அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வலுவடைந்துள்ளது.
இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இந்த விபரம் வெளியாகியுள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 177.2357 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 173.3888 ரூபாவாக பதிவாகியுள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
கடந்த மாதங்களில் 184 ரூபாவை கடந்த இலங்கை ரூபாவின் பெறுமதி தற்போது வலுவான நிலையில் உள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.