இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

அதிகரிப்பு… தமிழகத்தின் கடன் தொகை அதிகரிப்பு… பட்ஜெட்டில் தகவல்

அதிகரித்துள்ளது… அதிகரித்துள்ளது… தமிழகத்தின் கடன் தொகை அதிகரித்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.

தமிழகத்தின் கடன் தொகை 2006ம் ஆண்டு 57 ஆயிரம் கோடியாக இருந்தது. இந்நிலையில் கடந்த 13 ஆண்டுகளில் கடன் படுவேகமாக அதிகரித்து தற்போது 4 லட்சம் கோடியை நெருங்கி விட்டது இன்றைய பட்ஜெட் மூலம் தெரிய வந்திருக்கிறது.

நடப்பாண்டு தமிழக அரசின் கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக உள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழக அரசு 43 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளது. 31.3.2006 அன்று ஜெயலலிதா ஆட்சியை நிறைவு செய்த போது தமிழக அரசின் கடன் ரூ.57,457 கோடியாக இருந்தது.

அதன் பின் 2006ம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி அமைத்தது. 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடிவடையும் போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழக அரசின் கடன் ரூ.1,01,439 கோடியாக அதிகரித்தது.

2011ம் ஆண்டு மே மாதம் மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. 2011ம் தமிழகத்தின் கடன் ரூ.1,14,470 கோடியாக இருந்தது. இது 2014ம் ஆண்டில் ரூ.1,71,490 கோடியாக அதிகரித்தது. அதன்பின் 2015-ல் கடன் ரூ.1,95,290 கோடியாகவும், 2015-16 ல் கடன் ரூ.2,11,483 கோடி.

2017-18ஆம் நிதி ஆண்டு மொத்த கடன் 3,14,366 கோடியாக உயர்ந்தது. கடந்த. 2018-19ஆம் ஆண்டு ரூ. 3,55,845 கோடியாக இருந்தது. தற்போது தமிழகத்தின் கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் வட்டி கட்ட தமிழக அரசு கடன் வாங்கி வருகிறது.

2011-12-ம் நிதி ஆண்டு ரூ.9,233.40 கோடி வட்டி செலுத்திய தமிழக அரசு, 2016-17-ல் ரூ.19,999.45 கோடி ரூபாய் வட்டியும், இப்போது ரூ. 20 ஆயிரம் கோடிக்கு மேல் வட்டியும் அரசு கட்டி வருகிறது.

Recent posts

2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க சட்ட நிபுணர் நவநீதம் “நவி” பிள்ளை (Navanethem “Navi” Pillay) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது....
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, கனேடிய எழுத்தாளர் ஆன் கார்சன் (Anne Carson) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் கனடாவைச் சேர்ந்த இரண்டாவது இலக்கிய நோபல்...
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு, பிரெஞ்சு விஞ்ஞானி ஹென்றி பி. ககன் (Henri B. Kagan) மற்றும் ஜப்பானிய விஞ்ஞானி கென்சோ சோய் (Kenso...
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு, பெல்ஜியம்-அமெரிக்க துகள் இயற்பியலாளர் பிரான்சிஸ் ஹால்சன் (Francis Halzen) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் தென் துருவத்தில் உள்ள பனிக்கட்டியை...
Thamil Paarvai

உடலியல் அல்லது மருத்துவம் 2026 ஆம் ஆண்டு நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது: அமெரிக்காவின் கார்ல் டெய்செரோத் (Karl Deisseroth), ஜெர்மனியின் பீட்டர் ஹெகெமன் (Peter...
Thamil Paarvai

கனடிய பொறியாளர்கள் உருவாக்கிய சொந்த EV

கனடா தனது சொந்த மின்சார வாகனத்தை (EV) உருவாக்கிவிட்டது. இதை அமெரிக்கா எதிர்பார்க்கவே இல்லை. இது ஒரு சாதாரண கார் அல்ல – இது எதிர்காலத்தின் வாகனம்!...
Thamil Paarvai

கனடாவின் வட்டி விகிதம்

அடுத்த நடவடிக்கை உயர்வா? ஒரு ஆழமான பார்வை கனடாவின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் கனடா, கடந்த 2025 அக்டோபர் முதல் தனது கொள்கை வட்டி விகிதத்தை...
Thamil Paarvai

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் குழப்பத்திற்கு காரணமான இரு முக்கிய புள்ளிகள்

தியாக தீபம் திலீபன் எனும் பெயர் தமிழ் மக்களின் உள்ளங்களில் அகிம்சைப் போராட்டத்தின் உச்ச அடையாளமாகப் பதிந்துள்ளது. 1987ஆம் ஆண்டு, ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம்...
Thamil Paarvai

டொராண்டோ மேயர் தேர்தல் 2026: முக்கிய வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகள் வெளியீடு

டொராண்டோ நகர முதல்வர் தேர்தல் அக்டோபர் 26, 2026 அன்று நடைபெறவுள்ளது. தற்போதைய முதல்வர் ஒலிவியா சௌ, நகரசபை உறுப்பினர் பிராட் பிராட்போர்ட், முன்னாள் மத்திய அமைச்சர்...
Thamil Paarvai

Leave a Comment