சினிமா திரைவிமர்சனம்

அதை சரியாகச் செய் கடமையை செய் திரை விமர்சனம்

கணேஷ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் எஸ்ஜே சூர்யா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அருண் ராஜ் இசையமைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதைகளை சொல்ல வேண்டும் என வெற்றி பெறத் துடிக்கும் பல இயக்குனர்கள் நினைக்கிறார்கள். எப்படியோ கதையை உருவாக்கினாலும், அதை ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் சொல்வதற்கான வித்தைகளை கற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.

இந்தப் படத்தின் கதை எளிய கதையாக இருந்தாலும் ஒரு உணர்வுபூர்வமான கதை. அதை திரைக்கதையாக விறுவிறுப்பாக சொல்ல முடியாமல் தடுமாறியிருக்கிறார் இயக்குனர் வேங்கட ராகவன்.

சிவில் இஞ்சினியரான எஸ்ஜே சூர்யாவிற்கு திடீரென வேலை போய்விடுகிறது. அழகான காதல் மனைவி, அன்பான பெண் குழந்தை என மகிழ்ச்சியான குடும்பம் கவலைபடக் கூடாதென ஒரு அபார்ட்மென்ட்டில் செக்யூரிட்டி வேலைக்குச் செல்கிறார் சூர்யா. அந்த அபார்ட்மென்ட் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். அதைப் பற்றி அந்த பில்டரிடம் சொல்லிவிட்டு வரும் வழியில் விபத்தில் சிக்கி ‘ஸ்டூபர்’ என்ற மூளை சம்பந்தப்பட்ட நோயால் பாதிப்படைகிறார். ஏறக்குறைய கோமா போன்ற நிலை. திடீரென நினைவு வரும். அப்படி படுக்கையில் மருத்துவமனையில் இருப்பவர் ஐந்தே நாளில் இடிந்து விழும் அபார்ட்மென்ட் மக்களைக் காப்பாற்ற நினைக்கிறார். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

‘மாநாடு’ படத்திற்குப் பிறகு எஸ்.ஜே. சூர்யா மீது ரசிகர்களுக்கு தனி அபிமானம் வந்துவிட்டது. ஆனால், இந்தப் படத்தை அதற்கு முன்பாக நடிக்க ஒத்துக் கொண்டிருப்பார் போலிருக்கிறது. பொதுவாக ஹீரோக்கள் அவர்கள் நடிக்கும் படங்களின் கதைகளில் தலையிடுவார்கள் என்று சொல்வார்கள். இந்தப் படத்தின் ஹீரோவும், முன்னாள் இயக்குனருமான எஸ்ஜே சூர்யா ஏன் தலையிடாமல் விட்டுவிட்டார் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

சூர்யாவின் மனைவியாக யாஷிகா ஆனந்த். ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். யாஷிகா என்றாலே கிளாமர் எதிர்பார்த்து ரசிகர்கள் வருவார்கள். இந்தப் படத்தில் அதற்கும் வழியில்லை. ஏதோ, கிடைக்கும் கேப்பில் கொஞ்சம் கிளாமராக வருகிறார். அது அவரின் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இல்லை.

படத்தில் வின்சென்ட் அசோகன்தான் வில்லன் என நாம் நினைத்துக் கொண்டிருக்க, திடீரென ஒரு டுவிஸ்ட் அடிக்கிறது திரைக்கதை. கிளைமாக்சை சீக்கிரம் முடிங்கப்பா என இடைவேளைக்குப் பின் படம் சுற்றிச் சுற்றி போகிறது. சீரியசான இடங்களில் நகைச்சுவையாகவும், நகைச்சுவையான இடங்களில் சீரியசாகவும் காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர். மொட்டை ராஜேந்திரன் காமெடியை எல்லாம் ரசிக்க முடியவில்லை.

இந்தக் காலத்திய சினிமா எங்கோ போய்விட்டது. ஆனால், இப்படம் 90களின் படம் போல நம்மை பின்னோக்கி இழுக்கிறது.

கடமையை செய் – அதை சரியாகச் செய்

Recent posts

அடிமை எண்ணத்திற்கும் ஆதிக்க வர்க்கத்தினரை எதிர்த்தும் நடத்தப்படும் போர்

Captain Miller கேப்டன் மில்லர் நடிகர்கள்: தனுஷ், சிவ ராஜ்குமார் பிரியங்கா மோகன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்கம்: அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் டிரெய்லரில்...
Thamil Paarvai

பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்!

அயலான் விமர்சனம்.. பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்! நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு இசை: ஏ.ஆர். ரஹ்மான்...
Thamil Paarvai

Mission Chapter/ மிஷன் சாப்டர் 1

நடிகர்கள்: அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்கம்: ஏ.எல். விஜய் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி...
Thamil Paarvai

Merry Christmas/மெரி கிறிஸ்துமஸ்

Merry Christmas  மெரி கிறிஸ்துமஸ் நடிகர்கள்: விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே இசை: ப்ரீத்தம் இயக்கம்: ஸ்ரீராம் ராகவன் அந்தாதுன் படத்தை இயக்கி ஒட்டுமொத்த...
Thamil Paarvai

மாஸ் காட்டியதா? இல்லையா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘ஜெயிலர்’. பெரிய தயாரிப்பு நிறுவனம், எதிர்பார்ப்புகளை எகிற வைக்கிற இயக்குநர், இந்தியத் திரையுலகின் உச்ச...
Thamil Paarvai

பழைய கதை ஆனால் புதிய வடிவம். திருச்சிற்றம்பலம் திரை விமர்சனம்

உத்தமபுத்திரன் படத்தை இயக்கிய மித்ரன் ஆர். ஜவஹர் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்கியிருக்கும் படம்தான் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ், நித்யா மேனன்,...
Thamil Paarvai

விருமன்- திரை விமர்சனம்

2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், சூரி.உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா  இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் உறவுகளின்...
Thamil Paarvai

துக்ளக் தர்பார்

நடிகர் விஜய் சேதுபதி நடிகை ராஷி கண்ணா இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இசை கோவிந்த் வசந்தா ஓளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா சிறுவயதில் தாய், தந்தையை இழந்த...
Thamil Paarvai

டிக்கிலோனா

நடிகர் சந்தானம் நடிகை அனகா இயக்குனர் கார்த்திக் யோகி இசை யுவன் சங்கர் ராஜா ஓளிப்பதிவு அர்வி நாயகன் சந்தானம் 2020 ஆம் ஆண்டு தான் காதலித்த...
Thamil Paarvai

Leave a Comment