ஏனையவை விளையாட்டு

அரை இறுதி பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ்…..கெர்பர்

பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் தகுதி பெற்றார். அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்த தொடரின் கால் இறுதியில், உள்ளூர் நட்சத்திரம் வீனஸ் வில்லியம்சுடன் (36வது ரேங்க்) மோதிய கெர்பர் (8வது ரேங்க்), டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டில் 7-6 (7-3) என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய அவர் 7-6 (7-3), 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 36 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.மற்றொரு கால் இறுதியில் சுவிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக் (23வது ரேங்க்), செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவுடன் (5வது ரேங்க்) மோதினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் பெலிண்டா 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் 2 மணி, 16 நிமிடம் போராடி வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமுடன் மோதவிருந்த கேல் மான்பில்ஸ் (பிரான்ஸ்) காயம் காரணமாக விலகியதைத் தொடர்ந்து டொமினிக் தீம் அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதியில் கனடா வீரர் மிலோஸ் ரயோனிச் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் செர்பியாவின் மியோமிர் கெக்மனோவிச்சை வீழ்த்தினார்.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

2023 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி சோக கடலில் ரசிகர்கள்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடையக் காரணமே இந்திய அணிக்கு எதிராக போன ஒரு முடிவு தான். இந்தியா –...
Thamil Paarvai

ஐரோப்பிய கால்பந்து போட்டி – ஜெர்மனி, போர்ச்சுக்கல் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. 24 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்றுடன் லீக்...
Thamil Paarvai

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்- நியூசிலாந்து வெற்றிக்கு 139 ரன்கள் நிர்ணயித்தது இந்தியா

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும்...
Thamil Paarvai

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒலிம்பிக் தொடருக்கான சீருடையை அறிமுகம் செய்து வைத்தார்…

ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை டோக்கியாவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பதக்கம் வெல்வதற்காக இந்திய வீரர்கள்-...
Thamil Paarvai

இந்திய வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்செல்ல அனுமதி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி நாளை இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட்...
Thamil Paarvai

Leave a Comment