சமீபத்தில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் நடைபெற்றது. இந்தநிகழ்வில் இந்தியா மட்டுமில்லாது வெளிநாட்டிலிருந்தும் பலர் கலந்து கொண்டனர். அந்த வகையில் ஹிந்தியில் முன்னணியில் இருக்கும் ஷாருக்கான் உள்ளிட்ட பல நடிகர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டு ஆடிப்பாடினார்கள். ஆனால் அந்த திருமண நிகழ்ச்சியில் ஆகாஷ் அம்பானியால் ஷாருக்கான் அவமானப்படுத்தப்பட்டார் எனக்கூறி சமீபத்தில் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் பலர் உற்சாக நடனம் ஆடிக் கொண்டிருக்கும் கூட்டத்தில் ஷாருக்கானும், ரன்வீர் சிங்கும் நின்று பேசிக் கொண்டிருக்க அவர்களை கடந்து சென்று, தனது தாய் நீட்டா அம்பானியை அழைத்து வருகிறார் ஆகாஷ் அம்பானி.. வந்தவர் அங்கே நின்று கொண்டிருந்த ஷாருக்கானை கொஞ்சம் ஓரமாக தள்ளி நின்று பேசும்படி கைகளை காட்டுகிறார்.
ஷாருக்கானும் சற்று ஒதுங்கி நிற்க, அந்த இடத்தில் ஆகாஷ் அம்பானி தனது தாய் மற்றும் உறவினர்களுடன் நடனமாட ஆரம்பிக்கிறார்.. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க பிரசித்தி பெற்ற ஒரு மிகப்பெரிய நடிகரான ஷாருக்கானை, கோடீஸ்வரர் என்கிற மமதையில் ஆகாஷ் அம்பானி இப்படி செய்தது சரியல்ல என ஷாருக்கான் ரசிகர்கள், ஆகாஷ் அம்பானிக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.