சிறுகதை சிறுவர் பக்கம் பஞ்ச தந்திரம்

ஆசைக்கும் எல்லை உண்டு

ஒரு காட்டு அதிகாரி இருந்தார். அவருக்கு அழகான ஒரு மகள் இருந்தாள். ஒரு நாள் பட்டாம்பூச்சியைத் துரத்திக்கொண்டே அந்தப் பெண் காட்டிற்கு சென்றாள்.

அப்போது அவளை பார்த்த ஒரு சிங்கத்திற்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்துப்போய் விட்டது.

அதனால் காட்டு அதிகாரியிடம் சென்று, தனக்கு உங்கள் மகளைக் கல்யாணம் செய்து வையுங்கள் என்று கேட்டது.

அதிகாரி சிங்கத்தைப் பார்த்து பயந்தார். அதனால்,என்ன செய்யலாம் என்று யோசித்தார். அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

அவர் சிங்கத்தைப் பார்த்து, காட்டு ராஜா, காட்டு ராஜா என் மகள் ரொம்பப் பயந்தவள்.

உன்னுடைய பற்களையும் நகங்களையும் எடுத்துவிட்டால், அவள் பயப்படமாட்டால் அப்புறம், நான் அவளை உனக்குக் கல்யாணம் செய்து தருகிறேன்! என்று சொன்னார்.

அந்தப் பெண்மீது கொண்ட பிரியத்தால் சிங்கம் அதற்குச் சம்மதித்தது. காட்டு அதிகாரி, முதலில் அதன் பற்களைப் பிடுங்கினார். அதன்பின், நகங்களை வெட்டினார்.

பற்களையும் நகங்களையும் இழந்த சிங்கம், பலம் எல்லாவற்றையும் இழந்து ஆட்டுக் குட்டிபோல் இருந்தது!

உடனே காட்டு அதிகாரி ஒரு தடியை எடுத்து, சிங்கத்தை பலமாக அடித்து விரட்டினார். நடக்காத ஒரு விஷயத்திற்கு ஆசைப்பட்டால் நஷ்டம் நமக்குத்தான் என்று புரிந்துகொண்டு, தப்பித்தோம், பிழைத்தோம் என்று சிங்கம் ஓடியே போய்விட்டது!

நீதி : அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.

Recent posts

17 ஒட்டகங்களும் 3 மகன்களும்: முன்பொரு காலத்தில், பாலைவனத்திற்கு அருகிலுள்ள ஒரு தனிமையான கிராமத்தில் ஒரு முதியவர் தனது மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். அவரிடம் 17...
Thamil Paarvai

ஒரு வணிகரும் அவரது கழுதையும்:

வசந்த காலத்தின் ஒரு அழகான காலைப் பொழுதில், ஒரு வணிகர் உப்பை விற்பதற்காகச் சந்தைக்குக் கொண்டு செல்லத் தனது கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றினார். வணிகரும்...
Thamil Paarvai

அறிவற்ற குரங்குகள்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, மிகப் பெரிய, அடர்ந்த மற்றும் இருண்ட காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டிற்கு ஒரு குரங்கு கூட்டம் வந்தது. அது குளிர்காலமாக இருந்ததால்,...
Thamil Paarvai

மகிழ்ச்சியின் ரகசியம்

முன்னொரு காலத்தில், சாமுவேல், திமோதி மற்றும் ஜாண்டர் ஆகிய மூன்று சகோதரர்கள் காட்டிற்கு அருகில் இருந்த ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தனர். அவர்கள் நேர்மையானவர்களாகவும் கடின...
Thamil Paarvai

மிகவும் அழகான இதயம்

ஒரு நாள், மக்கள் கூட்டம் நிறைந்த ஓர் இடத்தில், ஒரு இளைஞன் சத்தமாகப் பேசத் தொடங்கினான். “மக்களே, என்னைப் பாருங்கள். உலகிலேயே மிக அழகான இதயம் என்னிடம்தான்...
Thamil Paarvai

உலகை அல்ல, உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

முற்காலத்தில், ஒரு மன்னரின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். செல்வம் செழித்திருக்க, எவ்விதத் துன்பமும் இன்றி மக்கள் வளமான வாழ்க்கையை வாழ்ந்ததால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக...
Thamil Paarvai

உதவாத நண்பர்கள்:

காட்டில் ஒரு முயல் வசித்து வந்தது. அதற்குப் பல நண்பர்கள் இருந்தனர்; தன் நண்பர்களைக் குறித்து அது பெருமை கொண்டிருந்தது. ஒரு நாள், காட்டு நாய்கள் சத்தமாக...
Thamil Paarvai

வலிமையானதா அல்லது பலவீனமானதா?

காட்டில் ஒரு செருக்குமிக்க தேக்கு மரம் இருந்தது. அது உயரமாகவும் வலிமையாகவும் இருந்தது. அந்த மரத்திற்கு அருகில் ஒரு சிறிய செடி வளர்ந்து வந்தது. தேக்கு மரம்,...
Thamil Paarvai

பேராசை பிடித்த சிறுவன்:

சாம் மற்றும் டாம் இருவரும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரட்டையர்கள். அவர்கள் பார்ப்பதற்கு எவ்வளவு ஒரே மாதிரியாக இருந்தார்கள் என்றால், அவர்களின் ஆரம்பக்கால நாட்களில் அவர்களது...
Thamil Paarvai

Leave a Comment