Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை.

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் அதன் அங்கத்துவ கட்சிகள் ஒன்றிணைந்தே முடிவுகளை அறிவிக்கும் என்று ரெலோவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

ரெலோவின் தலைமைக்குழு கூட்டம் வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை கூட்டமைப்பில் உள்ள அனைத்து அங்கத்துவ கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானித்த பின்னரே அறிவிக்கும். அதுவே இறுதி முடிவாகவும் இருக்கும். ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்குள்ளே இருக்கக்கூடிய அபிப்பிராயங்களை தெரிவிக்கலாம். என்றார்.

கூட்டமைப்பின் பேச்சாளர் பதவி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது,

நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் சம்மந்தன் ஐயாவை தலைவராக நான் தெரிவுசெய்தேன். சுமந்திரனை கூட்டமைப்பின் பேச்சாளராக நியமிக்கும் போது அதில் தான் இருக்கப்போவதில்லை என்று சிறிதரனின் பெயரை அவர் பரிந்துரைத்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் என்னுடைய பெயரை முன்மொழிந்ததால் சர்ச்சை ஒன்று உருவானது.இன்றுவரைக்கும் அதற்கு தீர்வை எட்டுகின்ற வாய்ப்பு கிட்டவில்லை. எந்த ஒரு கட்சியும் எல்லாவற்றையும் ஆளுமை செய்கின்ற வகையில் கூட்டமைப்பு இருக்கக்கூடாது. இப்படியான சிறிய விடயங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதை பிரதானமானவிடயமாக பார்க்கவேண்டும். ஜனநாயகம் என்பது அந்த மரபுகளுக்கு உட்பட்டதாகத்தான் இருக்கவேண்டும்.

இதனை விரைவில் தீர்ப்பதற்கு சம்பந்தன் ஐயாவிடமும் கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம். ஆகவே அடுத்த நாடாளுமன்ற குழுக்கூட்டத்திலே இந்தவிடயத்தை ஆராய இருக்கிறோம். கூட்டமைப்பை மக்கள் ஆதரிக்கின்றார்கள் என்று கூறிக்கொண்டு எந்த ஒரு கட்சியும் அதிகாரத்தை செலுத்தும் நிலைப்பாட்டில் இருக்கக்கூடாது. மக்களின்விருப்பம் ஐக்கியம் அதனையே அனைத்து கட்சிகளும் விரும்புகிறது என்றார்.

Recent posts

கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
Thamil Paarvai

கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!

அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
Thamil Paarvai

உலகப் பொருளாதாரம் திரும்பியது

உலகப் பொருளாதாரம் திரும்பியது: BRICS இப்போது G7-ஐ விடப் பெரியது! உலகப் பொருளாதாரத்தில் ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் மேற்கத்திய நாடுகளால்...
Thamil Paarvai

“இதுதான்”

“இதுதான்”: கனடா $1 டிரில்லியன் திட்டத்தை உறுதிப்படுத்துகிறது – கார்னி டிரம்பின் வர்த்தகப் போரை முடக்குகிறார் ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக...
Thamil Paarvai

அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் கனடிய நிறுவனங்கள்

“அமெரிக்கர் எதிர்வினையாற்றுகிறார்: அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் 7 கனடிய நிறுவனங்கள்” என்ற தலைப்பில் ஒரு குறிப்பிட்ட ஆழமான தமிழ்க் கட்டுரை இல்லை. இருப்பினும், இந்தத்...
Thamil Paarvai

கனடா டிரம்பிற்கு கட்டணம் விதிக்கிறது

‘இலவசத் தண்ணீர் இல்லை’: கனடா டிரம்பிற்கு ஒவ்வொரு துளி தண்ணீருக்கும் கட்டணம் விதிக்கிறது ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான வர்த்தகப் போர் மேலும்...
Thamil Paarvai

ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்.

அமெரிக்காவின் Project 2025: ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்! 2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்க அரசியல் வட்டாரங்களில்...
Thamil Paarvai

சீன-ரஷ்யா-இந்திய கூட்டணி: டிரம்பிற்கு ஆபத்தா?

2025 ஆம் ஆண்டு, உலக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான வரிக் கொள்கைகளும், ஏகபோக போக்கும், உலகின் மூன்று...
Thamil Paarvai

ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்

தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...
Thamil Paarvai

Leave a Comment