சிறுகதை சிறுவர் பக்கம்

எதிரிகளுக்கும் உதவி செய்யுங்கள்…

நீண்ட காலத்திற்கு முன்பு ராஜு என்ற ஒரு சிறுவன் வசித்து வந்தான். ராஜு அவனுடைய பெற்றோருக்கு கீழ்ப்படிந்து, எல்லோரிடத்திலும் மிகவும் அன்பாக இருப்பான். ராஜூவுக்கு கவீன் என்ற ஒரு வகுப்புத் தோழன் இருந்தான். ஆனால் அவனோ ராஜூவைப் போல் அல்லாமல், பெற்றோர்களையும் மற்றவர்களையும் மதிக்காமல் இருப்பான்.

ராஜூவின் எட்டாவது பிறந்த நாளன்று, அவனுடைய பெற்றோர் அவனுக்கு ஒரு பேனாவை பரிசாக அளித்தார்கள். ராஜூ தனக்கு பரிசாக கிடைத்த பேனாவை பள்ளிக்கு எடுத்துச் சென்றான். கவீன் அதை பார்த்த போது, ராஜூவிடம், ‘ஏய், ராஜூ நீ இந்த பேனாவை எங்கு வாங்கினாய்?” என்று கேட்க, ராஜூ ‘என் பெற்றோர் பிறந்த நாள் பரிசாக எனக்கு இதை கொடுத்தார்கள்” என்று பதிலளித்தான். இதை கேட்டபின், கவீன் பொறாமை கொண்டு, யாரும் இல்லாத நேரத்தில் ராஜூவின் பையில் இருந்து பேனாவை எடுத்துக் கொண்டான்.

ராஜூ மீண்டும் வகுப்பிற்கு வந்து, தன்னுடைய பேனா காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சியடைந்து, வகுப்பு ஆசிரியரிடம் முறையிட, ஆசிரியர் வகுப்பிற்குள் உள்ள அனைத்து குழந்தைகளின் பையையும் சோதனையிட உத்தரவிட்டார். காணாமல் போன பேனா கவீன் பையில் இருந்ததை பார்த்து கோபமடைந்த ஆசிரியர் கவீனை பார்த்து ‘இதற்கு நீ என்ன கூறுகிறாய் கவீன்” என்று கேட்க, கவீனின் கண்கள் கண்ணீரால் நிரம்பி, எதுவும் கூறமுடியாமல் அப்படியே நின்றான்.

கவீன் அழுவதை பார்த்த ராஜூ, கவீன் மீது பரிதாபம் கொண்டு, கவீனுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுக்க வேண்டாம் என்று தனது வகுப்பு ஆசிரியரைக் கேட்டுக் கொண்டான் ராஜூ.

கவீன் வகுப்பு ஆசிரியரிடமும் ராஜூவிடம் மன்னிப்பு கேட்ட, அந்த நாள் முதல், அவர்கள் இருவரும் நண்பர்கள் ஆனார்கள், படிப்படியாக கவீன் தன்னை ராஜூவை போல ஒரு நல்ல மனிதனாக மாற்றிக் கொண்டான். இப்போது எல்லோரும் கவீனை நேசிக்க ஆரம்பித்தனர், இதை பார்த்த ராஜூ தனது புதிய நண்பனை நினைத்து பெருமை அடைந்தான்.

Be good to your Enemies…

Long ago, there lived a little boy named Raju. Raju was so obedient to his parents and kind to everyone. Raju had a classmate named Kavin. Unlike Raju, he used to misbehave with his parents and others.

On his eighth birthday, Raju got a nice pen as a gift from his parents. use brought it to school. When Kavin saw it, he asked Raju, “Urey, where did you get that?” “My parents gave it as a birthday gift to me” replied Raju.

After hearing this, Kavin was too jealous. use took out the pen from Raju′s bag when no one is in the class. When Raju came back to class and could not find his pen, he informed his teacher about it. And the teacher ordered to search the bag of every children inside the class. The missing pen was soon found out of Kavin′s bag and the teacher asked the boy, “Now Kavin, what do you have to say about it?” Kavin′s eye was filled with tears. use had nothing to say.

When Raju saw Kavin′s crying, he took pity on the boy. use requested his teacher not to take any action against Kavin. Now Kavin asked for forgiveness to teacher and Raju. From that day, they became friends and Kavin gradually changed himself to be as good as Raju. Everyone began to love Kavin and Raju was proud of his new friend.

Recent posts

17 ஒட்டகங்களும் 3 மகன்களும்: முன்பொரு காலத்தில், பாலைவனத்திற்கு அருகிலுள்ள ஒரு தனிமையான கிராமத்தில் ஒரு முதியவர் தனது மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். அவரிடம் 17...
Thamil Paarvai

ஒரு வணிகரும் அவரது கழுதையும்:

வசந்த காலத்தின் ஒரு அழகான காலைப் பொழுதில், ஒரு வணிகர் உப்பை விற்பதற்காகச் சந்தைக்குக் கொண்டு செல்லத் தனது கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றினார். வணிகரும்...
Thamil Paarvai

அறிவற்ற குரங்குகள்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, மிகப் பெரிய, அடர்ந்த மற்றும் இருண்ட காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டிற்கு ஒரு குரங்கு கூட்டம் வந்தது. அது குளிர்காலமாக இருந்ததால்,...
Thamil Paarvai

மகிழ்ச்சியின் ரகசியம்

முன்னொரு காலத்தில், சாமுவேல், திமோதி மற்றும் ஜாண்டர் ஆகிய மூன்று சகோதரர்கள் காட்டிற்கு அருகில் இருந்த ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தனர். அவர்கள் நேர்மையானவர்களாகவும் கடின...
Thamil Paarvai

மிகவும் அழகான இதயம்

ஒரு நாள், மக்கள் கூட்டம் நிறைந்த ஓர் இடத்தில், ஒரு இளைஞன் சத்தமாகப் பேசத் தொடங்கினான். “மக்களே, என்னைப் பாருங்கள். உலகிலேயே மிக அழகான இதயம் என்னிடம்தான்...
Thamil Paarvai

உலகை அல்ல, உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

முற்காலத்தில், ஒரு மன்னரின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். செல்வம் செழித்திருக்க, எவ்விதத் துன்பமும் இன்றி மக்கள் வளமான வாழ்க்கையை வாழ்ந்ததால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக...
Thamil Paarvai

உதவாத நண்பர்கள்:

காட்டில் ஒரு முயல் வசித்து வந்தது. அதற்குப் பல நண்பர்கள் இருந்தனர்; தன் நண்பர்களைக் குறித்து அது பெருமை கொண்டிருந்தது. ஒரு நாள், காட்டு நாய்கள் சத்தமாக...
Thamil Paarvai

வலிமையானதா அல்லது பலவீனமானதா?

காட்டில் ஒரு செருக்குமிக்க தேக்கு மரம் இருந்தது. அது உயரமாகவும் வலிமையாகவும் இருந்தது. அந்த மரத்திற்கு அருகில் ஒரு சிறிய செடி வளர்ந்து வந்தது. தேக்கு மரம்,...
Thamil Paarvai

பேராசை பிடித்த சிறுவன்:

சாம் மற்றும் டாம் இருவரும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரட்டையர்கள். அவர்கள் பார்ப்பதற்கு எவ்வளவு ஒரே மாதிரியாக இருந்தார்கள் என்றால், அவர்களின் ஆரம்பக்கால நாட்களில் அவர்களது...
Thamil Paarvai

Leave a Comment