ஆன்மீகம் ராசிபலன்

இன்றைய ராசிபலன்

மேஷம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் முக்கிய பொறுப்பு ஒன்றுக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் பற்றுவரவு சுமுகமாக நடைபெறும்.. பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு விலகும்.

ரிஷபம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனாலும், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். எதிரிகளால் மறைமுகத் தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை. கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிகளை உற்சாகமாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சக பணியாளர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்லவும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. எதிர்பாராத செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். மாலையில் வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமார்தான். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

கடகம்: மகிழ்ச்சியான நாள். எதிர்பாராத பணவரவு உண்டாகும். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். மாலையில் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைக் காலையிலேயே தொடங்குவது சாதகமாக முடியும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

சிம்மம்: மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்க வேண்டும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி: தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

துலாம்: புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். ஆனால், குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

விருச்சிகம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அலுவலகத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க கூடுதலாக உழைக்கவேண்டி வரும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

தனுசு: மனதில் சஞ்சலம் ஏற்படும். வீண் செலவுகளால் கையிருப்பு கரையும். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார். அவர் மூலம் உங்களுக்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனையை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வதுடன் பாராட்டவும் செய்வார்கள். வியாபாரத்தில் விற்ப னையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் ஏற்படக்கூடும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படக்கூடும்.

மகரம்: மனதில் உற்சாகம் உண்டாகும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாலையில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். புதிய டிசைனில் ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் எதிர்பார்த்த படியே இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.

கும்பம்: திடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் பணியாளர்களால் செலவுகளும் ஏற்படக்கூடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் தேவையை நிறைவேற்றி ஆசி பெறும் வாய்ப்பு ஏற்படும்.

மீனம்: உற்சாகமான நாள். வாழ்க்கைத்துணை வழியில் சுபச் செலவுகள் ஏற்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உங்கள் தேவைஅறிந்து மற்றவர்கள் உதவி செய்வார்கள். குடும்பத்தில் மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருப்பது உற்சாகம் தரும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

Recent posts

பழைய ஏற்பாட்டின் அடிப்படைச் நம்பிக்கைகள்

1. மோசேயின் பிறப்பும் அழைப்பும் யோசேப்பு மரித்தபின்பு, அவருடைய சந்ததியினரான இஸ்ரவேலர் எகிப்தில் பெருகினர். புதிய பார்வோன் இஸ்ரவேலரைப் பார்த்துப் பயந்து, அவர்களை அடிமைகளாக்கி, கடின வேலைகளைச்...
Thamil Paarvai

தமிழ் நாகரிகத்தின் அழியாச் சின்னம்

சங்கு வெறும் கடல்வாழ் உயிரினத்தின் ஓடு மட்டும் அல்ல; அது தமிழ் அடையாளங்களில் ஒன்று. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர் கலாசாரம், மொழி, சமயம் மற்றும் அன்றாட...
Thamil Paarvai

விண்ணைத் தொடும் விரல்கள்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் இறையியல் வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தைப் பெறுவது ஜெபமாலை (Rosary) ஆகும். இது வெறும் கோர்வையான மணிகள் அல்ல; இது ஒரு ஆன்மீக ஆயுதம்,...
Thamil Paarvai

விண்ணின் விருந்து, மண்ணின் பலி

கத்தோலிக்க கிறிஸ்தவ வழிபாட்டின் மையமும் உச்சியுமாக விளங்குவது திருப்பலி (Holy Mass) ஆகும். இது வெறும் ஒரு சடங்கு அல்ல; இது கல்வாரியின் பலி மீண்டும் நிகழ்த்தப்படும்...
Thamil Paarvai

இரத்தத்தால் எழுதப்பட்ட வெற்றி

“மறைசாட்சி” என்ற சொல்லைக் கேட்டவுடன், நம்முள் ஒரு பயமும், அதே நேரத்தில் ஒரு பிரமிப்பும் உண்டாகிறது. ஒருவர் தனது உயிரையே இழக்கத் தயாராக இருக்கிறார் – எதற்காக?...
Thamil Paarvai

திருச்சபையின் அறிவுக் கதவுகள்

விசுவாசம் மட்டும் போதுமா? இறைவனை நேசிப்பது மட்டும் போதுமா? ஆம், போதும். ஆனால் இறைவன் நமக்குக் கொடுத்துள்ள அறிவு, பகுத்தறிவு, தர்க்கம் – இவற்றைப் பயன்படுத்தி, விசுவாசத்தை...
Thamil Paarvai

வயது ஒரு தடையல்ல, இதயம்தான்

“நான் இன்னும் சிறு குழந்தை. என்னால் பெரிய காரியங்கள் செய்ய முடியாது.” – இப்படி நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். ஏனெனில், திருச்சபையின் வரலாற்றில், 7...
Thamil Paarvai

குடும்பம் என்பது ஒரு மடம்

நாம் பெரும்பாலும் புனிதர்கள் என்றால், கன்னியாஸ்திரிகள், துறவிகள், குருக்கள், மறைசாட்சிகள் – இவர்களைத்தான் நினைத்துக் கொள்கிறோம். “ஒரு சாதாரண அப்பா, ஒரு சாதாரண அம்மா – குழந்தைகளைப்...
Thamil Paarvai

விண்ணின் விரல் பூமியில்

“அதிசயம்” (Miracle) என்ற சொல்லைக் கேட்டவுடன், பலருக்கு ஒரு சந்தேகம்: “இது உண்மையா? அல்லது கட்டுக்கதையா? விஞ்ஞானம் இவற்றை எப்படிப் பார்க்கிறது? இன்றும் அதிசயங்கள் நிகழ்கின்றனவா?” கத்தோலிக்க...
Thamil Paarvai

Leave a Comment