மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து பாஜகவை சேர்ந்த பிரமோத் சாவந்த் கோவா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக பாரிக்கர் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். டெல்லி, மும்பையில் சிகிச்சை பெற்ற அவர், அமெரிக்காவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு நாடு திரும்பினார். இதன்பின் அரசு நிர்வாகத்தை கவனித்த பாரிக்கர், மூக்கில் சுவாச உதவி உபகரணங்களுடன் மாநில சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்து மிகவும் சிரமப்பட்டு உரையாற்றினார். தன்னை முதல்வர் பதவியிலிருந்து விடுவிக்குமாறு கட்சி தலைமையிடம் வலியுறுத்தியும் அவர் மாற்றப்படவில்லை. அதன்பிறகும் அவர் தொடர் சிகிச்சையில் இருந்ததால், அரசு நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், தலைநகர் பனாஜி அருகேயுள்ள டோனா பவுலாவில் உள்ள வீட்டில் தங்கியிருந்த பாரிக்கரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதாகவும், டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் கோவா முதல்வர் அலுவலகம் டிவிட்டரில் நேற்று மாலை தகவல் வெளியானது. அடுத்த சில மணி நேரங்களில், மாலை 6.40 மணிக்கு பாரிக்கர் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனை தொடர்ந்து கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன், கோவாவில் பாஜ எம்எல்ஏ பிரான்சிஸ் டிசோசா இறந்ததைத் தொடர்ந்து ஆளும் பாஜவுக்கு தனிப்பெரும்பான்மை குறைந்தது. பாஜ எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 13 ஆக குறைந்தது. தற்போது பாரிக்கரும் காலமானதைத் தொடர்ந்து, பாஜவின் பலம் 12 ஆக சரிந்துள்ளது. ஏற்கனவே, 14 எம்எல்ஏக்களை கொண்டுள்ள காங்கிரஸ், தங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளது. மேலும், கோவா ஆளுநர் மிருதுளாவை சந்தித்து கோவா மாநிலத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று உரிமை கோரியது. இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், பேட்டியளித்த கோவா மாநில பாஜக தலைவர் வினோ டெண்டுல்கர், கோவா சட்டப்பேரவை சபாநாயகர் பிரமோத் சாவந்த் அடுத்த கோவா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Recent posts
கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!
அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
உலகப் பொருளாதாரம் திரும்பியது
உலகப் பொருளாதாரம் திரும்பியது: BRICS இப்போது G7-ஐ விடப் பெரியது! உலகப் பொருளாதாரத்தில் ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் மேற்கத்திய நாடுகளால்...
“இதுதான்”
“இதுதான்”: கனடா $1 டிரில்லியன் திட்டத்தை உறுதிப்படுத்துகிறது – கார்னி டிரம்பின் வர்த்தகப் போரை முடக்குகிறார் ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக...
அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் கனடிய நிறுவனங்கள்
“அமெரிக்கர் எதிர்வினையாற்றுகிறார்: அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் 7 கனடிய நிறுவனங்கள்” என்ற தலைப்பில் ஒரு குறிப்பிட்ட ஆழமான தமிழ்க் கட்டுரை இல்லை. இருப்பினும், இந்தத்...
கனடா டிரம்பிற்கு கட்டணம் விதிக்கிறது
‘இலவசத் தண்ணீர் இல்லை’: கனடா டிரம்பிற்கு ஒவ்வொரு துளி தண்ணீருக்கும் கட்டணம் விதிக்கிறது ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான வர்த்தகப் போர் மேலும்...
ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்.
அமெரிக்காவின் Project 2025: ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்! 2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்க அரசியல் வட்டாரங்களில்...
சீன-ரஷ்யா-இந்திய கூட்டணி: டிரம்பிற்கு ஆபத்தா?
2025 ஆம் ஆண்டு, உலக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான வரிக் கொள்கைகளும், ஏகபோக போக்கும், உலகின் மூன்று...
ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்
தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...




