கிரிக்கெட் விளையாட்டு

சென்னை – பெங்களூரு முதல் போட்டியில் மோதல்…. நாளை துவக்கம் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா;

ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசன், நாளை (23ம் தேதி) சென்னையில் கோலாகலமாக தொடங்குகிறது. சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

இந்த தொடரில் 8 அணிகள் களமிறங்க உள்ளன. இவை தங்களுக்குள் தலா 2 முறை லீக் ஆட்டங்களில் மோதுகின்றன.

லீக் சுற்று போட்டி அட்டவணை கடந்த 20ம் தேதி வெளியானது. லீக் சுற்று போட்டிகள் நாளை முதல் மே 5ம் தேதி வரை நடைபெற உள்ளன.

இதில் மொத்தம் 56 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றில் மோத உள்ளன.

பிளே ஆப் சுற்று மற்றும் பைனலுக்கான போட்டி அட்டவணை பின்னர் வெளியாகும்.

சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை மாலை நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மோத உள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான தொடக்க விழா மற்றும் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்கு செலவிட இருந்த தொகை புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

மேலும் புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு, முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த வசூலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழங்க உள்ளது.

சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த 16ம் தேதி நடந்தது.

விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்களும் விற்பனை செய்யப்பட்டதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த தொகையை புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிதியாக வழங்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

‘இந்த தொகைக்கான காசோலையை இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினென்ட்டாக இருக்கும் சிஎஸ்கே கேப்டன் டோனி வழங்குவார்’ என்றும் நிர்வாகம் கூறியுள்ளது.

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

உலகக் கிண்ணத்தை வென்றது இந்தியா

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இந்திய அணி மூன்றாவது தடவையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியாவும்...
Thamil Paarvai

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

2023 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி சோக கடலில் ரசிகர்கள்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடையக் காரணமே இந்திய அணிக்கு எதிராக போன ஒரு முடிவு தான். இந்தியா –...
Thamil Paarvai

ஐரோப்பிய கால்பந்து போட்டி – ஜெர்மனி, போர்ச்சுக்கல் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. 24 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்றுடன் லீக்...
Thamil Paarvai

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்- நியூசிலாந்து வெற்றிக்கு 139 ரன்கள் நிர்ணயித்தது இந்தியா

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும்...
Thamil Paarvai

Leave a Comment