டிப்ஸ்

உடல் எடையை குறைப்பது எப்படி? உருப்படியான டிப்ஸ்

இயற்கையான முறையில், திட்டமிடல்களோடு தீர்மானமாக செயல்பட்டால் உடல் எடை குறைவதோடு, நீண்ட ஆரோக்கியமான வாழ்வும் வசமாகும்.
எந்த முறையில் உடற்பயிற்சி செய்தால் உடல்எடை குறையும் என்று பார்க்கலாம்.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், முதலில் வாக்கிங் செல்ல ஆரம்பிக்கவேண்டும். ஆரம்பத்திலேயே அதிக தூரம் நடக்கக் கூடாது. இரண்டாவது வாரம், நடைப்பயிற்சி செய்யும் தூரத்தை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் படிப்படியாக அதிகரித்து, ஆறு மாதத்திற்குள், ஒரு மணி நேரத்தில் 2 முதல் 5 கிலோ மீட்டர் நடக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

எடை கட்டுக்குள் இருக்க, நடைப்பயிற்சி செய்யும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். டிரெட்மில்லில் நடப்பவர்கள், அந்தக் கருவியில்  உள்ள ஒவ்வோர்  இலக்கையும் படிப்படியாக முடிக்க முயற்சிக்க வேண்டும்.

உடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி தூண்டுகோல் மட்டுமே. நடைப்பயிற்சியுடன் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்தால் மட்டுமே, உடல் எடை நன்றாகக் குறையும். கார்டியோ பயிற்சிகள் (நடைப்பயிற்சி, ஜாகிங், சைக்கிளிங் ) 60 சதவிகிதமும் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் (புஷ் அப், ஸ்குவாட், பளு தூக்கும் பயிற்சிகள்) 40 சதவிகிதமும் செய்தால் உடல் எடை குறையும்.

அதிக அளவு உடற்பயிற்சி செய்தால், சீக்கிரமே உடல் எடை குறையும். ஆனால், சீக்கிரமாக உடல் எடையைக் குறைக்கும் முறை உடலுக்கு ஏற்றது அல்ல. வாழ்நாள் முழுவதும் அதிக அளவு உடற்பயிற்சி செய்ய முடியாது. எனவே, தினமும் 300 -500 கலோரிகளை எரிக்கும் அளவு உடற்பயிற்சி செய்தால் போதுமானது.

வெறும் செருப்பு போட்டுக்கொண்டு நடைப்பயிற்சி செய்யக் கூடாது. டிராக் ஸூட் , ஷூ அணிந்துதான் நடைப்பயிற்சி, ஜாகிங் செல்ல வேண்டும்.

எந்த நேரத்திலும் உடற்பயிற்சி செய்யலாம். எனினும் காலை வேளையில் உடற்பயிற்சி செய்வது உற்சாகம் தரும். ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 90 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி மேற்கொண்டால் போதுமானது. குடும்பத்தினருடன் ஒன்றாக நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது ஊக்கம் அளிக்கும்.

ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளத் திட்டமிடுபவர்கள், ஆர்வக்கோளாறாக எல்லா கருவிகளையும் பயன்படுத்தக் கூடாது. முதல் 10 நாட்கள் வெறும் நடைப்பயிற்சி மட்டுமே செய்ய வேண்டும். உடற்பயிற்சியாளர் அனுமதியுடன் மட்டுமே, பளு தூக்கும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

நடைப்பயிற்சி முடிந்த உடனே காபி, டீ குடிக்கக் கூடாது. 20 நிமிடங்கள் கழித்து தேவையான அளவு தண்ணீர் அருந்தலாம். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்த பின்னர், நன்றாகக் குளித்த பின்னர், உணவு அருந்தலாம்.

உடற்பயிற்சி செய்யும்போது, திடீர் தாகம் எடுத்தால் 20-30 மி.லி அளவுக்கு மட்டும் தண்ணீர் குடித்தால் போதுமானது. உடற்பயிற்சி செய்யும்போது, அதிக அளவு தண்ணீர் குடிக்கக் கூடாது.

இயற்கையான முறையில், திட்டமிடல்களோடு தீர்மானமாக செயல்பட்டால் உடல் எடை குறைவதோடு, நீண்ட ஆரோக்கியமான வாழ்வும் வசமாகும்.

Recent posts

உணவுக்கு முன்னும், பின்னும் தண்ணீர் குடிப்பது.. நல்லதா?.. கெட்டதா?..

தண்ணீர் குடித்தல்:உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் மிக இன்றியமையாதது. இதனால்தான் தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர்.ஆனால் உணவு உண்பதற்கு முன்பு...
Thamil Paarvai

ரம்புட்டான் பழத்தில் இத்தனை நன்மைகள் இருக்கா?

👉 பொதுவாகவே நாம் சாப்பிடும் உணவுகளாக இருந்தாலும் சரி பழமாக இருந்தாலும் சரி அனைவரும் சத்துகள் நிறைந்துள்ள பழத்தை தான் அதிகமாக எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். அதில் ஒன்று...
Thamil Paarvai

இரவு நேரங்களில் மரத்தின் அடியில் தூங்கக்கூடாது ஏன்?

😴 இரவு நேரங்களில் நாம் நல்ல உறக்கத்தை மேற்கொள்வது மிகவும் அவசியம். அதாவது 8 மணிநேரம் உறக்கம், கட்டாயம் தேவையான ஒன்றாகும். பெரும்பாலானோர் பகல் நேரத்தில் மரத்தின்...
Thamil Paarvai

தூய்மையான சமையலறையை பெறுவதற்கான வழிகள்

சுத்தமான சமையல் அறையில் சமைக்க வேண்டும் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். எனவே நீங்கள் சுத்தமான சமையல் அறையைப் பெற உங்களுக்காக சில குறிப்புகள். 👉 சமையலறையை சுத்தமாக...
Thamil Paarvai

முகப்பருக்கள் மறைய வேண்டுமா.?

♦ எலுமிச்சைச் சாறு, ரோஜா பன்னீர் சம அளவு எடுத்து அதனை கலந்து முகத்தில் பூசி அரை மணிநேரம் ஊறவைத்து, பின்னர் வெது வெதுப்பான நீரில் கழுவவும்....
Thamil Paarvai

ஆப்பிளின் மருத்துவப் பயன்கள்.

👉 ஆப்பிள் பழம் தினம் ஒன்று சாப்பிடுங்கள். மருத்துவரை நாடிச் செல்ல வேண்டியதில்லை. 👉 கலோரிகளில் குறைவானது ஆப்பிள். கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் பெரிதும் உதவுகிறது. 👉...
Thamil Paarvai

இயற்கையான முறையில் அழகு குறிப்புகள்.

நகத்தைப் பராமரிக்க : 👰 பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, உடைவதும் குறையும். பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வர நகங்களுக்கு...
Thamil Paarvai

வெறும் வயிற்றில் குடிக்க வேண்டியவை.

இன்றைய வாழ்க்கை முறையில் பலரும் சத்தான உணவுகளையும், ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருள்களையும் உணவாக எடுத்துக்கொள்வதில்லை. மேலும் கடைகளில் விற்கும் குளிர்பானங்களையும், உடலுக்கு கேடு விளைவிக்கும் பானங்களையும்...
Thamil Paarvai

தூய்மையான சமையலறையை பெறுவதற்கான வழிகள்.

👉சுத்தமான சமையல் அறையில் சமைக்க வேண்டும் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். எனவே நீங்கள் சுத்தமான சமையல் அறையைப் பெற உங்களுக்காக சில குறிப்புகள். 👉 சமையலறையை சுத்தமாக...
Thamil Paarvai

Leave a Comment