உத்தரபிரதேச மாநில கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட பிரியங்கா காந்தி தனது தேர்தல் பிரசாரத்தை கடந்த வாரம் குஜராத் மாநிலத்தில் தொடங்கினார். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவுள்ள பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேசத்தில் உள்ள கங்கை நதிக்கரையில் படகு பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் விஜேந்திர திரிபாதி கூறுகையில், ‘உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் தொடங்க உள்ள பிரியங்கா, கங்கை நதிக்கரையில் 3 நாட்கள் படகு பயணம் மேற்கொள்ள உள்ளார். நதிக்கரை வழியாக பிரசாரம் செய்யும் முதல் தலைவர் பிரியங்கா காந்தி. வரும் 18ம் தேதி பிரயாகராஜ் நகரின் சத்நாக் பகுதியிலிருந்து தொடங்கி 140 கி.மீ. தூரம் படகில் பயணித்து அங்குள்ள கிராமங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொள்கிறார். கங்கா யாத்ரா என பெயரிடப்பட்டுள்ள இந்த பயணம் சத்நாக் பகுதியிலிருந்து தொடங்கி வாரணாசியின் அஸி காட் வரை செல்கிறார்’ என்றார். அகில இந்திய பொதுச்செயலாளராக பொறுப்பேற்றபின், பிரியங்காவின் தேர்தல் பிரசார வியூகம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
previous post
Recent posts
கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!
அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
உலகப் பொருளாதாரம் திரும்பியது
உலகப் பொருளாதாரம் திரும்பியது: BRICS இப்போது G7-ஐ விடப் பெரியது! உலகப் பொருளாதாரத்தில் ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் மேற்கத்திய நாடுகளால்...
“இதுதான்”
“இதுதான்”: கனடா $1 டிரில்லியன் திட்டத்தை உறுதிப்படுத்துகிறது – கார்னி டிரம்பின் வர்த்தகப் போரை முடக்குகிறார் ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக...
அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் கனடிய நிறுவனங்கள்
“அமெரிக்கர் எதிர்வினையாற்றுகிறார்: அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் 7 கனடிய நிறுவனங்கள்” என்ற தலைப்பில் ஒரு குறிப்பிட்ட ஆழமான தமிழ்க் கட்டுரை இல்லை. இருப்பினும், இந்தத்...
கனடா டிரம்பிற்கு கட்டணம் விதிக்கிறது
‘இலவசத் தண்ணீர் இல்லை’: கனடா டிரம்பிற்கு ஒவ்வொரு துளி தண்ணீருக்கும் கட்டணம் விதிக்கிறது ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான வர்த்தகப் போர் மேலும்...
ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்.
அமெரிக்காவின் Project 2025: ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்! 2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்க அரசியல் வட்டாரங்களில்...
சீன-ரஷ்யா-இந்திய கூட்டணி: டிரம்பிற்கு ஆபத்தா?
2025 ஆம் ஆண்டு, உலக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான வரிக் கொள்கைகளும், ஏகபோக போக்கும், உலகின் மூன்று...
ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்
தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...




