கனடா செய்திகள்

தடுப்பு காவலில் வைக்கப்பட்ட 2 கனேடியர்கள்… கவனம் செலுத்துவதாக அமெரிக்க தூதர் தகவல்

சட்டவிரோதமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள 2 கனேடியர்கள் தொடர்பாக அமெரிக்கா கூடிய கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்கள் தொடர்பாக அமெரிக்க கூடிய கவனம் செலுத்தி வருவதாக கனடாவுக்கான அமெரிக்க தூதுவர் கெல்லி க்ராஃப்ட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

முன்னாள் இராஜதந்திரி மைக்கேல் கோவ்ரிக் மற்றும் தொழில் முனைவர் மைக்கேல் ஸ்போவர் ஆகியோரின் கைதுகள் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் தன்னிச்சையான கைதுகளை முடிவுக்கு கொண்டுவருமாறு சீனாவை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க தூதுவர் பொதுவௌியில் கருத்து வௌியிட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி சீனா இரண்டு கனடா நாட்டு பிரமுகர்களை காரணங்கள் எதுவும் இன்றி கைது செய்தது.

முன்னதாக அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் சீனாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியான மெங் வான்ஷோவை கனடா கைது செய்தமைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இந்த கைது இடம்பெற்றிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 கனேடியர்கள், தடுப்புக்காவல், சட்டவிரோதம், அமெரிக்கா தூதர்.

Recent posts

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

கடுமையான உறைமழை எச்சரிக்கை

கனடாவின் ஒன்டாரியோ, கியூபெக் மற்றும் அட்லாண்டிக் மாகாணங்களின் பல பகுதிகளுக்கு கடுமையான உறைமழை (Freezing Rain) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது....
Thamil Paarvai

Leave a Comment