கிரிக்கெட் விளையாட்டு

அயர்லாந்து- ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர் இந்தியாவில்

இந்தியாவின் டெஹ்ரதூனில் நடைபெறவிருக்கும் அயர்லாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான ஆப்கான் அணியில் ஷரபுத்தீன் அஷ்ரப் மற்றும் இக்ராம் அலி கைல் ஆகிய இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டிருப்பதோடு டெஸ்ட் அணியில் இருந்து முஜீபுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி ஆப்கானிஸ்தான் அணி தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பல புதிய வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

சகலதுறை வீரர் அஷ்ரப், 17 வயது இடது கை வேகப்பந்து வீச்சாளர் வக்கார் சலாம்கைல் மற்றும் அலி கைல் ஆகிய வீரர்கள் 14 பேர் கொண்ட டெஸ்ட் குழாமிற்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

பெங்பளூரில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல் டெஸ்ட்டில் இடம்பிடித்த அப்ஸார் சாசாய், அமீர் ஹம்ஸா, முஜீப் உர் ரஹ்மான், சாயித் ஷிர்ஸா மற்றும் சாஹிர் கான் ஆகியோர் வியாழக்கிழமை (07) அறிவிக்கப்பட்ட டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை.

ஆப்கான் ஒருநாள் குழாமில் இருந்து அஷ்ரப் வெளியேற்றப்பட்டிருக்கும் அதேவேளை அவர் டி-20 குழாமில் இடம்பிடித்துள்ளார். வளர்ந்து வரும் அணி ஊடாக வந்த அலி கைல் ஒருநாள் மற்றும் டி-20 இரு குழாமிலும் இடம்பெற்றுள்ளார்.

2019 உலகக் கிண்ணம் நெருங்கி இருக்கும் நேரத்தில் தேர்வாளர்கள் ஆப்கான் ஒருநாள் குழாமில் 21 வீரர்களை இணைத்துள்ளனர்.

விக்கெட் காப்பாளரும் அதிரடியாக துடுப்பாடுபவருமான மொஹமட் ஷஹ்ஸாத் ரி -20 குழாமில் இருந்து நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். எனினும் அவர் அடுத்த இரண்டு வகை கிரிக்கெட்டிலும் இடம் பெற்றுள்ளார்.

அஸ்கர் ஆப்கான் மூன்று வகை கிரிக்கெட்டிலும் ஆப்கான் அணிக்கு தலைமை வகிப்பதோடு மொஹமது நபி மற்றும் ரஷித் கான் மூன்று வகை கிரிக்கெட்டுக்குமான ஆப்கான் குழாமில் இடம்பெறுகின்றனர்.

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையில் மூன்று ரி -20 ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ரி -20 போட்டியுடன் இந்த தொடர் ஆரம்பமாகவுள்ளது.

அனைத்துப் போட்டிகளும் இந்தியாவின் உத்தர்காண்ட் மாநில தலைநகரான டெஹ்ரதூனில் நடைபெறும்.

இதில் மார்ச் 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியாகும்.

ஆப்கானிஸ்தான் தனது முதல் டெஸ்ட்டில் இந்தியாவிடம் தோற்றதோடு அயர்லாந்து, பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்தது.

ஆப்கான் அணி

ரி ௨0 – அஸ்கர் ஆப்கான் (தலைவர்), உஸ்மான் கனி, நஜீப் டரகாய், ஹஸ்ரதுல்லா சாசாய், சமியுல்லா சின்வாரி, மொஹமது நபி, ஷபிகுல்லா ஷபாக், ரஷீத் கான், நஜீபுல்லா சத்ரான், கரீம் ஜனட், பரீத் மலிக், சயத் ஷிரர்சாத், சியா உர் ரஹ்மான், முஜீப் உர் ரஹ்மான், சாஹிர் கான், ஷரபுத்தீன் அஷ்ரப்.

ஒருநாள் அணி

அஸ்கர் அப்கான் (தலைவர்), மொஹமட் ஷஹ்ஸாத், நூர் அலி சத்ரான், ஜாவிட் அஹமதி, ஹஸ்ரதுல்லா சாசாய், ரஹ்மத் ஷாஹ், சமியுல்லா ஷின்வாரி, மொஹமது நபி, நஜீபுல்லா சத்ரான், இக்ராம் அலி கைல், ஹஷ்மதுல்லா ஷஹிதி, ரஷித் கான், கரிம் ஜனத், குல்பதின் நயிபி, அப்தாப் அலம், சவுலத், சாஹிர் கான், பாரித் மாலிக், முஜீப் உர் ரஹ்மான், ஷபூர் சத்ரான், செயித் ஷிர்சாத்.

டெஸ்ட் அணி

அஸ்கர் அப்கான் (தலைவர்), மொஹமட் ஷஹ்ஸாத், இஹ்ஸாத் ஜனத், ஜாவிட் அஹமதி, ரஹ்மத் ஷாஹ், நாசிர் ஜமால், ஹஷ்மதுல்லா ஷஹிதி, இக்ராம் அலி கைல், மொஹமது நபி, ரஷிட் கான், வபதர் மொமன்ட், யாமின் அஹமட்ஸாய், ஷரபுத்தீன் அஷ்ரப், வக்கார் சலம்கைல்.

Recent posts

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

உலகக் கிண்ணத்தை வென்றது இந்தியா

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இந்திய அணி மூன்றாவது தடவையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியாவும்...
Thamil Paarvai

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

Leave a Comment