இந்திய விமானத்தில் மது கேட்டு தகராறு செய்த சர்வதேச மனித உரிமை ஆணைய பெண் வக்கீலுக்கு லண்டன் நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை விதித்துள்ளது. கடந்தாண்டு நவம்பரில் மும்பையில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் சர்வதேச மனித உரிமை ஆணையத்தின் பெண் வழக்கறிஞர்
சைமன் பர்ன்ஸ் பயணம் செய்தார். இவர் வடக்கு அயர்லாந்தில் பிறந்தவர், இங்கிலாந்தில் வசித்து வருகிறார். விமானத்தில் ஏறி அமர்ந்தது முதலே, சைமன் மது அருந்தினார். விமான விதிமுறைகளின்படி, 2 அல்லது 3 பெக் மது மற்றும் 3-4 கிளாஸ் ஒயின் வழங்கப்படும். ஆனால், சைமன் ஏற்கனவே நான்கு குவார்ட்டர் பாட்டில் ஒயின் அருந்தியதாக தெரிகிறது. மேலும், தொடர்ந்து அவர் ஒயின் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு விமான ஊழியர் மறுத்ததால் அவருடன் சைமன் தகராறில் ஈடுபட்டார். ஊழியரின் முகத்தில் எச்சில் துப்பினார். இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில், ஹீத்ரோ விமான நிலையத்தில் சைமன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு லண்டன் ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் விமானத்தில் அதிகளவு மது அருந்தியது, விமான ஊழியரை அவமானப்படுத்திய குற்றத்திற்காக சைமனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
Recent posts
கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!
அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
உலகப் பொருளாதாரம் திரும்பியது
உலகப் பொருளாதாரம் திரும்பியது: BRICS இப்போது G7-ஐ விடப் பெரியது! உலகப் பொருளாதாரத்தில் ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் மேற்கத்திய நாடுகளால்...
“இதுதான்”
“இதுதான்”: கனடா $1 டிரில்லியன் திட்டத்தை உறுதிப்படுத்துகிறது – கார்னி டிரம்பின் வர்த்தகப் போரை முடக்குகிறார் ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக...
அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் கனடிய நிறுவனங்கள்
“அமெரிக்கர் எதிர்வினையாற்றுகிறார்: அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் 7 கனடிய நிறுவனங்கள்” என்ற தலைப்பில் ஒரு குறிப்பிட்ட ஆழமான தமிழ்க் கட்டுரை இல்லை. இருப்பினும், இந்தத்...
கனடா டிரம்பிற்கு கட்டணம் விதிக்கிறது
‘இலவசத் தண்ணீர் இல்லை’: கனடா டிரம்பிற்கு ஒவ்வொரு துளி தண்ணீருக்கும் கட்டணம் விதிக்கிறது ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான வர்த்தகப் போர் மேலும்...
ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்.
அமெரிக்காவின் Project 2025: ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்! 2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்க அரசியல் வட்டாரங்களில்...
சீன-ரஷ்யா-இந்திய கூட்டணி: டிரம்பிற்கு ஆபத்தா?
2025 ஆம் ஆண்டு, உலக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான வரிக் கொள்கைகளும், ஏகபோக போக்கும், உலகின் மூன்று...
ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்
தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...




