புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார். கடந்த 2014-ம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மனோகர் பாரிக்கர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார். ஆனால், மனோகர் பாரிக்கர் அப்பதவியை துறந்துவிட்டு தனது சொந்த மாநிலமான கோவாவுக்கு முதலமைச்சர் ஆனார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனோகர் பாரிக்கர், மும்பை, டெல்லி நகரங்களில் மற்றும் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுவந்தார். இதைத் தொடர்ந்து கோவா திரும்பிய அவர் அரசுப் பணிகளில் ஈடுபட்டார். தற்போதும் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே, மனோகர் பாரிக்கரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கோவா முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ள நிலையில், மனோகர் பாரிக்கர் காலமானார் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். இதனையடுத்து பாஜக தலைவர்கள் கோவா நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர். இதற்கிடையே, கோவா முன்னாள் துணை முதல்வரும், வடக்கு கோவா மபுசா தொகுதி பா.ஜ எம்.எல்.ஏ.வுமான பிரான்சிஸ் டிசோசா நேற்று முன்தினம் இறந்தார். இதனால் கோவா சட்டப்பேரவையில் பா.ஜ.வின் பலம் 13 ஆக குறைந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியிடம் 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்நிலையில், கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹாவுக்கு, கோவா எதிர்க்கட்சி தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எம்.எல்.ஏ பிரான்சிஸ் டிசோசா சோகமான மரணத்தால், சட்டப்பேரவையில் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பா.ஜ.வி.ன் பலம் குறைந்துவிட்டது. அந்த கட்சி நீண்ட காலமாகவே மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. பா.ஜ.வின் பலம் மேலும் குறையலாம் என்பதால், சிறுபான்மை அரசு தொடர்ந்து ஆட்சியில் இருக்க அனுமதிக்கக் கூடாது. அதனால் பா.ஜ அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு, பெரும்பான்மை உள்ள காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். அதை விடுத்து இங்கு ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அது சட்டவிரோதமாக இருக்கும். அதை எதிர்த்து வழக்கு தொடர்வோம். இவ்வாறு சந்திரகாந்த காவ்லேகர் கூறியுள்ளார். கடிதம் கோவா ஆளுநருக்கு நேற்று அனுப்பப்பட்டது. ஆட்சி அமைப்பது தொடர்பாக உரிமை கோர தங்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Recent posts
கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.
கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால், தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது
அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.
கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.
“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி
கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்
அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...




