Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

தமிழக பின்னனியை கொண்ட பிரிட்டன் தொழிலதிபர் எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி அசத்தல்

விண்வெளி சுற்றுலாவில் புதிய சகாப்தத்தை படைத்துள்ள ரிச்சர்ட் பிரான்சன்(Richard Branson) மனிதர்களுக்கு விண்வெளி சுற்றுலாவிற்கான கதவுகளை அகல திறந்திருக்கிறார் ,

அத்துடன் உலகின் முதல் 2 பணக்காரர்களும் விண்வெளி சுற்றுலா போட்டியாளர்களுமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், அமேசான் மற்றும் புளு வெர்ஜின் நிறுவனர் பெசோஸை முந்தி அவர் அசத்தியுள்ளார்.

பிரிட்டன் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன்(Richard Branson) தமிழகத்தின் கடலூரை பூர்வீகமாக கொண்டவர் . தமது விர்ஜிக் கேலக்டிக் நிறுவன விண்கலம் மூலம் வெற்றிகரமாக விண்வெளிக்கு சென்று திரும்பி சரித்தர சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் ரிச்சர்ட் பிரான்சன்(Richard Branson). இது புதிய சகாப்தத்தின் விடியல். விண்வெளியில் அடுத்த பாய்ச்சலுக்கு மனித இனம் தயாராகிவிட்டது என்பதற்கு கடியல் கூறும் விடியல் இது.

அமெரிக்காவின் ஸ்பேஸ் போக் தலத்தில் விர்ஜிக் கேலக்டிக் நிறுவனத்தின் வி.எஸ்.எஸ். யூனிட்டி – 22 விண்கலத்தை சுமந்துக்கொண்டு வானில் பறக்க வி.எம்.எஸ். யூ ஜெட் விமானம் தயாராகி இருந்தது. விர்ஜிக் கேலக்டிக் நிறுவனர் ரிச்சர்ட் பிரான்சன்(Richard Branson), இந்திய வம்சாவழி பெண்ணான ஸ்ரீஷா பாண்டா உள்ளிட்ட 4 பேரும், 2 பைலட்டுகளும் விண்வெளிக்கு செல்லும் உற்சாகத்தோடு இருந்தனர்.

மோசமான வானிலையால் பயணம் சுமார் ஒன்றரை மணி நேரம் தள்ளிப்போக இந்திய நேரப்படி இரவு 8:14 மணிக்கு 6 பேருடன் தயாராகி இருந்த வி.எஸ்.எஸ். யூனிட்டி விண்கலத்தை சுமந்துக்கொண்டு வி.எம்.எஸ். யூ ஜெட் பயணத்தை தொடங்கியது. சுமார் 46 ஆயிரம் அடி உயரத்தை எட்டியதும் வி.எம்.எஸ். யூ ஜெட், வி.எஸ்.எஸ். யூனிட்டி விண்கலத்தை வானில் விடுவித்தது.

வி.எம்.எஸ். யூ ஜெட் விமானத்தில் இருந்து விடுபட்டதும் வி.எஸ்.எஸ். யூனிட்டி – 22 விண்கலத்தில் இருந்து பைலட்டுகள் ராக்கெட் எஞ்சினை இயக்கி விண்கலத்தை மேல்நோக்கி செலுத்தினர். தொடர்ந்து மேல்நோக்கி முன்னேறிய வி.எஸ்.எஸ். யூனிட்டி – 22 விண்கலம், உச்சபட்சமாக 85.9 கிலோ மீட்டர் அதாவது 2 லட்சத்து 82 ஆயிரம் அடி உயரத்தை எட்டியபோது அதிலிருந்த 6 பேரும் எதிர்பார்த்திருந்த அந்த தருணம் வந்தது.

வளிமண்டலத்திற்கு அப்பால் புவியீர்ப்பு விசையின் விளிம்பில் பேரண்டத்தில் யாதுமற்ற வெற்றிடம் தொடங்கும் புள்ளிக்கு மிக அருகில் வி.எஸ்.எஸ். யூனிட்டி – 22 விண்கலம் சுமார் 4 நிமிடங்கள் இருந்தது. கலத்திற்குள் இருந்த 6 பேரும் இருக்கைகளுடன் தங்களை இணைத்திருந்த பெல்ட்டுகளை கழற்றிவிட்டு உள்ளேயே உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர்.

ஒரேநேரத்தில் பேரண்டத்தின் கருமையையும், பூமி பந்தின் வளைவையும் அவர்கள் கண்டு மகிழ்ந்தனர். விண்வெளிக்கு பாய்ந்ததன் நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய வி.எஸ்.எஸ். யூனிட்டி – 22 விண்கலம் பின்னர் புவியை நோக்கிய பயணத்தை தொடங்கியது. புவியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்ததும் தீ பிழம்புகளை கக்கியபடி கலத்தை நோக்கி கீழ் நோக்கி வந்தது.

பூமியில் இருந்து புறப்பட்ட அதேதளத்தில் சரியாக ஒன்றரை மணி நேரத்தில் ரிச்சர்ட் பிரான்சன் உள்ளிட்ட 6 பேரும் வி.எஸ்.எஸ். யூனிட்டி – 22 விண்கலத்தில் பத்திரமாக தரையிறங்கினர். பூமியில் மீண்டும் கால் பதித்ததும் குடும்பத்தினருடன் ரிச்சர்ட் பிரான்சன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

இது வாழ்நாள் அனுபவம். சிறுவயது கனவு நனவானது என்று உற்சாகம் பொங்க அவர் கூறினார். விண்வெளி சுற்றுலா கனவுடன் 2004ம் ஆண்டு விர்ஜிக் கேலக்டிக் நிறுவனத்தை தொடங்கிய ரிச்சர்ட் பிரான்சன் (Richard Branson), 17 ஆண்டுகள் கடும் உழைப்பாலும், விடா முயற்சியாலும் தமது சிறுவயது கனவை நினைவாக்கியுள்ளார்.   

Recent posts

ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்

தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...
Thamil Paarvai

“சீற்றம், அதிர்ச்சி, திகைப்பு”: ஒன்டாரியோ ஏரியை ‘லேக் அமெரிக்கா’ என டிரம்ப் பெயர் மாற்றியதற்கு அரசியல் தலைவர்களின் பதில்

“ஏரியின் பெயர் வென்டாட் மொழியில் ‘ஒன்டாரியோ’ என்பதிலிருந்து வந்தது. அந்தப் பெயர் 400 ஆண்டுகளுக்கும் மேலானது, கனடா கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்திற்கு முந்தையது.” –...
Thamil Paarvai

கனடா மீதான டிரம்பின் புதிய வரிகள்: சட்டரீதியான சவால்களை சந்திக்குமா?

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய 50 சதவீத சுங்கவரியை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தியுள்ள 96 ஆண்டுகள் பழமையான சட்டம், சட்டரீதியான...
Thamil Paarvai

வெள்ளமா? மலையே உடைந்து விழுந்ததா? நேபாள பேரழிவு

“உள்நாட்டு சுனாமி போன்றது” – நேபாளத்தை தாக்கிய பேரழிவை விவரிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இவை. வெள்ளமா, மலை உடைந்து விழுந்ததா என்ற கேள்விக்கு பதில் இரண்டுமே. ஆனால்...
Thamil Paarvai

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம்.

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம் “நாம் தாக்கப்பட்டபோது, நாம் போரில் இருக்கிறோம்” – இந்தக் கடுமையான வார்த்தைகளுடன், கனடாவின் பிரதமர் மார்க்...
Thamil Paarvai

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

Leave a Comment