இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

இந்திய தேர்தல் ஆணையம் ரூ.33கோடிக்கு அழியாத மை: வாங்குகிறது

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பயன்படுத்த ரூ.33 கோடிக்கு அழியாத மை இந்திய தேர்தல் ஆணையம் வாங்குகிறது. மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 16-வது மக்களவை பதவிக் காலம் வரும் ஜூன் 3ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி, ஏப்ரல், மே மாதத்தில் மக்களவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதன்படி, நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தலுக்கான தேதியை கடந்த 10-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கியது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் தமிழகத்தில் மக்களவை தொகுதிக்கு 179 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 29 பேர் பெண்கள். அதேபோன்று 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு 68 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.இந்த நிலையில், நேற்றும் இன்றும் விடுமுறையாகும். இதனால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. இந்த நிலையில் நாளை மறுநாளுடன்(26ம் தேதி) வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. நாளை மறு நாள் செவ்வாய் கிழமை என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்வது குறைவாகவே இருக்கும். எனவே, நாளை அதிகம் பேர் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ளனர். இதை தொடர்ந்து 27ம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது. அப்போது வேட்பாளர்கள் தாக்கல் செய்த ஆவணங்கள் சரிதானா என்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். இதை தொடர்ந்து, 29ம் தேதி மாலை 3 மணிக்குள் மனுக்களை வாபஸ் வாங்கலாம். அன்றைய தினம் மாலை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்கிடையே, தேர்தல் என்று வந்துவிட்டாலே கள்ள ஓட்டைத் தடுப்பதற்காகவும், வாக்களித்தமைக்கு அடையாளமாக வாக்காளர்களுக்கு கையில் வைக்கப்படும் அழியாத மை நினைவுக்கு வந்துவிடும்.வாக்காளர்களின் கைகளில் வைக்கப்படும் இந்த அழியாத மை தயாரிப்பு முழுவீச்சில் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்த ரூ.33 கோடிக்கு அழியாத மையை இந்திய தேர்தல் ஆணையம் வாங்குகிறது. மேலும், 26 லட்சம் பாட்டில் அழியாத மை வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள மைசூர் பெயின்ட்ஸ் அன்ட் வார்னிஷ் லிமிட்(எம்பிவிஎல்) நிறுவனம்தான் பிரத்யேகமாக அழியாத மையைத் தயாரித்து வருகிறது. எம்பிவிஎல் நிறுவனம் கர்நாடக அரசால் நடத்தப்படும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிறுவனத்தில் தரப்பில் கூறுகையில், ஏறக்குறைய 10 மில்லி அளவு கொண்ட 26 லட்சம் குப்பிகள் தயாரிக்கிறோம். இதுவரை 20 லட்சம் குப்பிகள் தயார் செய்யப்பட்டு, தேர்தல் ஆணையம் உத்தரவின்படி பல்வேறு மாநிலங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு குப்பியில் இருக்கும் மை மூலம் 700 முதல் 750 வாக்களர்களின் விரலில் மை வைக்க முடியும்ஷ’ எனத் தெரிவித்தனர்.எம்பிவிஎல் நிறுவனத்தின் மேலாளர் சி. ஹராகுமார் கூறுகையில், கடந்த 2014-ம் ஆண்டு அளித்த ஆர்டரைக் காட்டிலும் கூடுதலாக 4 லட்சம் குப்பிகளை தேர்தல் ஆணையம் ஆர்டர் கொடுத்துள்ளது. நாங்கள் 22 லட்சம் குப்பிகளை கடந்த மக்களவைத் தேர்தலுக்கு அனுப்பி வைத்தோம். இந்த முறை அதைக்காட்டிலும் 4 லட்சம் கூடுதலாகும்’ எனத் தெரிவித்தார்.

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment