Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்ட பெண் இரத்தக்கட்டியால் மரணம்

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவர் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, இரத்தக்கட்டி உருவாகி உயிரிழந்துள்ளார்.

நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த அந்த 34 வயது பெண்ணுக்கு ஆஸ்ட்ராசெனகா நிறுவன தயாரிப்பான கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இரத்தக்கட்டி உருவாகிய நிலையில், நேற்று அவர் மரணமடைந்தார்.

அவரது மரணம் தடுப்பூசியுடன் தொடர்புடையது போல் தோன்றுவதாக நிபுணர்கள் தெரிவித்தாலும், அவருக்கு ஏற்கனவே வேறு ஏதேனும் உடல் நல பிரச்சினைகள் இருந்தனவா என்பது குறித்து தெரியவரவில்லை.

இதற்கிடையில், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் உருவாகும் இந்த இரத்தக்கட்டிகள் பிரச்சினை அபூர்வமானது என கருதப்படுகிறது.

காரணம், அவுஸ்திரேலியாவில் 6.8 மில்லியன் பேருக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொண்ட 93 பேருக்கு மட்டுமே இந்த இரத்தக்கட்டிகள் உருவாகும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அந்த 93 பேரில் ஆறு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளார்கள்.

இதற்கிடையில், இன்னொரு விடயம் என்னவென்றால், உயிரிழந்த அனைவருக்குமே வேறு ஏதேனும் உடல் நல பிரச்சினைகள் இருந்தனவா என்பது தெளிவாக தெரியவரவில்லை என்பதுதான். 

Recent posts

உரிமைக்கான போராட்டம் தொடர்கிறது

பில் C-39: வேலைநிறுத்த உரிமையை முடக்கும் புதிய சட்டம் – தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பு கனடாவின் லிபரல் அரசு செப்டம்பர் 21, 2026 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல்...
Thamil Paarvai

அதிகாரம் தன்னைத்தானே அழித்துக்கொண்டது

டிரம்பின் ஊடகத் தடை: வெள்ளை மாளிகையில் இருந்து நிருபர்களை வெளியேற்றியது எப்படி அவருக்கே எதிரான பேரழிவாக மாறியது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து...
Thamil Paarvai

ஒரு புதிய பாரம்பரியத்தின் தொடக்கம்

72-வது தேசிய திரைப்பட விருதுகள்: கேவாடியாவில் வரலாற்று விழா – முழு விவரம் இந்தியத் திரைப்படத் துறையின் மிக உயரிய அங்கீகாரமான தேசிய திரைப்பட விருதுகள், 72-வது...
Thamil Paarvai

வானம் ஏன் திடீென மௌனமானது?

வான்வெளியை முடக்கும் மர்ம சக்தி? அமெரிக்கா முதல் லண்டன் வரை அதிர்ச்சி! 2026 ஆம் ஆண்டு, உலக வான்வெளியில் ஒரு தொடர் மர்ம நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. லண்டனில்...
Thamil Paarvai

கனடா விதிகள் கடுமையாக்கம்

கனடா PR விதிகள் கடுமையாக்கம்: AIP விண்ணப்பதாரர்களுக்கு 90 நாள் கெடு – முழு விவரம் கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை (IRCC), அட்லாண்டிக்...
Thamil Paarvai

ஒரு புதிய உலக ஒழுங்கின் தொடக்கம்

நாடுகள் இதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை’: டிரம்பிற்கு கனடா, இந்தியா, ஆஸ்திரேலியா, கென்யா அமெரிக்க மண்ணிலிருந்து அனுப்பிய வலுவான செய்தி 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 21...
Thamil Paarvai

நீதிக்கான நீண்ட பயணம்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு தீர்ப்பு: 15 பேர் குற்றவாளிகள், 9 பேர் விடுதலை – முழு விவரம் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கையை உலுக்கிய...
Thamil Paarvai

பாதுகாப்பான சாலைகளை நோக்கி

ஒன்டாரியோவில் வணிக டிரக் ஓட்டுநர் பயிற்சியில் புதிய மாற்றங்கள்: 103 மணிநேர கட்டாயப் பாடத்திட்டம் அறிமுகம். கனடாவின் ஒன்டாரியோ மாகாண அரசு, வணிக டிரக் ஓட்டுநர்களுக்கான பயிற்சி...
Thamil Paarvai

அடையாளத்தின் புதிய வரையறை

மைத்ரேயி ராமகிருஷ்ணன் (Maitreyi Ramakrishnan) என்பவர் கனடாவைச் சேர்ந்த தமிழ்-கனடிய நடிகை. நெட்ஃபிளிக்ஸ் தளத்தின் ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ (Never Have I Ever) என்ற...
Thamil Paarvai

Leave a Comment