Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

உலக சுகாதார நிறுவனம் டெல்டா ரக வைரஸ் தொடர்பில் கவலை…

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸின் மூன்று உப ரகங்களில், டெல்டா ரகம் மட்டும் கவலையளிக்கும் வைரஸ் என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு 2020 அக்டோபர் மாதத்தில் மராட்டிய மாநிலத்தில் பி.1.617 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுதல் முதன் முறையாக கண்டறியப்பட்டது. பின்னர் மூன்ற உப ரகங்களாக இது பிரிந்தது.

இவற்றில் பி.1.617.2 என்ற ரகத்திற்கு உலக சுகாதார நிறுவனம் டெல்டா என்று பெயர் சூட்டியது. பி.1.617.1 ரகத்திற்கு கப்பா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  

உலக சுகாதார நிறுவனம், டெல்டா ரக வைரஸ், இந்தியா, கொரோனா பரவல் உருமாறிய கொரோனா வைரஸின் மூன்ற உப ரகங்களையும் கவலையளிக்கும் ரகம் என்று கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியிருந்தது.

செவ்வாயன்று, இந்த மூன்று உப ரகங்களில், டெல்டா ரகம் மட்டுமே கவலையளிக்கும் ரகம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் பரவல் வேகம் மிக அதிகமாக உள்ளதால் இதை கவலையளிக்கும் ரகமாக வகைப்படுத்தியுள்ளது. 

கப்பா உப ரக வைரஸின் பரவல் மிகக் குறைவாக உள்ளதால் அதனை கவனிக்கப்பட வேண்டிய ரகமாக உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.

பி.1617.3 என்ற பெயரிடப்படாத மூன்றாவது உப ரக வைரஸ் மிக மிக குறைவாகவே கண்டறியப்பட்டுள்ளதால், அது எந்த பிரிவிலும் சேர்க்கப்படவில்லை.பல நாடுகளுக்கு பரவியுள்ள இந்த டெல்டா ரக வைரஸ் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. 

Recent posts

2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க சட்ட நிபுணர் நவநீதம் “நவி” பிள்ளை (Navanethem “Navi” Pillay) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது....
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, கனேடிய எழுத்தாளர் ஆன் கார்சன் (Anne Carson) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் கனடாவைச் சேர்ந்த இரண்டாவது இலக்கிய நோபல்...
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு, பிரெஞ்சு விஞ்ஞானி ஹென்றி பி. ககன் (Henri B. Kagan) மற்றும் ஜப்பானிய விஞ்ஞானி கென்சோ சோய் (Kenso...
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு, பெல்ஜியம்-அமெரிக்க துகள் இயற்பியலாளர் பிரான்சிஸ் ஹால்சன் (Francis Halzen) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் தென் துருவத்தில் உள்ள பனிக்கட்டியை...
Thamil Paarvai

உடலியல் அல்லது மருத்துவம் 2026 ஆம் ஆண்டு நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது: அமெரிக்காவின் கார்ல் டெய்செரோத் (Karl Deisseroth), ஜெர்மனியின் பீட்டர் ஹெகெமன் (Peter...
Thamil Paarvai

கனடிய பொறியாளர்கள் உருவாக்கிய சொந்த EV

கனடா தனது சொந்த மின்சார வாகனத்தை (EV) உருவாக்கிவிட்டது. இதை அமெரிக்கா எதிர்பார்க்கவே இல்லை. இது ஒரு சாதாரண கார் அல்ல – இது எதிர்காலத்தின் வாகனம்!...
Thamil Paarvai

கனடாவின் வட்டி விகிதம்

அடுத்த நடவடிக்கை உயர்வா? ஒரு ஆழமான பார்வை கனடாவின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் கனடா, கடந்த 2025 அக்டோபர் முதல் தனது கொள்கை வட்டி விகிதத்தை...
Thamil Paarvai

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் குழப்பத்திற்கு காரணமான இரு முக்கிய புள்ளிகள்

தியாக தீபம் திலீபன் எனும் பெயர் தமிழ் மக்களின் உள்ளங்களில் அகிம்சைப் போராட்டத்தின் உச்ச அடையாளமாகப் பதிந்துள்ளது. 1987ஆம் ஆண்டு, ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம்...
Thamil Paarvai

டொராண்டோ மேயர் தேர்தல் 2026: முக்கிய வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகள் வெளியீடு

டொராண்டோ நகர முதல்வர் தேர்தல் அக்டோபர் 26, 2026 அன்று நடைபெறவுள்ளது. தற்போதைய முதல்வர் ஒலிவியா சௌ, நகரசபை உறுப்பினர் பிராட் பிராட்போர்ட், முன்னாள் மத்திய அமைச்சர்...
Thamil Paarvai

Leave a Comment