Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு, தனி விமானம் மூலம் நியூஜெர்சி வந்தடைந்தார்.

குறி தப்பியதால் குண்டு டிரம்ப் காதை உரசி சென்றது. இதனை உணர்ந்து டிரம்ப் உடனடியாக கீழே அமர்ந்து குனிந்து கொண்டார். பாதுகாப்பு அதிகாரிகளும் அவரை சுற்றி சூழ்ந்து பாதிப்பு ஏற்படாமல் காத்தனர்.

இதனிடையே, துப்பாக்கிச்சூடு நடத்தியவர் அடையாளம் காணப்பட்டு உள்ளார். தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற இளைஞர் . 20 வயது மதிக்கத்தக்கவர். டிரம்ப் இருந்த மேடையில் இருந்து சற்று தொலைவில் கட்டடம் ஒன்றின் மேற்கூரையில் இருந்து சுட்டுள்ளார்.இந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் பென்சில்வேனியாவை சேர்ந்தவர்

தாக்குதல் நடந்த போது நிலை குலையாமல், ரத்தம் சொட்டும் நிலையிலும் ஆதரவாளர்களை நோக்கி கையை உயர்த்தி ‛தம்ப்’ சின்னத்தை காட்டி, உற்சாகமாக கோஷம் எழுப்பியவாறு மருத்துவமனைக்கு சென்றார். சுற்றி இருந்தவர்களும் ஆதரவு குரல் எழுப்பினர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் வெளியானதும் சமூக வலைதளங்களில் டிரம்ப் குறித்த ஹேஷ்டேக் வைரல் ஆனது. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே உள்ளிட்ட உலக தலைவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்களை எடுத்துக்கூறி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை விமர்சிக்கின்றனர். பிரசார கூட்டத்தில் இருந்தவர்கள் அளித்த பேட்டி, ரத்தக்காயத்துடன் இருக்கும் டிரம்ப் குறித்த புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால், எக்ஸ் வலைதளத்தில் ‛ Trump, PresidentTrump, Shooter’ ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் இருந்தன.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அந்நாட்டின் அரசியலமைப்பே துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையை அந்நாட்டு மக்களுக்கு வழங்குகிறது. ஒரு சுதந்திர அரசின் பாதுகாப்பிற்குத் தேவையான ஆயுதங்களை வைத்திருக்கும் மக்களின் உரிமை மீறப்படாது என்று அந்தச் சட்டம் சொல்கிறது. இந்த சட்டம் இருப்பதாலேயே அமெரிக்காவில் பலரும் துப்பாக்கிகளை வாங்க முடிகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு 18 வயதை நிரம்பியவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் துப்பாக்கி வைத்துள்ளனர். அதேபோல கிட்டதட்ட 40% பேரின் வீடுகளில் துப்பாக்கி இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. குறிப்பாக அதிக ஆற்றல் கொண்ட துப்பாக்கிகள் மற்றும் செமி ஆடோமொடிக் துப்பாக்கிகள் அமெரிக்கா முழுவதும் எப்போதும் இல்லாத வகையில் மலிவாகவும் பரவலாகவும் கிடைப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.

Recent posts

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

Leave a Comment