இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமரசம் ஏற்பட அமைதி காக்கும்படி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,இரு நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், குறித்த தாக்குதல் குறித்து பேசிய கனேடிய பிரதமர்இ
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான தாக்குதல்கள் அப்பகுதியில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும்.
தொடர்ந்து அவர், இந்திய பாகிஸ்தான் பகுதிகளில் அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தவும், தூதரக பேச்சு வார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இருநாடுகளுக்கும் இடையில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட வேண்டும்.
இந்த முயற்சியில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நமது சர்வதேச கூட்டாளிகளுடன் இணைந்து பாடுபட தாங்களும் தயாராக இருக்கிறோம்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றம் குறித்து கனடா மிகுந்த கவலைக்குள்ளாகி இருக்கிறது.
இரண்டு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என்றும் மேலும், ராணுவ தாக்குதல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கனடா வலியுறுத்துகிறது.
உலகமே கை கோர்த்து தீவிரவாதத்திற் கெதிராக போரிடுவதற்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதோடு, அதில் தன் நிலைப்பாட்டிலும் கனடா உறுதியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த பிரச்சினை தொடர்பாக சுமூக தீர்வை எட்டுவதற்காக கனடாவின் வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் உலக நாடுகளின் தலைவர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
previous post
Recent posts
கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!
அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
உலகப் பொருளாதாரம் திரும்பியது
உலகப் பொருளாதாரம் திரும்பியது: BRICS இப்போது G7-ஐ விடப் பெரியது! உலகப் பொருளாதாரத்தில் ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் மேற்கத்திய நாடுகளால்...
“இதுதான்”
“இதுதான்”: கனடா $1 டிரில்லியன் திட்டத்தை உறுதிப்படுத்துகிறது – கார்னி டிரம்பின் வர்த்தகப் போரை முடக்குகிறார் ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக...
அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் கனடிய நிறுவனங்கள்
“அமெரிக்கர் எதிர்வினையாற்றுகிறார்: அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் 7 கனடிய நிறுவனங்கள்” என்ற தலைப்பில் ஒரு குறிப்பிட்ட ஆழமான தமிழ்க் கட்டுரை இல்லை. இருப்பினும், இந்தத்...
கனடா டிரம்பிற்கு கட்டணம் விதிக்கிறது
‘இலவசத் தண்ணீர் இல்லை’: கனடா டிரம்பிற்கு ஒவ்வொரு துளி தண்ணீருக்கும் கட்டணம் விதிக்கிறது ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான வர்த்தகப் போர் மேலும்...
ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்.
அமெரிக்காவின் Project 2025: ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்! 2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்க அரசியல் வட்டாரங்களில்...
சீன-ரஷ்யா-இந்திய கூட்டணி: டிரம்பிற்கு ஆபத்தா?
2025 ஆம் ஆண்டு, உலக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான வரிக் கொள்கைகளும், ஏகபோக போக்கும், உலகின் மூன்று...
ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்
தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...




