இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

நாளை அதிரடி தீர்ப்பு : இரட்டை இலை சின்னம் வழங்கக்கோரிய மேற்முறையீடு வழக்கு

இரட்டை இலை சின்னம் வழங்கக்கோரிய வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கவுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக சசிகலா அணி ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. பின்னர் சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பின் அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் அணி என மூன்றாக பிரிந்தது. மூன்று அணியினரும் இரட்டை இலை சின்னத்தை சொந்தம் கொண்டாடியதால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.

இதற்கிடையே ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒன்றாக இணைந்தனர். இதனால் தினகரன் அணி மற்றும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி இரட்டை இலை சொந்தம் கொண்டாடியது. பின்னர் நடைபெற்ற பல கட்ட விசாரணைக்கு பிறகு இறுதியில் 2017-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிலான முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதற்கான காரணங்களையும் வெளியிட்டது.இரட்டை இலை சின்னத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு வழங்கிய தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேற்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இரு தரப்பி வாதங்களையும் கேட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 8-ம் தேதி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்பது குறித்து அதிரடி தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு வழங்க உள்ளது.

Recent posts

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

Leave a Comment