கனடா செய்திகள் புதிய செய்திகள்

அமைச்சர் பதவி விலகினார்…. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கு நெருக்கடி

கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கு நெருக்கடிகளை அதிகரிக்கும் வகையில், அவரது அமைச்சரவையில் இருந்து மற்றுமொரு அமைச்சர் பதவி விலகியுள்ளார்.

ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் ட்ரூடோ அரசாங்கம் தாமதம் காட்டுவதாக தெரிவித்து லிபரல் கட்சியின் பெண் அமைச்சர் ஜேன் பில்போட் விலகியுள்ளார்.

ட்ரூடோ அரசாங்கம் ஊழலுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளில் தனக்கு திருப்தியில்லை என பதவி விலகிய முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அண்மைகால செயற்பாடுகள் அரசியல் அமைப்புக்கு முரணாக காணப்படுவதாகவும், தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பொறுப்பற்ற தன்மை காணப்படுவதாகவும் ஜேன் பில்போட் கூறியுள்ளார்.

குறிப்பாக புதிய சட்டமா அதிபர் விவகாரத்தில் அரசாங்கம் நேர்மையான வழிமுறைகளை கடைபிடிக்கவில்லை எனவும், அதனால் தான் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து காணப்படுவதாகவும் அவர் தனது இராஜனாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

துரதிஷ்டவசமாக அரசாங்கம் சட்டமா அதிபர் விவகாரத்தை கையாண்டமை திருப்தியடைய கூடியவகையில் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜேன் பில்போட்டின் இராஜினாமா தனக்கு கவலை அளித்தாலும், கனேடியர்களுக்கு அவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியது என பிரதமர் ட்ரூடோ கூறியுள்ளார். அத்துடன், பில்போட்டின் சேவைக்கு பிரதமர் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பில்போட்டின் பதவி விலகல், ட்ரூடோவின் ஆட்சியில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரதமரின் அமைச்சரவையில் இருந்து விலகும் இரண்டாவது அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent posts

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

Leave a Comment