சினிமா சினிமா செய்திகள் திரைவிமர்சனம்

பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்!

அயலான் விமர்சனம்..

பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்!

நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு இசை: ஏ.ஆர். ரஹ்மான்

இயக்கம்: ஆர். ரவிக்குமார்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள அயலான் கடைசி நேரத்தில் பல ஆண்டு கால தடைகளை உடைத்துக் கொண்டு வெளியாகி விட்டது. இந்த பொங்கலுக்கு ஏலியன் உடன் வந்து குட்டி சுட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை சந்தோஷத்தில் ஆழ்த்த களமிறங்கி உள்ளார்

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், பானுப்பிரியா, ஷரத் கேல்கர் மற்றும் இஷா கோபிக்கர் என பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பேராசை பிடித்த பணக்காரர்கள் மேலும், மேலும் சொத்து சேர்க்க இந்த பூமியை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகின்றனர் என்றும் அதிலும், ஒருவர் ஒட்டுமொத்தமாக அழிக்கத் திட்டமிட்டு இருப்பதை வேற்று கிரகத்தில் இருந்து கவனிக்கும் ஒரு ஏலியன் பூமிக்கு வந்து அந்த வில்லனிடம் இருக்கும் பொருளை எடுக்க முயற்சி செய்கிறது. ஆனால், அந்த ஏலியனை அடைத்து வைத்து வில்லன் ஆராய்ச்சி என்கிற பெயரில் சித்ரவதை செய்ய அந்த ஏலியனுக்கு நம்ம ஹீரோ சிவகார்த்திகேயன் எப்படி உதவி செய்கிறார் என்பது தான் இந்த அயலான் படத்தின் கதை.

வில்லன் ஷரத் கேல்கர் ஆர்யன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது பேராசையால் 2030ல் இந்த பூமி அழிந்து விடும் என்பதை அறிந்து கொள்ளும் ஏலியன் பூமியை காப்பாற்ற புறப்பட்டு வருகிறது. ஹீரோ அர்ஜுன் (சிவகார்த்திகேயன்) உடன் விபத்து காரணமாக சந்திப்பு ஏற்படுகிறது. பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் நேசிக்கும் நபரான அர்ஜுன் தனது காதலுக்கு ஏலியனை பயன்படுத்துவது மற்றும் யோகி பாபு, கருணாகரன் உடன் இணைந்து காமெடி செய்வது என குழந்தைகளுக்கு பிடிக்கும் விதமாக கதை நகர்கிறது.

ஒரு கட்டத்திற்கு மேல் முக்கிய கதையை நோக்கி படம் நகரும் போதும் ரவிக்குமார் தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி கடைசி வரை போரடிக்காமல் பழைய டெம்பிளேட் கதையை பக்குவமாகவும் என்டர்டெயின் படமாகவும் கொடுத்திருக்கிறார்.

பிளஸ்: ரவிக்குமாரின் ஸ்க்ரீன் பிளே மேக்கிங் படத்தை அதிக இடங்களில் காப்பாற்றி விடுகிறது. சிவகார்த்திகேயனின் துடிப்பான நடிப்பும் துள்ளல் ஆட்டமும் காமெடி டைமிங்கும் இந்த படத்தை பார்க்க வைக்கும் படமாக மாற்றி உள்ளது. ஏலியனுக்கு சித்தார்த் குரல் கொடுத்த விதம் ஆர்யனாக வில்லன் ஷரத் நடித்திருப்பது என அனைத்துமே படத்திற்கு பக்க பலம் தான். யோகி பாபு மற்றும் கருணாகரன் சில இடங்களில் சிரிக்க வைக்கின்றனர். சிஜி காட்சிகள் எல்லாம் செம மாஸாக தரமாக உள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் பின்னணி இசை மற்றும் எமோஷனல் இடங்களில் ஸ்கோர் செய்யும் அளவுக்கு பாடல்களில் ஸ்கோர் செய்யாமல் விட்டது படத்திற்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. வழக்கமான டெம்பிளேட் கதை என்பதால் படம் எப்படி முடியும் என்பதும் யூகிக்கக் கூடிய வகையிலேயே படம் நகர்வது மைனஸ் தான்.

இந்த பொங்கலுக்கு ஜாலியாக ஒரு ஏலியன் படத்தை பார்க்கலாம்.

Recent posts

‘போராட்டம்’ விமர்சனம் (2026)

‘போராட்டம்’ விமர்சனம் (2026)மதிப்பீடு: 3.5/5 இயக்குநர்: ராஜ் சிவராஜ்நடிகர்கள்: றீகன் (பாஸ்கரன் றீகன்), நிவேதிகா ராசையாஇசை: பூவன் மதீசன்ஒளிப்பதிவு: ஏ.கே. கமல்வெளியீடு: அக்டோபர் 2, 2026 சுருக்கம்...
Thamil Paarvai

‘சிக்மா’ விமர்சனம் (2026)

‘சிக்மா’ விமர்சனம் (2026)மதிப்பீடு: 2/5 இயக்குநர்: ஜேசன் சஞ்சய்நடிகர்கள்: சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சம்பத் ராஜ், ராஜூ சுந்தரம்நீளம்: 145 நிமிடங்கள் சுருக்கம் தமிழ்நாடு முதலமைச்சரும்...
Thamil Paarvai

‘பத்தா’ விமர்சனம் (2026)

‘பத்தா’ விமர்சனம் (2026)மதிப்பீடு: 3.5/5 இயக்குநர்: பாலாஜி தரணீதரன்நடிகர்கள்: விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், சாய் பிருத்விராஜ், சஹஸ்ரா ஸ்ரீநீளம்: 145 நிமிடங்கள்வெளியீடு: அக்டோபர் 1, 2026...
Thamil Paarvai

‘ஏழு கடல் ஏழு மலை’ விமர்சனம் (2026)

‘ஏழு கடல் ஏழு மலை’ விமர்சனம் (2026)மதிப்பீடு: 2.5/5 இயக்குநர்: ராம்நடிகர்கள்: நிவின் பாலி, சூரி, அஞ்சலிஇசை: யுவன் சங்கர் ராஜாவெளியீடு: அக்டோபர் 1, 2026 சுருக்கம்...
Thamil Paarvai

‘அன்பில் அவன்’ விமர்சனம் (2026)

‘அன்பில் அவன்’ விமர்சனம் (2026)மதிப்பீடு: 2.5/5 இயக்குநர்: ஆர். கார்த்திகேயன்நடிகர்கள்: அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், கதிர்பாலு, மஹா டெல்லி கணேஷ், ரேவதிநீளம்: 157 நிமிடங்கள்வெளியீடு: அக்டோபர்...
Thamil Paarvai

ஒரு புதிய பாரம்பரியத்தின் தொடக்கம்

72-வது தேசிய திரைப்பட விருதுகள்: கேவாடியாவில் வரலாற்று விழா – முழு விவரம் இந்தியத் திரைப்படத் துறையின் மிக உயரிய அங்கீகாரமான தேசிய திரைப்பட விருதுகள், 72-வது...
Thamil Paarvai

‘ஹாய்’ திரைப்பட விமர்சனம்

கவின் – நயன்தாரா காதல் எப்படி இருக்கு? படம் ஃபீல் குட்டா? நடிப்பு: கவின், நயன்தாரா, பிரபு, ராதிகா சரத்குமார், பாக்யராஜ், சுஹாசினிஇயக்கம்: விஷ்ணு எடவன்இசை: ஜென்...
Thamil Paarvai

‘ஒன்ஸ் மோர்’ திரைப்பட விமர்சனம்: காதல் முக்கோணம்… ஆனால் ரசிக்க வைக்குமா?

நடிப்பு: அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல்இயக்கம்: விக்னேஷ் ஸ்ரீகாந்த்இசை: ஹேஷம் அப்துல் வஹாப்வெளியீடு: ஆகஸ்ட் 28, 2026 காதல் தோல்வி, பழைய காதல், புதிய...
Thamil Paarvai

அந்தோணி: திரைப் பார்வை “தனியாவே இருந்துடுவேனோன்னு தான் பயமா இருக்கு”

போருக்குப் பிந்தைய அமைதிச் சூழலில் மனிதர்களின் அகப் போராட்டத்தைப் பேச வந்திருக்கிறது ‘அந்தோணி’. இலங்கை மண்ணின் தற்போதைய யதார்த்தத்தையும், அங்கு வாழும் எளிய மக்களின் ‘மீட்டுருவாக்க’க் கனவுகளையும்...
Thamil Paarvai

Leave a Comment