இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பிரித்தானியாவில் சொத்துப் பிரச்சினை காரணமாக கணவனை கொன்ற இலங்கை தமிழ் பெண்!

பிரித்தானியாவில் கணவனை அடித்து கொலை செய்த இலங்கை பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு 2 வருடங்களும் 4 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கையை சேர்ந்த 76 வயதான கனகசபை ராமநாதன் என்பவரை 73 வயதான பாக்கியம் ராமநாதன் கொலை செய்துள்ளார்.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றது.

இது தொடர்பான வழக்கு விசாரணை பிரித்தானிய நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது கொலையாளிக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

சொத்துப் பிரச்சினை காரணமாக கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

எனினும் திருமணம் செய்த நாள் முதல் கணவன, மனைவியை அடிமையாக நடத்தியுள்ளார்.

இதனால் மன விரக்தி அடைந்த மனைவி, படுகையில் இருந்த கணவனை அடித்து கொலை செய்துள்ளார்.

கணவனின் கொடுமைகளை இதற்கு மேலும் பொறுக்க முடியாமையினாலும்இ கணவன் மீது ஏற்பட்ட கோபத்தினாலும் குறித்த கொலையை செய்ததாக பாக்கியம் ஒப்புக் கொண்டுள்ளார்.

குறித்த பெண்ணுக்கு நீதிமன்றம் 2 வருடங்களும் 4 மாதங்களும் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent posts

தமிழர் DNA ஆய்வுகள் குறித்த அதிர்ச்சிகரமான உண்மைகள்

தமிழர்களின் மரபணு வரலாறு குறித்து உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் DNA-க்களை...
Thamil Paarvai

கனேடிய தரை எல்லையில் ஐரோப்பா: “விஸ்கி போரின்” விளைவு

டென்மார்க்குடனான 49 ஆண்டு கால ஹான்ஸ் தீவு பிரச்சினை முடிவுக்கு வந்ததன் மூலம், கனடா-ஐரோப்பா இடையே முதல் தரை எல்லை உருவாகியுள்ளது. இந்த வரலாற்று சம்பவம், தற்போது...
Thamil Paarvai

கனடாவின் “இரும்புத் தண்டுவடம்” வாஷிங்டனை அதிரவைக்கிறது

கனடியப் பிரதமர் மார்க் கார்னி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் $1 டிரில்லியன் (C$1 டிரில்லியன்) மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் மகத்தான திட்டத்தை அறிவித்துள்ளார்....
Thamil Paarvai

ட்ரம்பின் $5,000 அறிவிப்பு பரபரப்பு

2026 செப்டம்பர் 11 — இன்று அமெரிக்கா 9/11 தாக்குதலின் 25 ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கிறது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு அதிபர் டொனால்ட்...
Thamil Paarvai

நூற்றாண்டு கூட்டாண்மை பிறந்தது

2026 செப்டம்பர் 10 ஆம் தேதி, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கரி நகரில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. கனடா பிரதமர் மார்க் கார்னியும்,...
Thamil Paarvai

டிரம்பின் வர்த்தகப் போர் உடைந்து விழுகிறது

டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர் முன்பு நினைத்ததைப் போல வெற்றிகரமாக நடக்கவில்லை. “பெரிய புலி எப்போதும் வெற்றி பெறும்” என்ற அவரது கோட்பாடு தோல்வியடைந்து வருகிறது. கனடா...
Thamil Paarvai

கனடா அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடிய அமைச்சரவை, ஆல்பர்ட்டா மாகாணத்தின் பான்ஃப் நகரில் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தை...
Thamil Paarvai

கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
Thamil Paarvai

கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!

அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
Thamil Paarvai

Leave a Comment