உலகம் செய்திகள்

அமெரிக்கா பாராளுமன்ற நீண்ட கால உறுப்பினர் ஜான் டிங்கெல் காலமானார்

நீண்டகாலம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த ஜான் டிங்கெல் காலமானார்.

அமெரிக்காவில் நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த ஜான் டிங்கெல் காலமானார். அவரது மறைவுக்கு அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜான் டிங்கெல். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர் முதன் முதலில் 1955ம் ஆண்டு பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் தொடர்ந்து 59 ஆண்டுகள் எம்பியாக பணியாற்றினார். குறிப்பிடத்தக்க சுகாதார திட்டங்கள் மற்றும் பல முக்கிய தாராளவாத சட்டங்கள் கொண்டு வருவதற்கு உந்துசக்தியாக இருந்தார்.

2015ம் ஆண்டு பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகும், முக்கிய விவகாரங்கள் தொடர்பாக தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், வயது மூப்பு சார்ந்த உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த ஜான் டிங்கெல் (92) காலமானார். மிச்சிகனின் டியர்பார்ன் நகரில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது.

அவரது மறைவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் வெள்ளை மாளிகை மற்றும் அனைத்து அரசுத்துறை கட்டிடங்கள், ராணுவ கட்டிடங்களில் தேசியக்கொடியை அரைக்கம்பத்திற்கு பறக்க விடும்படி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். பாராளுமன்றத்தில் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

ஜான் டிங்கெல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவரது மனைவி டெப்பி டிங்கெல் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜான் டிங்கெல் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் சமீபத்தில் பாராளுமன்ற கூட்டு அமர்வில் டிரம்ப் உரையாற்றியபோது, டெப்பி டிங்கெல் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recent posts

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

Leave a Comment