உலகம் செய்திகள் புதிய செய்திகள்

ட்ரம்பை எதிர்த்து 5 பெண்களின் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் 03 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி ட்ரம்ப் போட்டியிட்டால் அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆவதற்கு பலத்த போட்டி நிலவுகிறது.
தற்போது வரை அக்கட்சியை சேர்ந்த 12 பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களில் 5 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி. கமலா ஹாரிஸ், இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், முதல் இந்து எம்.பி.யுமான துளசி கப்பார்ட், நியூயார்க் எம்.பி. கிர்ஸ்டன் கில் பிராண்ட், மாசசூசெட்ஸ் எம்.பி. எலிசபெத் வாரன் மற்றும் மின்னசோட்டா எம்.பி. அமி குளோப்சர் ஆகிய 5 பெண்கள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கிறார்கள்.
அமெரிக்க வரலாற்றில் இதுவரை பெண் ஒருவர் ஜனாதிபதி ஆனது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி கிளிண்டனின் மனைவி ஹலாரி கிளிண்டன் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருந்தால் முதல் பெண் ஜனாதிபதி என்ற அந்தஸ்தை பெற்றிருப்பார்.
இந்த நிலையில் ஜனநாயக கட்சியில் களத்தில் உள்ள 5 பெண்களில் ஒருவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டால் ட்ரம்ப் மீண்டும் ஒரு பெண்ணை எதிர்த்து போட்டியிட வேண்டிய சூழல் ஏற்படும்.
ட்ரம்ப் பெண்களை விமர்சிப்பதை வழக்கமாக கொண்டிருப்பதால், அவருக்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுவதாக கூறப்படுகிறது.
எனவே ட்ரம்பை எதிர்த்து போட்டியிட பெண் வேட்பாளரையே ஜனநாயக கட்சி தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள பெண்களை ட்ரம்ப் விமர்சித்து வருகிறார்.
மாசசூசெட்ஸ் எம்.பி. எலிசபெத் வாரன் குறித்து அவர் கூறுகையில், “அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டவர் என்கிற ஒரு தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு எலிசபெத் வாரன், தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். இதை சுட்டிக்காட்டி அவர் வாக்குகளை பெற முடியாது” என்றார்.
அதே போல் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு போட்டியிடும் மற்ற பெண்களான கிர்ஸ்டன் கில் பிராண்ட், அமி குளோப்சர், துளசி கப்பார்ட் ஆகியோரையும் ட்ரம்ப் விமர்சிக்க தவறவில்லை.
அதே சமயம் இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிசை சிறந்த போட்டியாளர் என ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment