Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தமது மனைவியான மெலிண்டாவை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

உலகப் பணக்காரர்களில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தமது மனைவியை விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தமது மனைவியான மெலிண்டாவை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

இதனால் நீண்ட 27 ஆண்டு கால திருமணம் வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், இது மிகுந்த ஆலோசனைகளுக்கு பின்னர் எடுக்கப்பட்ட முடிவு எனவும் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

 கடந்த 1975ம் ஆண்டு பால் ஆலன் உடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கிய காலத்தில் அதன் தலைமை செயல் அதிகாரியாக பில் கேட்ஸ் செயல்பட்டார்.

தொடர்ந்து, அதன் தலைவர் மற்றும் தலைமை மென்பொருள் வடிவமைப்பாளர் ஆகிய பதவிகளிலும் இருந்துள்ளார். குறித்த நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த மெலிண்டாவுடன் நட்பாக பழகிய பில் கேட்ஸ் பின்னர் அந்த உறவு ஹவாயில் வைத்து திருமணம் செய்து கொள்ளும் நிலைக்கு உயர்ந்தது.

அதன்பின்னர், கடந்த 2000ம் ஆண்டு பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

லாபநோக்கு இல்லாத இதன் வழியே கல்வி, பாலின சமத்துவம் மற்றும் சுகாதார நலம் போன்ற சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், 27 ஆண்டுகளுக்கு பிறகு பில் மற்றும் மெலிண்டா தம்பதி விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக பில் கேட்ஸ் தம்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம். உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி, அதனால் அனைத்துத் தரப்பு மக்களும் சுகாதாரமுடன் வாழ்வதற்கான வழிகள் செய்து தரப்பட்டுள்ளன.

இந்த பணியில் இணைந்து தொடர இருக்கிறோம். எனினும், எங்களது திருமண வாழ்வை முடித்துக் கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

எங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து, தம்பதியாக வளர்ச்சி அடைவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளனர்.

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment