இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

மிராஜ்- 2000 போர் விமானம் அதிரடித் தாக்குதல்!

எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே செயல்பட்டுவந்த தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படையினர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தகர்த்தெறிந்தனர்.

இதில் புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. விமானப்படையின் இந்த அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் யூசுப் அசாரும் கொல்லப்பட்டான். யூசுப் அசார் 1999-ம் ஆண்டு ஏர்பஸ் IC 814 விமானத்தை கடத்தியவன் ஆவான். புல்வாமா தாக்குதல் நடைபெற்ற 12 நாட்களில் இந்திய விமானப்படை பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி விமானப்படை நடத்திய தாக்குதலில் சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலகோட் என்ற பகுதியில் நடத்தப்பட்டது. அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமான படைக்கு சொந்தமான 12 மிராஜ் 2000 ரக விமானங்கள் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை கடந்து தாக்குதல் நடத்தின. சுமார் 1000 கிலோ வெடிபொருட்களை வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் பாலகோட்டில் அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்திருந்த ஒரு தீவிரவாதிகள் முகாமை 6 முறை குண்டுவீசி தகர்க்கப்பட்டது. 3 தீவிரவாதிகள் முகாம்களை இந்திய விமானப்படை 90 வினாடிகளில் அழித்தது. ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் மிகப்பெரிய பயிற்சி முகாம் விமானப்படை தாக்குதலில் தகர்க்கப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்ட தீவிரவாத முகாம்களை இந்திய புலனாய்வு அமைப்பு கண்டறிந்ததாகவும், மேலும் இந்த முகாம்கள் பொதுமக்கள் வாழும் பகுதியில் இருந்து வெகுதொலைவில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு புல்வாமா தாக்குதலை போல் மீண்டும் ஒரு கொடூர தாக்குதலை அரங்கேற்ற திட்டமிட்டிருந்ததாகவும்இ அதற்கான பயிற்சி முகாம் நடத்தி வந்துள்ளது அரசுக்கு தெரியவந்தது. மீண்டும் ஒரு தாக்குதலை நிகழ்த்த தீவிரவாதிகள் திட்டமிட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானப்படை தாக்குதல் நடத்தியதாக வெளியுறவுத்துறை செயலர் தெரிவித்தார். இந்த தாக்குதலில் ஏராளமான ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள், மூத்த கமாண்டோக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் டர்ஹெரிவிக்கின்றன. ழூ 1971-க்கு பின் எல்லை தாண்டி இந்திய விமானப்படை தாக்குதல் நடத்துவது இதுவே முதன்முறையாகும்.

Recent posts

ட்ரம்பின் $5,000 அறிவிப்பு பரபரப்பு

2026 செப்டம்பர் 11 — இன்று அமெரிக்கா 9/11 தாக்குதலின் 25 ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கிறது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு அதிபர் டொனால்ட்...
Thamil Paarvai

நூற்றாண்டு கூட்டாண்மை பிறந்தது

2026 செப்டம்பர் 10 ஆம் தேதி, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கரி நகரில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. கனடா பிரதமர் மார்க் கார்னியும்,...
Thamil Paarvai

டிரம்பின் வர்த்தகப் போர் உடைந்து விழுகிறது

டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர் முன்பு நினைத்ததைப் போல வெற்றிகரமாக நடக்கவில்லை. “பெரிய புலி எப்போதும் வெற்றி பெறும்” என்ற அவரது கோட்பாடு தோல்வியடைந்து வருகிறது. கனடா...
Thamil Paarvai

கனடா அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடிய அமைச்சரவை, ஆல்பர்ட்டா மாகாணத்தின் பான்ஃப் நகரில் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தை...
Thamil Paarvai

கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
Thamil Paarvai

கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!

அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
Thamil Paarvai

உலகப் பொருளாதாரம் திரும்பியது

உலகப் பொருளாதாரம் திரும்பியது: BRICS இப்போது G7-ஐ விடப் பெரியது! உலகப் பொருளாதாரத்தில் ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் மேற்கத்திய நாடுகளால்...
Thamil Paarvai

“இதுதான்”

“இதுதான்”: கனடா $1 டிரில்லியன் திட்டத்தை உறுதிப்படுத்துகிறது – கார்னி டிரம்பின் வர்த்தகப் போரை முடக்குகிறார் ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக...
Thamil Paarvai

அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் கனடிய நிறுவனங்கள்

“அமெரிக்கர் எதிர்வினையாற்றுகிறார்: அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் 7 கனடிய நிறுவனங்கள்” என்ற தலைப்பில் ஒரு குறிப்பிட்ட ஆழமான தமிழ்க் கட்டுரை இல்லை. இருப்பினும், இந்தத்...
Thamil Paarvai

Leave a Comment