மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் முதல் பட்டியலை மத்திய அமைச்சர் ஜெ.பி நட்டா வெளியிட்டார். பாராளுமன்றத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் நடந்தபோது, மார்ச் மாதம் 5-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது. எனவே இந்த ஆண்டும் மார்ச் 5-ம் தேதி தேர்தல் அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி செய்தியாளர்களிடம் பேட்டிளித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, 17-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்தார். மார்ச் 19-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் மார்ச் 26-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 27-ம் தேதி வேட்புமனு பரிசலீனை செய்யப்படும் என்றும் வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 29ம் தேதி கடைசி நாள், தமிழகத்தில் மே-23 தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் முதல் 182 வேட்பாளர்கள் பட்டியலை மத்திய அமைச்சர் ஜெ.பி நட்டா வெளியிட்டார்.வேட்பாளர்கள் பெயர் மற்றும் தொகுதி: 1. வாரணாசி -பிரதமர் மோடி2.காந்தி நகர்- அமித் ஷா3.லக்னோ- ராஜ்நாத் சிங் 4. நாக்பூர்- நிதின் கட்கரிதமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்: 1. கன்னியாகுமரி : பொன் ராதாகிருஷ்ணன்2. தூத்துக்குடி : தமிழிசை சௌந்தராஜன்3. கோவை : சி.பி ராதாகிருஷ்ணன் 4. சிவகங்கை : எச்.ராஜா5. ராமநாதபுரம் : நயினார் நாகேந்திரன்
Recent posts
தமிழர் DNA ஆய்வுகள் குறித்த அதிர்ச்சிகரமான உண்மைகள்
தமிழர்களின் மரபணு வரலாறு குறித்து உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் DNA-க்களை...
கனேடிய தரை எல்லையில் ஐரோப்பா: “விஸ்கி போரின்” விளைவு
டென்மார்க்குடனான 49 ஆண்டு கால ஹான்ஸ் தீவு பிரச்சினை முடிவுக்கு வந்ததன் மூலம், கனடா-ஐரோப்பா இடையே முதல் தரை எல்லை உருவாகியுள்ளது. இந்த வரலாற்று சம்பவம், தற்போது...
கனடாவின் “இரும்புத் தண்டுவடம்” வாஷிங்டனை அதிரவைக்கிறது
கனடியப் பிரதமர் மார்க் கார்னி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் $1 டிரில்லியன் (C$1 டிரில்லியன்) மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் மகத்தான திட்டத்தை அறிவித்துள்ளார்....
ட்ரம்பின் $5,000 அறிவிப்பு பரபரப்பு
2026 செப்டம்பர் 11 — இன்று அமெரிக்கா 9/11 தாக்குதலின் 25 ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கிறது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு அதிபர் டொனால்ட்...
நூற்றாண்டு கூட்டாண்மை பிறந்தது
2026 செப்டம்பர் 10 ஆம் தேதி, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கரி நகரில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. கனடா பிரதமர் மார்க் கார்னியும்,...
டிரம்பின் வர்த்தகப் போர் உடைந்து விழுகிறது
டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர் முன்பு நினைத்ததைப் போல வெற்றிகரமாக நடக்கவில்லை. “பெரிய புலி எப்போதும் வெற்றி பெறும்” என்ற அவரது கோட்பாடு தோல்வியடைந்து வருகிறது. கனடா...
கனடா அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடிய அமைச்சரவை, ஆல்பர்ட்டா மாகாணத்தின் பான்ஃப் நகரில் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தை...
கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!
அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...




