Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

களுபோவில மருத்துவமனையின் நிலை குறித்து ஊடகவியலாளர்

களுபோவில மருத்துவமனையில் காணப்படும் நிலை குறித்த தனது சொந்த அனுபவங்களை ஊடகவியலாளர் திலக்சானி மதுவந்தி முக நூலில் அச்சத்தையும் கவலையும் ஏற்படுத்தும் படங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அவர் தனதுபதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தியா குறித்து நான் தெரிவித்த செய்திகளை நான் தற்போது கண்முன்னால் பார்க்கின்றேன்.
தற்போது நேரம் இரவு ஒரு மணி 20 நிமிடம். இது களுபோவில மருத்துவமனையின்  கொவிட் வோர்ட். வோர்ட்டின் ஒரு கட்டிலில் இரண்டு மூன்று நோயாளிகள்.
அவர்கள் முற்றிலும் செயல்இழந்த நிலையில் உள்ளனர்.

வோர்ட்டின் தரையில் கட்டில்களிற்கு கீழே ஒக்சிசனுடன் படுத்திருக்கும் நோயாளிகள் தங்கள் உயிர்களை காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தரையில் உள்ள நோயாளிகள் நடப்பதற்கு அச்சப்படுகின்றனர்.

ஏனைய பாதிக்கப்பட்ட நோயாளிகள்(நூற்றிற்கு மேற்பட்டவர்கள்) வெளியே கதிரைகள் மரங்களிற்கு கீழே காணப்படுகின்றனர். advertisement

தரையில் போர்வையுடனும் போர்வை இல்லாமலும் நோயாளிகள் காணப்படுகின்றன. இன்று காலையில் கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

சில மணிநேரத்திற்கு முன்னர் என் கண்முன்னால் இருவர் உயிரிழந்தனர். மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலேயே பணியாளர்கள் காணப்படுகின்றனர்.
கடவுள்கள் போல அவர்கள் களைப்பின்றி தங்கள் கடமைகளை செய்கின்றனர்.

எனது தாயார் கொரோனாவிற்காக இவ்வாறு போராடிக்கொண்டிருந்தவேளை எனது தந்தை ஒருஒக்சிசன் கருவிக்காக  காத்திருந்தார்.
இதனை விட உதவியற்ற நிலையில்லை.

நாளை நானும் பாதிக்கப்படலாம். நான் சொல்வதற்கு ஒரு விடயம்தான் உள்ளது. கொரோனாவை குறைத்துமதிப்பிடாதீர்கள். உங்களால் முடிந்தவரை அவதானமாகயிருங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கவனமாக கவனித்துக்கொள்ளுங்கள்.

நான் இந்தியா குறித்து தெரிவித்த செய்திகளை இன்று நான் கண்முன்னால் பார்க்கின்றேன்.
கவனமாகயிருங்கள் – கவனமாகயிருங்கள்
திலக்சானி மதுவந்தி – என அவர் பதிவிட்டுள்ளார்.

Recent posts

கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
Thamil Paarvai

கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!

அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
Thamil Paarvai

உலகப் பொருளாதாரம் திரும்பியது

உலகப் பொருளாதாரம் திரும்பியது: BRICS இப்போது G7-ஐ விடப் பெரியது! உலகப் பொருளாதாரத்தில் ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் மேற்கத்திய நாடுகளால்...
Thamil Paarvai

“இதுதான்”

“இதுதான்”: கனடா $1 டிரில்லியன் திட்டத்தை உறுதிப்படுத்துகிறது – கார்னி டிரம்பின் வர்த்தகப் போரை முடக்குகிறார் ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக...
Thamil Paarvai

அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் கனடிய நிறுவனங்கள்

“அமெரிக்கர் எதிர்வினையாற்றுகிறார்: அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் 7 கனடிய நிறுவனங்கள்” என்ற தலைப்பில் ஒரு குறிப்பிட்ட ஆழமான தமிழ்க் கட்டுரை இல்லை. இருப்பினும், இந்தத்...
Thamil Paarvai

கனடா டிரம்பிற்கு கட்டணம் விதிக்கிறது

‘இலவசத் தண்ணீர் இல்லை’: கனடா டிரம்பிற்கு ஒவ்வொரு துளி தண்ணீருக்கும் கட்டணம் விதிக்கிறது ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான வர்த்தகப் போர் மேலும்...
Thamil Paarvai

ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்.

அமெரிக்காவின் Project 2025: ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்! 2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்க அரசியல் வட்டாரங்களில்...
Thamil Paarvai

சீன-ரஷ்யா-இந்திய கூட்டணி: டிரம்பிற்கு ஆபத்தா?

2025 ஆம் ஆண்டு, உலக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான வரிக் கொள்கைகளும், ஏகபோக போக்கும், உலகின் மூன்று...
Thamil Paarvai

ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்

தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...
Thamil Paarvai

Leave a Comment