இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இறுதிக்கட்டப் போர் தொடர்பில் வெளிப்படை பேச்சு – சந்திரிக்கா!

இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் எவர் போர்க்குற்றம் இழைத்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படத்தான் வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சந்திரிகா அம்மையார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இந்தச் சந்திப்பின் பின்னர் இந்திய ஊடகங்கள் சில சந்திரிகாவிடம் நேர்காணல் செய்தன. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சியில் வைத்து போரின்போது இடம்பெற்ற போர்க்குற்ற சம்பவங்கள் தொடர்பில் உண்மையைக் கூறி மறப்போம் மன்னிப்போம் என்று தெரிவித்துள்ள நிலையிலேயே சந்திரிகா அம்மையாரின் கருத்தும் வெளியாகியுள்ளது.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“இலங்கை தொடர்பில் போர்க்குற்றங்களை முதன்மையாகக் கொண்டு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்ட பொறுப்புக் கூறல் விடயத்தை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. இதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த முறையும் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக நான் அறிகின்றேன்.

என்னைப் பொறுத்தவரையில் எவர் போர்க்குற்றம் இழைத்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ தண்டிக்கப்பட வேண்டும். அதனை ஆட்சியில் உள்ளவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.

இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா பெரும்பாலும் ஆதரிக்கும். கடந்த காலங்களில் இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருந்தது.
இலங்கைக்கு எதிராகச் செயற்படவேண்டும் என்று இந்தியா அதனை ஆதரிக்கவில்லை. இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகத்தின் மத்தியில் நல்ல பெயர் வரவேண்டும் என்பதற்காகவே இந்தியா ஆதரித்தது” – என்றார்.

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment