ஈழத்து சினிமா விமர்சனம் சினிமா திரைவிமர்சனம்

அந்தோணி: திரைப் பார்வை “தனியாவே இருந்துடுவேனோன்னு தான் பயமா இருக்கு”

போருக்குப் பிந்தைய அமைதிச் சூழலில் மனிதர்களின் அகப் போராட்டத்தைப் பேச வந்திருக்கிறது ‘அந்தோணி’. இலங்கை மண்ணின் தற்போதைய யதார்த்தத்தையும், அங்கு வாழும் எளிய மக்களின் ‘மீட்டுருவாக்க’க் கனவுகளையும் ஒரு கவிதையைப் போலப் பதிவு செய்திருக்கிறார்கள் இயக்குநர்கள் சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இருவரும்.

தமிழ் மீனவர்கள் எதிர்கொள்ளும் நிச்சயமற்ற நிலையை, எவ்வித அரசியல் முழக்கமுமின்றி முதன்மைக் கதாபாத்திரமான அந்தோணியின் தனிமை வழியாகவே படம் கடத்துவிடுகிறது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள், ஆண்டுதோறும் உழைத்துச் சேர்த்து வைத்துவிட்டு, தாயகம் திரும்பி, சேமிப்பைச் செலவழித்து ஒருநாள் கொண்டாடும் அந்த ‘புதுப்பித்தல்’உணர்வு, ஒரு காட்சியில் மிக அழகாகச்  சொல்லப்பட்டிருக்கிறது. “அங்கே இருக்கிற மிச்சக் காலத்தைத் தாங்கிப் பிடிப்பது இந்த ஒரு நாள் மகிழ்ச்சிதான்” என்கிற வசனம், லட்சக்கணக்கான புலம்பெயர் தமிழர்களின் ஆன்மாவைத் தொடும் . இதைப் போல தமிழ்நாட்டின் நளினியாகப் பிறந்து ஈழத்தின் தொப்புள்கொடி உறவாக மாறிவிடும் டி.ஜே. பானு. “தனியாவே இருந்துடுவேனோன்னு தான் பயமா இருக்கு” என்கிற வசனம் வழியாகப் போருக்குப் பிறகு ஒரு தமிழ்ப் பெண்ணின் பாதுகாப்பின்மையையும் நிதர்சனங்களையும் மறைமுகமாகப் பேசும் இப்படத்தின் கதை.

இசைஞானி இளையராஜா வழங்கியிருக்கும் ஓர் இசைப் பொக்கிஷம் இந்தப் படம். ‘குத்து விளக்கொளியே’, ‘மொட்டு விட்ட புது மலரே’ போன்ற பாடல்கள் உறவுகளின் உன்னதத்தைப் பேசுகின்றன. வசனங்கள் மௌனமாகும் இடங்களிலும் காட்சி மொழியில் விரியும் நிலப்பரப்பு கடல் பரப்பு இரண்டிலும் இழையோடும் உணர்வுகளின் ஏற்ற இறக்கங்களை இளையராஜாவின் இசை ஆழ்ந்து பேசுகிறது. அந்தோணியின் தனிமை, அவனது எதிர்பாராமை, கடலின் பிரம்மாண்டம் என அனைத்தையும் தன் இசையால் ஒரு புதிய உயரத்திற்குக் கொண்டு சென்றுவிடுகிறார் இசைஞானி இளையராஜா.

ஒளிப்பதிவாளர் ரிஷி செல்வம், இலங்கை நிலப்பரப்பின் அழகையும் கடலின் ஆழத்தையும் ஒரு தாயின் அக்கறையோடு படமாக்கியிருக்கிறார். யாழ்ப்பாண நூலகம் முதல் எளிய தெருக்கள் வரை ஈழத்தின் அசல் நிறத்தைத் திரையில் பார்க்கும் போது, ஒருமுறை அந்த மண்ணிற்குச் சென்று வரத் தூண்டுகிறது.

அன்பையும் அரவணைப்பையும் ஏக்கத்தையும் முன்வைக்கும் இந்தப் படம், ஈழ வெகுஜன சினிமாவுக்கு ஓர் அணிகலன்.

‘அந்தோணி’ – ஒரு பெரும் போருக்குப் பின் எஞ்சியிருக்கும் மனிதர்களின் ஏக்கத்தைப் பேசும் தரமான படைப்பு.

Recent posts

பயமா? சோர்வா?..டிமான்ட்டி காலனி 2: திரை விமர்சனம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் சாம் சி.எஸ் இசையில் உருவாகியிருக்கும் படம் டிமான்ட்டி காலனி 2. இதன் முதல் பாகம்...
Thamil Paarvai

தன் மக்களுடன் சேர்ந்து தொடங்குகிறார் தங்கலான். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா ? இல்லையா ?

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி, உலகளவில் வெளிவந்துள்ள திரைப்படம்  தங்கலான். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். பெரிதும்...
Thamil Paarvai

நிம்மதி என்பதே கிடையாதா? ராயன் விமர்சனம் 50வது படம் சூப்பரா? சொதப்பலா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் ராயன். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன்,...
Thamil Paarvai

இரண்டாவது சுதந்திரப் போரை’ எப்படி நடத்துகிறார் என்பதைப் பேசுகிறது `இந்தியன் பாகம் 2′.

நண்பர்களான சித்ரா அரவிந்தன் (சித்தார்த்), தம்பேஷ் (ஜெகன்), ஆர்த்தி (பிரியா பவானி சங்கர்), ஹரீஷ் (ரிஷி காந்த்) ஆகியோர் சமூகத்தில் நடக்கும் லஞ்சம், ஊழல் போன்றவற்றுக்கு எதிராக...
Thamil Paarvai

அடிமை எண்ணத்திற்கும் ஆதிக்க வர்க்கத்தினரை எதிர்த்தும் நடத்தப்படும் போர்

Captain Miller கேப்டன் மில்லர் நடிகர்கள்: தனுஷ், சிவ ராஜ்குமார் பிரியங்கா மோகன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்கம்: அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் டிரெய்லரில்...
Thamil Paarvai

பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்!

அயலான் விமர்சனம்.. பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்! நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு இசை: ஏ.ஆர். ரஹ்மான்...
Thamil Paarvai

Mission Chapter/ மிஷன் சாப்டர் 1

நடிகர்கள்: அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்கம்: ஏ.எல். விஜய் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி...
Thamil Paarvai

Merry Christmas/மெரி கிறிஸ்துமஸ்

Merry Christmas  மெரி கிறிஸ்துமஸ் நடிகர்கள்: விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே இசை: ப்ரீத்தம் இயக்கம்: ஸ்ரீராம் ராகவன் அந்தாதுன் படத்தை இயக்கி ஒட்டுமொத்த...
Thamil Paarvai

மாஸ் காட்டியதா? இல்லையா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘ஜெயிலர்’. பெரிய தயாரிப்பு நிறுவனம், எதிர்பார்ப்புகளை எகிற வைக்கிற இயக்குநர், இந்தியத் திரையுலகின் உச்ச...
Thamil Paarvai

Leave a Comment