இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மாலத்தீவு சென்றடைந்தார் மத்தியமைச்சர் சுஷ்மா சுவராஜ்: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாலத்தீவு சென்றுள்ளார். இந்தச் சுற்றுப்பயணத்தின்போது, அந்நாட்டின் அதிபர், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டோரைச் சந்திக்கும் சுஷ்மா சுவராஜ், இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அவர்களுடன் விவாதிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மாலத்தீவு சென்றுள்ள சுஷ்மா சுவராஜூக்கு விமான நிலையத்தில் மாலத்தீவு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலத்தீவு அதிபராக இப்ராகிம் முகமது சோலி கடந்த நவம்பர் மாதம் பதவியேற்றார். அதன் பிறகு, இந்தியா சார்பில் அந்நாட்டுக்கு மேற்கொள்ளப்படும் முதல் அரசுமுறைப் பயணம் இதுவாகும். இந்தப் பயணத்தின்போது, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா சாஹிப்இ பாதுகாப்பு அமைச்சர் மரியா அகமது தீதி, நிதியமைச்சர் இப்ராஹிம் அமீர், திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு அமைச்சர் முகமது அஸ்லாம், சாலை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஐசத் நகுலா, பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் பையஸ் இஸ்மாயில் உள்ளிட்டோரை சுஷ்மா சுவராஜ் சந்தித்துப் பேச உள்ளதாக கூறப்படுகிறது. முந்தைய அதிபர் அப்துல்லா யாமீன் ஆட்சியில் இருநாடுகளுக்கும் இடையே பலவீனம் அடைந்த நல்லுறவை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அமையும் சுஷ்மா சுவராஜ் பயணம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent posts

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

Leave a Comment