Featured Uncategorized உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள் மூலம் தொடர்ச்சியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது…மேலும் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் உள்ள சவுதி அரேபியா, கத்தார்,ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட பகுதிகளிலும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் மத்திய கிழக்கு முழுவதும் பெரும் பதற்ற நிலை நிலவுகிறது.தற்போது நடைபெற்று வரும் இந்த மோதலில், ஏவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் வான்வெளி தாக்குதல்களே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதுவரை எந்த நாடும் தரைவழி போரை தொடங்கவில்லை.

இந்த நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் Donald Trump அவர்களிடம் ஒரு முக்கிய கேள்வி எழுப்பப்பட்டது?

ஈரானுக்குள் அமெரிக்க படைகளை அனுப்பி தரைவழி போரை தொடங்குவீர்களா? என்பதே அந்த கேள்விக்கு.

பதிலளித்த அவர்,

“இப்போதைய சூழலில் அமெரிக்க படைகளை ஈரானுக்கு அனுப்புவது நேரத்தை வீணடிக்கும் செயலாகும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் ஈரான் ஏற்கனவே பல்வேறு ராணுவ இழப்புகளை சந்தித்துள்ளதாகவும்,அந்த நாட்டின் படை பலவீனமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் Abbas Araghchiஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரைவழி போரை தொடங்கினால்அவர்களின் படைகள் பெரும் இழப்பை சந்திக்கும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu தரைவழி தாக்குதல் நடைபெறாது என அறிவித்திருந்தார். தற்போதுDonald Trump அவர்களின் கருத்தும் அதே நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.

இதனால் இந்த மோதல் உடனடியாக முழுமையான நிலப்பரப்பு போராக மாறாது என்ற ஒரு சிறிய நிம்மதி உருவாகியுள்ளது.ஆனால் போர் நீடித்தால் உலக பொருளாதாரம் மற்றும் எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் தொடர்கிறது.

Recent posts

Grand Theft Auto VI Portable Game Desktop Direct Link 2026

📎 HASH: 50fbc2fe768e0237200107a7d0cfd890 | Updated: 2026-10-07 Verify CPU: multi-threading optimized CPU RAM: enough space for background apps and OS Disk...
admin

2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க சட்ட நிபுணர் நவநீதம் “நவி” பிள்ளை (Navanethem “Navi” Pillay) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது....
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, கனேடிய எழுத்தாளர் ஆன் கார்சன் (Anne Carson) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் கனடாவைச் சேர்ந்த இரண்டாவது இலக்கிய நோபல்...
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு, பிரெஞ்சு விஞ்ஞானி ஹென்றி பி. ககன் (Henri B. Kagan) மற்றும் ஜப்பானிய விஞ்ஞானி கென்சோ சோய் (Kenso...
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு, பெல்ஜியம்-அமெரிக்க துகள் இயற்பியலாளர் பிரான்சிஸ் ஹால்சன் (Francis Halzen) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் தென் துருவத்தில் உள்ள பனிக்கட்டியை...
Thamil Paarvai

உடலியல் அல்லது மருத்துவம் 2026 ஆம் ஆண்டு நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது: அமெரிக்காவின் கார்ல் டெய்செரோத் (Karl Deisseroth), ஜெர்மனியின் பீட்டர் ஹெகெமன் (Peter...
Thamil Paarvai

0x7969561b

0x7969561b
admin

கனடிய பொறியாளர்கள் உருவாக்கிய சொந்த EV

கனடா தனது சொந்த மின்சார வாகனத்தை (EV) உருவாக்கிவிட்டது. இதை அமெரிக்கா எதிர்பார்க்கவே இல்லை. இது ஒரு சாதாரண கார் அல்ல – இது எதிர்காலத்தின் வாகனம்!...
Thamil Paarvai

கனடாவின் வட்டி விகிதம்

அடுத்த நடவடிக்கை உயர்வா? ஒரு ஆழமான பார்வை கனடாவின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் கனடா, கடந்த 2025 அக்டோபர் முதல் தனது கொள்கை வட்டி விகிதத்தை...
Thamil Paarvai

Leave a Comment