Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

புதிய COVID விகார மாற்றமும் அதிக ஆபத்தான சந்தர்ப்பங்களும்…

வைரஸ் தொற்று நோய்களின் ஒரு சிறப்பு அம்சம் யாதெனில்,  காலத்திற்குக்காலம் அதன் தோற்றத்தில் ஏற்படும் மாற்றம் ஆகும். வைரசின் ஒரு புரதத்தில் ஏற்படும் மாற்றம் கூட அதன் செயற்பாட்டில்  குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். இம்மாற்றத்தினால்   வைரஸ் பரவும் வேகம்  துரிதப்படுத்தப் படக் கூடும்.  அத்துடன் இது வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் நோயின் தீவிரத்தையும் அதிகரிக்கவும் கூடும்.

 தற்போது இலங்கையில் காணப்படும் COVID19 வைரஸ்களில் B.1.1.7 உட்பட பல்வேறு வகையான புதிய விகாரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனால், தொற்று வழக்கத்தை விட வேகமாக பரவவும் மட்டுமன்றி  கடுமையான நோய்  அறிகுறிகளையும்  ஏற்படுத்தவும் கூடும்.

உலகெங்கிலும் சில காலமாக நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, கோவிட் வைரஸ், குறித்த இடத்தில்  விரைவாக பரவுவதற்கு மூன்று முக்கிய காரணிகள் உள்ளன.  புதிய கோவிட் வகைகளுக்கும் இக்காரணி பொதுவானவை.

வைரசின் மாற்ற வகைகள் எவ்வாறிருப்பினும் அவற்றைப்  பொருட்படுத்தாமல், உங்களைப் பாதுகாத்துக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வாபத்துக்  காரணிகளைக் கொண்ட இடங்களைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்ப்பதேயாகும்.

இந்த கோவிட் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகள் யாவை?

1. கூட்டம் அதிகமாக சேரும் இடமாயிருத்தல் –    எவ்விடத்தில் சனநெரிசல் அதிகரிக்கின்றதோ அவ்விடத்தில் , ​​COVID தொற்றாளர்  இருக்கக்கூடிய வாய்ப்பு  அதிகரிக்கிறது, இதனால் COVID தொற்று  ஏற்படும்  அபாயமும் அதிகரிக்கிறது.

2. மக்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருக்கும் சந்தர்ப்பங்கள்  – குறிப்பாக ஒருவருக்கொருவர் அருகருகே  நெருக்கமாக இருக்கும்போது, ​கதைக்கும் போது ,  உண்ணும் போது, பருகும்போது.

3. போதிய காற்றோட்டமற்ற  மூடப்பட்ட இடத்தில் இருப்பது – மூடப்பட்ட இடங்களில் கோவிட் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு  விகிதம் வெளிப்புற காற்றோட்டமான  இடங்களை விட அதிகம் என்பது தெளிவு. இது தொடர்ந்தேட்சியாக  கதைக்கப்படவில்லை எனினும், இது கோவிட் பரவலில் செல்வாக்கான  மற்றொரு மிக முக்கியமான பிரபலமான காரணியாகும்.

இந்த மூன்று காரணிகளில் ஒன்றாவது நீங்கள் இருக்கும் இடத்தில்  இருந்தால் அங்கு , வேறு எங்கும் இல்லாததை விட  COVID தொற்று உருவாகும் அதிக வாய்ப்புள்ளது.

இந்த காரணிகளில் ஒன்றுக்கு மேற்பட்டவை ஒரு இடத்தில் காணப்படின், அத்தகைய இடங்களில் COVID பரவுவது இன்னும் விரைவாக நிகழும்.

 எனவே, இதுபோன்ற இடங்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டியது அவசியம். சில அவசர காரணங்களுக்காக நீங்கள் அத்தகைய இடத்திற்குச் செல்ல வேண்டியிருந்தால், அங்கு செலவழிக்கும் நேரத்தைக் குறைப்பதன் மூலம் ஆபத்தை ஓரளவிற்கு குறைக்கலாம். குறிப்பாக இது போன்ற அதிக ஆபத்து நிலவும் காலங்களில், இக்காரணிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை இருக்கும் இடங்களை இயலுமானவரை  தவிர்ப்பது அவசியமாகும்.

 அவ்வாறே, உங்கள் கைகளை சுத்தமாக வைத்திருப்பது மற்றும் முகக் கவசங்களை தவறாமல் அணிவது COVID பரவும் அபாயத்தை வெகுவாகக் குறைக்கும். இருப்பினும், இச் செயல்பாடுகள் மேலே உள்ள காரணிகளுள்ள இடங்களில்  அதிக நேரத்திற்கு தரித்து இருந்தால் தொற்றின்  அபாயத்தை முற்றிலுமாக இல்லாமற் செய்யாது.

 நாடு முழுவதும் கொவிற் நோய் வேகமாக பரவி வரும் இந்த  நேரத்தில், உங்களினதும் உங்கள் அன்புக்கு உரியோரினதும் பாதுகாப்பைக் கருதி  மேற்கண்ட ஆபத்துக் காரணிகளைக் கொண்ட இடங்களை  முடிந்தவரை தவிர்க்க மறக்காதீர்கள். மேலும், உங்கள் அன்புக்குரியவர்களின் பாதுகாப்புக் கருதி  ஆபத்துக் காரணிகளைப் பற்றிய அறிவை முடிந்தவரை பகிர்ந்து கொள்ளுங்கள் …

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment