உலகம் செய்திகள்

இராணுவ ஆட்சி நடைபெறும் தாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு இளவரசி போட்டி

தாய்லாந்தில் 1932-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் ஆட்சி கவிழ்க்கப்படுவதும், இராணுவம் அரியணை ஏறுவதும் தொடர்கதையாக உள்ளது.

அந்த வகையில், கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் யிங்லக் ஷினவத்ரா அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. பிரதமரை பதவி விலகக்கோரி நடந்த போராட்டங்களில் பெரும் வன்முறை வெடித்தது.

இதற்கிடையில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில்  யிங்லக் ஷினவத்ராவின் பிரதமர் பதவியை பறித்து அந்நாட்டு அரசியல் சாசன கோர்ட்டு உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக வர்த்தக மந்திரி நிவாட்டம்ராங் பூன்சாங் நியமிக்கப்பட்டார். ஆனால் வலுவான தலைமை இல்லாததால் பெரும் அரசியல் குழப்பம் எழுந்தது.

இதையடுத்து அந்நாட்டின் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இராணுவ தளபதியாக இருந்த பிரயாட் சான்ஓசா பிரதமராக பொறுப்பேற்றார். நாட்டின் சட்டம், ஒழுங்கு சரியாகும் வரை மட்டுமே இராணுவ ஆட்சி அமலில் இருக்கும் என கூறிய நிலையில் அங்கு இராணுவ ஆட்சியே தொடர்ந்தது.

பொதுத்தேர்தலை நடத்தி ஜனநாயக ஆட்சியை கொண்டு வர வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் குதித்தனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்படுவது வாடிக்கையானது.

இந்த நிலையில் பொதுத்தேர்தலை நடத்தும்படி கடந்த மாதம் மன்னர் மகா வஜ்ரலோங்கோன் ஆணை பிறப்பித்தார். அதனை தொடர்ந்தது பிப்ரவரி மாதம் 24-ந்தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆனால் சில காரணங்களால் பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி 500 உறுப்பினர்களை கொண்டு தாய்லாந்து நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் (மார்ச்) 24-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

இராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் பொதுத்தேர்தல் என்பதால் அரசியல் கட்சியினரிடமும், தாய்லாந்து மக்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தாய்லாந்து இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று உப்லோரட்டனா மஹிடோல் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

முன்னாள் பிரதமர்கள் யிங்லக் ஷினவத்ரா, தாக்‌ஷின் ஷினவத்ரா ஆகியோருக்கு ஆதரவான தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு கட்சியின் வேட்பாளராக அவர் களம் இறக்கப்பட்டு உள்ளார்.

இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்த சில மணி நேரத்தில் தற்போதைய பிரதமர் பிரயாட் சான்ஓசா தானும் களத்தில் இருப்பதாக அறிவித்தார்.

இதனால் இந்த பொதுத்தேர்தல் முன் எப்போதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. உப்லோரட்டனா மஹிடோல் முன்னாள் மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜின் கடைசி மகளும், தற்போதைய மன்னர் மஹா வஜ்ரலோங்கோனியின் சகோதரியும் ஆவார்.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment