கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கனடா அரசு அனுமதியளித்துள்ளது.

கனடாவில் கொரோனா வைரஸ்  வேகமாக பரவி வருகிறது. வைரசை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியை பைசர் கொரோனா தடுப்பூசிக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாகவே கனடா அரசு அனுமதியளித்தது.

இதையடுத்து, பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நல்ல பலன் அளிப்பது ஆய்வில் உறுதியானது.

இதையடுத்து, மாடர்னா நிறுவனமும் தங்கள் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் விண்ணப்பம் செய்துள்ளது.

மாடர்னா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர முதல் நாடாக அமெரிக்க கடந்த சில நாடுகளுக்கு முன்னர் அனுமதியளித்தது. இதனைதொடர்ந்து அமெரிக்காவில் மாடர்னா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்நிலையில், மாடர்னா தடுப்பூசிக்கு கனடா அரசும் அனுமதியளித்துள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி கிடைத்துள்ளதையடுத்து மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசியை தேவைப்படும் பகுதிகளுக்கு விநியோகம் செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

மாடர்னா தடுப்பூசி நாளை மறுதினம் முதல் கனடாவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பைசர் மற்றும் மாடர்னா என 2 நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதியளித்த நாடு என்ற பட்டியலில் கனடா இணைந்துள்ளது.

Recent posts

ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்

தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...
Thamil Paarvai

“சீற்றம், அதிர்ச்சி, திகைப்பு”: ஒன்டாரியோ ஏரியை ‘லேக் அமெரிக்கா’ என டிரம்ப் பெயர் மாற்றியதற்கு அரசியல் தலைவர்களின் பதில்

“ஏரியின் பெயர் வென்டாட் மொழியில் ‘ஒன்டாரியோ’ என்பதிலிருந்து வந்தது. அந்தப் பெயர் 400 ஆண்டுகளுக்கும் மேலானது, கனடா கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்திற்கு முந்தையது.” –...
Thamil Paarvai

கனடா மீதான டிரம்பின் புதிய வரிகள்: சட்டரீதியான சவால்களை சந்திக்குமா?

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய 50 சதவீத சுங்கவரியை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தியுள்ள 96 ஆண்டுகள் பழமையான சட்டம், சட்டரீதியான...
Thamil Paarvai

வெள்ளமா? மலையே உடைந்து விழுந்ததா? நேபாள பேரழிவு

“உள்நாட்டு சுனாமி போன்றது” – நேபாளத்தை தாக்கிய பேரழிவை விவரிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இவை. வெள்ளமா, மலை உடைந்து விழுந்ததா என்ற கேள்விக்கு பதில் இரண்டுமே. ஆனால்...
Thamil Paarvai

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம்.

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம் “நாம் தாக்கப்பட்டபோது, நாம் போரில் இருக்கிறோம்” – இந்தக் கடுமையான வார்த்தைகளுடன், கனடாவின் பிரதமர் மார்க்...
Thamil Paarvai

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

Leave a Comment