Featured இந்தியா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இந்தியாவில் புதிதாக பரவும் மும்முறை மரபணு மாறிய கொரோனா.. எந்தளவு ஆபத்து? தடுப்பூசிக்கு கட்டுப்படுமா?

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தை நெருங்கும் நிலையில், புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள மும்முறை மரபணு மாறிய கொரோனா வைரஸ் இதற்குக் காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரசின் தீவிர தன்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது நாட்டில் தினசரி வைரஸ் பாதிப்பு மூன்று லட்சத்தை நெருங்குகிறது. மேலும், உயிரிழப்புகளும் 2000 கடந்துள்ளது. கொரோனா பரவலுக்கு மக்களிடம் உள்ள அலட்சியம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. இந்நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள மும்முறை மரபணு மாறிய கொரோனா வைரஸ் வைரஸ் பரவல் அதிகரிக்கக் காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய மும்முறை மரபணு மாறிய கொரோனா வைரஸ் நாட்டின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், இந்த வகை வைரஸ் வேகமாகப் பரவுகிறது. இதனால் குறைந்த காலத்தில் அதிக மக்கள் பாதிக்கப்படுகின்றனர், எனவே, இதற்கு ஏற்ற வகையில் தடுப்பூசிகளிலும் தேவையான மாற்றதித் செய்து வருகிறோம். இது குறித்துக் கூடுதல் புரிதலைப் பெற மரபணு மாற்றத்தை வரிசைப்படுத்தி, கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.

பொதுவாகவே ஒரு வைரஸ் பரவும்போது தன்னை தானே மாற்றிக்கொள்ளும். அதிகமாகப் பரவுகிறது என்றால் பல முறை அது தன்னை மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது. இரட்டை மரபணு மாறிய வைரசில் இருந்து இந்த புதிய மும்முறை மரபணு மாறிய கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது தற்போது மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி போன்ற மாநிலங்களில் கண்டறியப்படுகிறது.

இரட்டை மரபணு மாறிய வைரஸ் என்பது இரண்டு வகையான மரபணு மாற்றத்தை ஒரே வைரஸ் கொண்டிருப்பதாகவும். மும்முறை மரபணு மாறிய கொரோனா வைரஸ் என்றால் மூன்று வகையான மரபணு மாற்றத்தை ஒரே வைரஸ் கொண்டிருப்பது. கொரோனா வைரசை அதிகளவில் மரபணு மாற்றத்திற்கு ஏற்ப வரிசைப் படுத்தினால் மட்டுமே கூடுதல் தகவலைத் தெரிந்துகொள்ள முடியும். இருப்பினும், இந்தியாவில் 1% குறைவாகவே மரபணு ரீதியாக வரிசைப்படுத்தப்படுகிறது.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இதுபோன்ற புதிய வகை கொரோனா காரணமாகவே வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இந்த புதிய வகை எவ்வளவு தூரம் வேகமாகப் பரவுகிறது என்பது குறித்தும் இது எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்தும் தெரிந்து கொள்ளக் கூடுதல் ஆய்வுகள் தேவை. இரட்டை மரபணு மாறிய வைரஸ் வேகமாகவும் குழந்தைகள் மத்தியிலும் பரவுவது உறுதியாகியுள்ளது. இப்போதைய சூழ்நிலையில் மும்முறை மரபணு மாறிய வைரஸ் என்பதைக் கவலையளிக்கும் ஒரு விஷயம் என்றே ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Recent posts

ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்

தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...
Thamil Paarvai

“சீற்றம், அதிர்ச்சி, திகைப்பு”: ஒன்டாரியோ ஏரியை ‘லேக் அமெரிக்கா’ என டிரம்ப் பெயர் மாற்றியதற்கு அரசியல் தலைவர்களின் பதில்

“ஏரியின் பெயர் வென்டாட் மொழியில் ‘ஒன்டாரியோ’ என்பதிலிருந்து வந்தது. அந்தப் பெயர் 400 ஆண்டுகளுக்கும் மேலானது, கனடா கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்திற்கு முந்தையது.” –...
Thamil Paarvai

கனடா மீதான டிரம்பின் புதிய வரிகள்: சட்டரீதியான சவால்களை சந்திக்குமா?

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய 50 சதவீத சுங்கவரியை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தியுள்ள 96 ஆண்டுகள் பழமையான சட்டம், சட்டரீதியான...
Thamil Paarvai

வெள்ளமா? மலையே உடைந்து விழுந்ததா? நேபாள பேரழிவு

“உள்நாட்டு சுனாமி போன்றது” – நேபாளத்தை தாக்கிய பேரழிவை விவரிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இவை. வெள்ளமா, மலை உடைந்து விழுந்ததா என்ற கேள்விக்கு பதில் இரண்டுமே. ஆனால்...
Thamil Paarvai

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம்.

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம் “நாம் தாக்கப்பட்டபோது, நாம் போரில் இருக்கிறோம்” – இந்தக் கடுமையான வார்த்தைகளுடன், கனடாவின் பிரதமர் மார்க்...
Thamil Paarvai

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

Leave a Comment