இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

கோர விபத்து மட்டக்களப்பில்! விபத்தில் தீக்கிரையான 3 இளைஞர்கள்

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற தீ விபத்திலேயே இவர்கள் சிக்குண்டு தீக்கிரையாகியுள்ளனர்.

காயமடைந்த மூவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு வந்தாறுமூலை சந்தைக்கு அருகில் மோட்டார் சைக்கிள்கள் மூன்று ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததில் தீயில் கருகி உயிரிழந்த ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.

குறித்த விபத்து நேற்று இரவு 7.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்

இந்த விபத்தில் வேப்பவுஸ் வீதி பலாச்சோலை வந்தாறுமூலையைச் சேர்ந்த 22 வயதுடைய மோகன் மயூரன், வேப்பவுஸ் 3 ம் குறுக்கு வீதி பலாச்சோலை வந்தாறுமூலையைச் சேர்ந்த 23 வயதுடைய முருகுப்பிள்ளை பவித்திரன் ஆகியோர் உயிரிழந்ததுடன் தீப்பற்றி எரிந்தவர் அடையாளம் காணப்படவில்லை .

வாழைச்சேனை பகுதியில் இருந்து மட்டக்களப்பை நோக்கி இரவு 7.30 மணிக்கு 4 பேர் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சமாந்தரமாக ஓட்டிச் சென்று கொண்டிருந்த போது இரு மோட்டர் சைக்கிள்களும் விபத்துக்குள்ளன நிலையில் பின் பகுதியல் வந்த மோட்டர் சைக்கிளில் வந்த இருவரும் அதன் மீது மோதி விபத்துக்குள்ளானது

இந்த நிலையில் இரு மோட்டர்சைக்கிள் தீப்பற்றி எரிந்ததில் அதில் ஒருவர் தீக்கிரையானதுடன், ஏனைய இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர்களின் சடலங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recent posts

கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
Thamil Paarvai

கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!

அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
Thamil Paarvai

உலகப் பொருளாதாரம் திரும்பியது

உலகப் பொருளாதாரம் திரும்பியது: BRICS இப்போது G7-ஐ விடப் பெரியது! உலகப் பொருளாதாரத்தில் ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் மேற்கத்திய நாடுகளால்...
Thamil Paarvai

“இதுதான்”

“இதுதான்”: கனடா $1 டிரில்லியன் திட்டத்தை உறுதிப்படுத்துகிறது – கார்னி டிரம்பின் வர்த்தகப் போரை முடக்குகிறார் ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக...
Thamil Paarvai

அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் கனடிய நிறுவனங்கள்

“அமெரிக்கர் எதிர்வினையாற்றுகிறார்: அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் 7 கனடிய நிறுவனங்கள்” என்ற தலைப்பில் ஒரு குறிப்பிட்ட ஆழமான தமிழ்க் கட்டுரை இல்லை. இருப்பினும், இந்தத்...
Thamil Paarvai

கனடா டிரம்பிற்கு கட்டணம் விதிக்கிறது

‘இலவசத் தண்ணீர் இல்லை’: கனடா டிரம்பிற்கு ஒவ்வொரு துளி தண்ணீருக்கும் கட்டணம் விதிக்கிறது ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான வர்த்தகப் போர் மேலும்...
Thamil Paarvai

ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்.

அமெரிக்காவின் Project 2025: ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்! 2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்க அரசியல் வட்டாரங்களில்...
Thamil Paarvai

சீன-ரஷ்யா-இந்திய கூட்டணி: டிரம்பிற்கு ஆபத்தா?

2025 ஆம் ஆண்டு, உலக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான வரிக் கொள்கைகளும், ஏகபோக போக்கும், உலகின் மூன்று...
Thamil Paarvai

ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்

தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...
Thamil Paarvai

Leave a Comment