Featured Uncategorized கனடா செய்திகள் புதிய செய்திகள்

அற்புதமான தலைவருக்கு நாம் மரியாதையோடு ‘பிரியாவிடை’ கொடுப்போம் .

வியாழக்கிழமை பெப்ரவரி 29ம் திகதி கனடாவில் எம் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பிரதமராக விளங்கிய பிரைன் மல்ரோனி அவர்கள் தனது 84 வயதில் காலமானார்.

இந்நிலையில் ஈழத்தமிழர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டிய ஒரு கனடிய அரசியல் தலைவருக்கு மரியாதையோடு ‘பிரியாவிடை’ கொடுப்போம்

இலங்கை  தமிழர்களுக்கு உரிமை உள்ளது

கொன்சர்வேர்ட்வ் கட்சியின் அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த பிரைன் மல்ரோனி மரணத்தை நாம் “ஈழத்தமிழர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டிய ஒரு கனடிய அரசியல் தலைவரது இறப்பு” என்று குறிப்பிடுகின்றோம்.

பிரையன் மல்ரோனி அவர்கள் 1984 முதல் 1993 வரை கனேடியப் பிரதமராகப் பணியாற்றினார், அவரது பணிக்காலத்தில் கனடாவின் கரையொன்றில் சட்டவிரோதமாக கப்பல் ஒன்றில் வந்திற ங்கினார்கள், நூற்றுக்கணக்கான எமது ஈழத்தமிழர்கள்.

அவர்களை அகதிக் கோரிக்கையாளர்களாக கனடிய அரசாங்கம் ஏற்றுக்கொள்வதா அன்றி அவர்களை ‘வந்த வழியே ‘ திருப்பி அனுப்புவதா? என்ற விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் “அவர்களை திருப்பி அனுப்புங்கள்’ என்று முழங்கினார். சக உறுப்பினர்களும் சத்தமிட்டுச் சொன்னார்கள்.

ஆளும் கட்சியின் சில உறுப்பினர்களுக்கும் அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களை அகதிக் கோரிக்கையாளர்களாக கனடிய அரசாங்கம் ஏற்றுககொள்ளக்கூடாது என்று ரகசியமாகத் தெரிவித்தார்கள்.

ஆனால் பிரதமர் மல்ரோனி அவர்கள் எழுந்து நின்று அமைதியாகச் சொன்னார்,

“கனடாவில் வாழும் மக்களில் பெருந்தொகையானவர்கள் இந்த நாட்டுக்கு அகதிகளாக வந்தவர்களே! எனவே நேற்று வந்த இவர்களுக்கும் அகதிக்கோரிக்கையை சமர்ப்பிக்க உரிமை உள்ளது. எனவே எமது அதிகாரிகள் அவர்களை உள்ளே அனுமதிக்கட்டும் .அவர்களை நாம் விசாரிப்போம். பின்னர் தீர்மானிப்போம்” என்றார்.

இந்த அற்புதமான தலைவருக்கு நாம் மரியாதையோடு ‘பிரியாவிடை’ கொடுப்போம் .

Recent posts

Grand Theft Auto VI Portable Game Desktop Direct Link 2026

📎 HASH: 50fbc2fe768e0237200107a7d0cfd890 | Updated: 2026-10-07 Verify CPU: multi-threading optimized CPU RAM: enough space for background apps and OS Disk...
admin

2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க சட்ட நிபுணர் நவநீதம் “நவி” பிள்ளை (Navanethem “Navi” Pillay) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது....
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, கனேடிய எழுத்தாளர் ஆன் கார்சன் (Anne Carson) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் கனடாவைச் சேர்ந்த இரண்டாவது இலக்கிய நோபல்...
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு, பிரெஞ்சு விஞ்ஞானி ஹென்றி பி. ககன் (Henri B. Kagan) மற்றும் ஜப்பானிய விஞ்ஞானி கென்சோ சோய் (Kenso...
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு, பெல்ஜியம்-அமெரிக்க துகள் இயற்பியலாளர் பிரான்சிஸ் ஹால்சன் (Francis Halzen) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் தென் துருவத்தில் உள்ள பனிக்கட்டியை...
Thamil Paarvai

உடலியல் அல்லது மருத்துவம் 2026 ஆம் ஆண்டு நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது: அமெரிக்காவின் கார்ல் டெய்செரோத் (Karl Deisseroth), ஜெர்மனியின் பீட்டர் ஹெகெமன் (Peter...
Thamil Paarvai

0x7969561b

0x7969561b
admin

கனடிய பொறியாளர்கள் உருவாக்கிய சொந்த EV

கனடா தனது சொந்த மின்சார வாகனத்தை (EV) உருவாக்கிவிட்டது. இதை அமெரிக்கா எதிர்பார்க்கவே இல்லை. இது ஒரு சாதாரண கார் அல்ல – இது எதிர்காலத்தின் வாகனம்!...
Thamil Paarvai

கனடாவின் வட்டி விகிதம்

அடுத்த நடவடிக்கை உயர்வா? ஒரு ஆழமான பார்வை கனடாவின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் கனடா, கடந்த 2025 அக்டோபர் முதல் தனது கொள்கை வட்டி விகிதத்தை...
Thamil Paarvai

Leave a Comment