Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

இரண்டு ஆண்டுகள் காத்திருப்பு முடிவுக்கு வந்ததால் மகிழ்ச்சி முதல் ஆளாக ஓடோடி வந்த இளம்பெண்…

நேற்று (9.8.2021, திங்கட்கிழமை) நள்ளிரவு, அமெரிக்காவுடனான கனடாவின் எல்லைகள் திறக்கப்பட்டதும், கனடாவுக்குள் முதல் ஆளாக ஓடோடி வந்தவர்களில் Gina Chircoவும் ஒருவர்.

அமெரிக்காவின் மிச்சிகனில் வாழும் Ginaவும், ஒன்ராறியோவில் வாழும் அவரது காதலரான Tony Faneliயும், இரண்டாண்டுகளாக தங்கள் திருமணத்துக்காக காத்திருக்கிறார்கள்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அவர்களது திருமணம் தள்ளிக்கொண்டே போன நிலையில், கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டபின், தங்கள் குடும்பத்தினர் அனைவர் முன்னிலையிலும் திருமணம் செய்துகொள்வதற்காக காத்திருந்தார்கள் அவர்கள்.

அது மட்டுமில்லை, டிசம்பர் மாதம் Ginaவின் தாய் இறந்துபோனார்கள். தாய் இறந்தபோது தன்னவர் தன்னருகே இல்லை என்ற சோகம் Ginaவுக்கு. தனக்கன்பானவளின் தாய் இறந்தபோது, பக்கத்தில் ஆறுதலாக நிற்க தன்னால் இயலவில்லையே என்ற சோகம் Tonyக்கு…

ஆக, இப்போது துக்கமான ஒரு சம்பவத்துக்கு பிறகு, குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வுக்காக இரு குடும்பத்தினரும் இணைந்துள்ளனர்.

கனடா, முழுமையாக தடுப்பூசி பெற்ற அமெரிக்கர்களுக்கு எல்லையை திறந்துவிட்டதாலேயே இது சாத்தியமாகியுள்ளது.

இப்போது அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழையும் முழுமையாக தடுப்பூசி பெற்ற அமெரிக்கர்கள் மற்றும் வாழிட உரிமம் கொண்டவர்களுக்கு மட்டும் கனடாவுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கனடாவுக்குள் நுழைந்ததும் அவர்களுக்கு இனி தனிமைப்படுத்துதல் கிடையாது. ஆனால், அவர்கள் பயணம் புறப்படுவதற்கு முன் 72 மணி நேரத்திற்குள் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment