Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

கத்தோலிக்க பாரம்பரியத்தை தகர்த்த போப் பிரான்சிஸ்.

கத்தோலிக்க பாரம்பரியத்தை தகர்த்தெறிந்து, பெண் ஒருவரை ஆயர்களின் சினோடின் துணை செயலாளராக நியமித்துள்ளார் போப் பிரான்ஸிஸ். இந்த பதவியை வகிக்கும் முதல் பெண் மற்றும் வாக்களிக்கும் உரிமை பெற்ற முதல் பெண்மணியாகவும் அப்பெண் மாறியிருக்கிறார்.

தற்போது கார்டினல் மரியோ கிரேச் தலைமையில், செயல்பட்டு வரும் Synod of Bishops அமைப்பானது 1965 ஆம் ஆண்டில் போப் 6ம் பால்-ஆல் நிறுவப்பட்ட ஒரு நிரந்தர நிறுவனமாகும், இது இரண்டாம் வாடிகன் சபையின் ஆயர்களின் விருப்பத்திற்கு இணங்க உருவாக்கப்பட்டது. இது போப்பின் செயல்பாடுகளில் அவருக்கு உதவவும், ஆலோசணைகள் அளிப்பதிலும் உதவுகிறது.

இந்நிலையில் இவ்வமைப்பின் துணை செயலாளர்களாக Nathalie Becquart எனும் பெண்ணையும், Luis Marin என்பவரையும் போப் பிரான்ஸிஸ் நியமித்துள்ளார். இதுவரை பெண்கள் யாரும் இப்பொறுப்பில் நியமிக்கப்படாத நிலையில் வாடிகன் வரலாற்றில் முதல் முறையாக இது அமைந்துள்ளது.

இவ்வமைப்பின் தலைமைக்கு இதுவரை பெண் உறுப்பினர்களே இடம்பெறாத நிலையில் முதல் முறையாக Nathalie Becquart (வயது 52) நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக இச்சபையின் பொதுச்செயலாளர் Cardinal Mario Grech கூறுகையில், சமீப காலமாக சபையில் பெண்களின் வருகை அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பிரநிதித்துவம் அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். மேலும் Nathalie-க்கு வாக்களிக்கும் உரிமையும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

சகோதரி நத்தலி பெகார்ட் நியமனம் மற்றும் வாக்களிப்பில் பங்கேற்பதற்கான வாய்ப்புடன், ஒரு புதிய கதவு திறக்கப்பட்டுள்ளது என்று Cardinal Mario Grech தெரிவித்தார்.ஆயர்கள் மற்றும் கார்டினல்கள் ஆகியோரால் இந்த Synod of Bishops வழிநடத்தப்படுகிறது, மேலும் வாக்களிக்க முடியாத நிபுணர்களையும் இது உள்ளடக்கியது, இதன் அடுத்த கூட்டம் 2022 இலையுதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ளது

Recent posts

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

Leave a Comment