்வையாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த விமான விபத்து “மிகவும் வருந்தத்தக்க சம்பவம்” என அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். “இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் துணை நிற்பதாகவும்,” அவர் தெரிவித்துள்ளார்.

Recent posts

ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்

தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...
Thamil Paarvai

“சீற்றம், அதிர்ச்சி, திகைப்பு”: ஒன்டாரியோ ஏரியை ‘லேக் அமெரிக்கா’ என டிரம்ப் பெயர் மாற்றியதற்கு அரசியல் தலைவர்களின் பதில்

“ஏரியின் பெயர் வென்டாட் மொழியில் ‘ஒன்டாரியோ’ என்பதிலிருந்து வந்தது. அந்தப் பெயர் 400 ஆண்டுகளுக்கும் மேலானது, கனடா கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்திற்கு முந்தையது.” –...
Thamil Paarvai

கனடா மீதான டிரம்பின் புதிய வரிகள்: சட்டரீதியான சவால்களை சந்திக்குமா?

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய 50 சதவீத சுங்கவரியை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தியுள்ள 96 ஆண்டுகள் பழமையான சட்டம், சட்டரீதியான...
Thamil Paarvai

வெள்ளமா? மலையே உடைந்து விழுந்ததா? நேபாள பேரழிவு

“உள்நாட்டு சுனாமி போன்றது” – நேபாளத்தை தாக்கிய பேரழிவை விவரிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இவை. வெள்ளமா, மலை உடைந்து விழுந்ததா என்ற கேள்விக்கு பதில் இரண்டுமே. ஆனால்...
Thamil Paarvai

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம்.

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம் “நாம் தாக்கப்பட்டபோது, நாம் போரில் இருக்கிறோம்” – இந்தக் கடுமையான வார்த்தைகளுடன், கனடாவின் பிரதமர் மார்க்...
Thamil Paarvai

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

Leave a Comment