Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் பற்றியெரியும் கப்பலில் 25 டொன் நைட்ரிக் அமிலம் – விபத்திற்கான காரணம் வெளியானது

கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவிலுள்ள எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்டுள்ள தீ விபத்து தொடர்பில் எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிம் ஹார்ட்னொல் (Tim Hartnoll) தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி குறித்த கப்பலில் ஏற்றிச்செல்லப்பட்ட இரசாயன திரவியம் கசிந்ததால் இந்த தீ ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், இந்த கப்பலில் ஏற்றிச்செல்லப்பட்டிருந்த 1486 கொள்கலன்களில், 25 டொன் நைட்ரிக் அமிலம் அடங்கிய பல கொள்கலன்களும் காணப்பட்டுள்ளன.

இந்த கொள்கலன்கள் முறையாக களஞ்சியப்படுத்தப்படாமையே இந்த தீ ஏற்படுதற்கான காரணம். ஆபத்து நிலைமை அடையாளம் காணப்பட்ட சந்தர்ப்பத்தில், இந்தியாவின் மேற்கு பகுதியிலுள்ள ஹசீரா துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்காக அனுமதி கோரப்பட்டிருந்தது.

எனினும், ஹசீரா துறைமுகத்தினால் இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அதனையடுத்து, கட்டாரிலுள்ள ஹாமட் துறைமுகத்துக்குள் இந்தக் கப்பல் பிரவேசிக்க முயற்சி கோரிய போதிலும், அக்கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

அதன்பிறகு, அக்கப்பல் தனது அடுத்த பிரயாண இலக்கான இலங்கை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. எனினும், கொழும்பு துறைமுகத்துக்கு பிரவேசிக்க அனுமதி கோர முன்னதாகவே கப்பலில் தீ ஏற்படுவதற்கான ஆபத்து நிலைமை தோன்றியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கப்பல் முன்னதாக அனுமதி கோரியிருந்ததற்கு இணங்க, இந்தியாவில் அல்லது கட்டாரில் உள்ள துறைமுகங்கள் ஒன்றில் அனுமதி வழங்கப்பட்டிருக்குமானால் இந்த பாரிய அழிவிலிருந்து தப்பிக்க முடியுமானதாக இருந்திருக்கும் எனவும் கூறியுள்ளார். 

Recent posts

2026 அமெரிக்க இடைக்கால தேர்தல்

2026 அமெரிக்க இடைக்கால தேர்தல்: ட்ரம்பிற்கு எதிரான வாக்கெடுப்பு, ஜனநாயகக் கட்சி காங்கிரஸைக் கைப்பற்றியது 2026 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க...
Thamil Paarvai

வரலாற்று “முதல் முறை” சாதனைகள்

2026 அமெரிக்க இடைக்காலத் தேர்தலில், ஜனநாயகக் கட்சி காங்கிரஸின் இரு அவைகளையும் கைப்பற்றிய ஒரு “நீல அலை” மட்டுமல்லாமல், பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த “முதல் முறை”...
Thamil Paarvai

தேர்தல் முடிவுகள் ஈரான் கொள்கையில் ஏற்படுத்திய தாக்கம்

2026 அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு, ஈரான் போர் நிலைமை “பேச்சுவார்த்தை தொடர்கிறது, ஆனால் இராணுவ மோதல்கள் தொடர்கின்றன” என்ற இரட்டை நிலையில் உள்ளது. ஜனநாயகக் கட்சி...
Thamil Paarvai

“இரட்டை பாதை” முடக்கத்தில் இராஜதந்திர பாதையில் பேச்சுவார்த்தை தொடர்கிறது

2026 ஆம் ஆண்டில், இந்தியா-இலங்கை மீனவர் மோதல் தொடர்ந்து தீர்க்கப்படாமல் உள்ளது, மேலும் “பேச்சுவார்த்தை தாமதம், கைது தொடரும்” என்ற கடினமான சுழற்சியில் சிக்கியுள்ளது. இரு தரப்பும்...
Thamil Paarvai

அமெரிக்க அரசியல் “தலைகீழாக மாறியுள்ளது”

2026 ஆம் ஆண்டு நடுப்பகுதி தேர்தலுக்குப் பிறகு, அமெரிக்க அரசியல் “தலைகீழாக மாறியுள்ளது” என்பதை விவரிக்க, ஜனநாயகக் கட்சி காங்கிரஸின் இரு அவைகளையும் ஒரே நேரத்தில் கைப்பற்றியது...
Thamil Paarvai

மிஸ்சிசாகா புதிய மேயர் டெட்ஜோ: “நகரத்திடம் உலகிற்கு விற்கக்கூடிய முக்கிய தொழில்கள் உள்ளன”

2026 ஆம் ஆண்டு அக்டோபர் 26 அன்று நடைபெற்ற மிஸ்சிசாகா மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற ஆல்வின் டெட்ஜோ (Alvin Tedjo) தனது வெற்றியின் மறுநாள், இந்நகரம்...
Thamil Paarvai

தேர்தல் வெற்றிக்குப் பிறகு நகர மண்டபத்தின் வெளியே பேசுகிறார்: “ஒற்றுமையே நமது பலம்”- சாவ்(Olivia Chow)

சாவ்(Olivia Chow) தேர்தல் வெற்றிக்குப் பிறகு நகர மண்டபத்தின் வெளியே பேசுகிறார்: “ஒற்றுமையே நமது பலம்”, அனைவருக்கும் மேயர் ஆவேன் என உறுதியளிப்பு 2026 ஆம் ஆண்டு...
Thamil Paarvai

கனடா வட்டி விகித உயர்வு: வாழ்க்கைச் செலவு அழுத்தம் மோசமடையுமா?

கனடா வட்டி விகித உயர்வு: வாழ்க்கைச் செலவு அழுத்தம் மோசமடையுமா? கனடா மத்திய வங்கி (Bank of Canada) அக்டோபர் 28, 2026 அன்று வட்டி விகிதத்தை...
Thamil Paarvai

நெதன்யாகு பெரும்பான்மையை இழந்தார், ஆனால் வெற்றியாளர் யாரும் இல்லை

இஸ்ரேல் தேர்தல்: நெதன்யாகு பெரும்பான்மையை இழந்தார், ஆனால் வெற்றியாளர் யாரும் இல்லை 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று நடைபெற்ற இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர்...
Thamil Paarvai

Leave a Comment